Rice Consumption : தினமும் சாதம் சாப்பிட்டே ஆகணும்னு நினைக்கிற ஆளா நீங்க? உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.. உஷார்
வெள்ளை அரிசி, அரிசி சார்ந்த பொருட்களை மூன்று வேளையும் உணவாக உட்கொள்ளும் போது இதய பாதிப்பு மற்றும் நீரழிவு நோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்றது
பொதுவாகவே பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் அதிக அளவிலான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகவே ஆய்வுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. அதிலும் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை பொறுத்த அளவில் வெள்ளை அரிசி வகை அதிகளவில் உணவாக உட்கொள்ளப்படுகிறது. சிலருக்கு ஒரு வேளை கூட வெள்ளை அரசிச் சோறு சாப்பிடவில்லை என்றாலே இரவில் தூக்கம் போகாது. அந்த வகையில் அரிசி உணவிற்கு பழகி இருக்கிறார்கள் மக்கள்.
இயற்கையாக கிடைக்கும் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் .ஆனால் சுத்திகரிக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட அரிசி வகைகளை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் .இந்த சுத்திகரிக்கப்பட்ட அரிசி வகைகளில் ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் வெறும் மாப்பொருளாக மட்டுமே அவை காணப்படுகின்றன.
இந்த சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசியும் அப்படித்தான் ,இதனை மூன்று வேளைகளிலும் ஏதாவது ஒரு வகையில் உணவாக உட்கொள்ளும் போது இதய பாதிப்பு மற்றும் நீரழிவு நோய் போன்றவற்றை ஏற்படுத்துகின்ற வாய்ப்பு இருக்கிறது என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
வெள்ளை அரிசியை பாலிஷிங் செய்யும் போது அதில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் பறிபோய்விடுகின்றன. இதற்கு பதிலாக நாம் சுத்திகரிக்கப்படாத இயற்கையிலான அரிசி வகைகளை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது .பொதுவாக சிவப்பரிசி என்ற ஒரு அரிசி வகை இருக்கிறது, இது நீரழி நோயை கட்டுப்படுத்துகிறது ,உடலில் அதிக கார்பாஹைட்ரேட் சேர்வதை தடை செய்கிறது. ஆகவே உணவில் வெள்ளை அரிசியை சேர்ப்பதை விட சிவப்பரிசியை சேர்ப்பது உடலுக்கு அதிக அளவிலான ஊட்டச்சத்தை வழங்கும்.
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசியில் அதிக அளவான கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் போது இதய பாதிப்பை ஏற்படுத்துவதாகவே மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானிய வகைகளை அதிகமாக சாப்பிடுவது இதய நோய் அபாயம் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
ஆகவே தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட அரிசியை பெரும்பாலும் மூன்று வேளையும் உண்பவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடல்நல பிரச்சனைகளை தடுப்பதற்காக மாற்று வழியைத் தேட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வெள்ளை அரிசி இதயத்திற்கு எவ்வாறு ஆபத்தை ஏற்படுத்துகிறது:
சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசியில் அதிக அளவு கார்போஹைத்ரேட் அதாவது மாவு பொருள் நிறைந்திருப்பதால் அது உடலினுள் சென்று சர்க்கரை நோயாக உருவெடுக்கிறது. அதிகளவான மாச்சத்தானது உடலில் சர்க்கரை அளவை அதிகரித்து நீரழிவு நோயை ஏற்படுத்துகிறது. ஆகவே இந்த அதிகளவான சர்க்கரையானது இதயத்தின் முதல் எதிரி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆகவே சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இந்த அபாயம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
உலகில் பெருமளவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முதல் காரணியாக இந்த இதய நோய் சர்க்கரை நோய் போன்றவை காணப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேபோல் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, உணவுகளில் சேர்க்கப்படும் எண்ணெய் வகைகள் என உடலுக்கு அதிக அளவில் தீங்கை விளைவிப்பதாக கூறப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட அரிசி உள்ளிட்ட தானிய வகைகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது இதய நோய் ஏற்படுத்துவதாகவும் ,அதே சமயம் சுத்திகரிக்கப்படாத முழு அரிசி தானியங்களை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதாக நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்
சுத்திகரிக்கப்பட்ட அரிசி சாப்பிடுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?
அரிசி மற்றும் தானிய வகைகள் மாவாக அல்லது பாலிஷ் செய்யப்பட்டு பதப்படுத்தப்படும் போது அவை ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன.
வெள்ளை அரிசி என்பது பதப்படுத்தப்பட்ட தானியங்களில் ஒன்றாகும், இதில் நார்ச்சத்து இல்லாமல் போய் கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படும். இது உணவுக்குப் பிறகு இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. காலப்போக்கில், உயர் இரத்த சர்க்கரை நோய் ஏற்பட்டு, இதய நரம்புகள் மற்றும் இரத்த நாளங்களில் தீங்கை விளைவிக்கிறது என கூறப்படுகிறது. அதிகரித்த கார்போஹைட்ரேட் ஆனது நரம்புகள் ,ரத்தநாளங்களில் கொழுப்பு அடைப்புகளை ஏற்படுத்த காரணமாக அமைகின்றன. அதனால் தான் வெள்ளை மாவு, வெள்ளை அரிசி போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க சுகாதாரத் துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆகவே உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கையான முறையில் கிடைக்கும் உணவு தானியங்களை தொடர்ந்து உட்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வெள்ளை அரிசியை பதப்படுத்தும் போது அதிலுள்ள தவிடு மற்றும் நோய் எதிர்ப்பு தன்மை போன்றன இழக்கப்படுகிறது. விட்டமின்கள், தாதுக்கள் ,ஏராளமான ஊட்டச்சத்து கலவை இந்த வெள்ளை அரிசியில் ஆரம்பத்தில் இருந்தாலும் பதப்படுத்தப்பட்ட பின்னர் அதன் இயல்பு தன்மையை இழந்து விடுகிறது. பொதுவாகவே உடலில் அதிகளவு கொழுப்பு இருப்பவர்கள் மற்றும் ஏனைய நோயாளர்கள் இந்த வெள்ளை உணவு வகைகளை முற்றிலுமாக உட்கொள்ளாமல், காய்கறிகளை அதிகம் சேர்த்து, அதிகமான பயன்பாட்டை தவிர்ப்பது என சிறந்தது என கூறப்படுகிறது. மைதா மாவிலான ரொட்டி வகை ,வெள்ளை உருளைக்கிழங்கு சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி, முழு கொழுப்புள்ள பால் போன்றவற்றை தவிர்க்க வலியுறுத்தப்படுகிறது
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )