Peanut Chutney : ஆந்திரா ஸ்டைலில் வேர்க்கடலை சட்னி.. இட்லி, தோசை, சப்பாத்திக்கு பெஸ்ட் காம்பினேஷன்..
வேர்க்கடலையில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் மெக்னீசியம் அதிகளவில் உள்ளது.
உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடிய வேர்க்கடலையை வைத்து இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற வேர்க்கடலை சட்னியை வெறும் 5 நிமிடத்தில் சுலபமாக செய்து கொள்ளலாம்.
காலை மற்றும் இரவு நேரத்தில் பல வீடுகளில் சிற்றுண்டியாக இட்லி மற்றும் தோசை கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இதற்கு சைடிஸ்ஸாக சாம்பார், தக்காளி, வெங்காயம், தேங்காய் சட்னி போன்றவற்றை நாம் தயார் செய்து சாப்பிடுவோம். இதோடு மட்டுமின்றி இட்லிபொடி, உளுத்தம்பொடி போன்றவற்றையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனாலும் பெரும்பாலான மக்களுக்கு விதவிதமாகவும், சுவையாகவும் சட்னி தயார் செய்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிகளவில் இருக்கும். அப்படிப்பட்டவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கான சமையலில் கொஞ்சம் வேர்க்கடலை சட்னியை டிரை பண்ணிப்பாருங்கள்.
பொதுவாக சுவையில் தனி ரகம் கொண்ட வேர்க்கடலை சட்னியில் அதிக வைட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. மேலும், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் அற்புத சட்னியாகவும் வேர்க்கடலை உள்ள நிலையில், இந்த இந்த டேஸ்டி சட்னியை வெறும் 10 நிமிடங்களில் எப்படி தயார் செய்துவ என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
வேர்க்கடலை சட்னி செய்யத் தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 100 கிராம்
தேங்காய் துருவல் – 1/2 மூடி
மிளகாய் வத்தல் – 8
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு
கருவேப்பிலை – சிறிதளவு
வேர்க்கடலை சட்னி செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை எடுத்துக்கொண்டு கருகாமல் அதனை வறுத்துக்கொள்ளவும். ஒருவேளை நீங்கள் வறுத்த வேர்க்கடலையாக வைத்திருந்தால் மீண்டும் வறுக்க வேண்டியதில்லை.
இதனையடுத்து மிக்சியில் வேர்க்கடலை, துருவிய தேங்காய், மிளகாய் வத்தல், புளி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்சி ஜாரில் அரைத்த சட்னியை பாத்திரத்தில் மாற்றி எடுத்துக்கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவேண்டும்.
பிறகு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்துக்கொண்டு பின்னர் அரைத்துள்ள சட்னியை சேர்க்கவும்.
இப்போது சுவையான வேர்க்கடலை சட்னி தயாராகிவிட்டது. இதனை நீங்கள் இட்லி அல்லது தோசைக்கு சைட்டிஸ்ஸாக பரிமாறலாம்.
மேற்கண்ட முறைகளில் இனி நீங்களும் வெறும் 10 நிமிடங்களில் சுவையான வேர்க்கடலை சட்னியைக் கொஞ்சம் உங்களது வீடுகளில் செய்து பாருங்கள். குறிப்பாக நாம் உபயோகிக்கும் வேர்க்கடலையில் கொழுப்பு, புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் மெக்னீசியம் அதிகளவில் உள்ளது. எனவே பெரும்பாலான மக்கள் வேர்க்கடலையை ஆரோக்கியமான நொறுக்கு தீனியாகவும், ஆரோக்கியமான உணவுப்பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.