Karela Tikki: பாகற்காயில் சுவையான ஸ்நாக்ஸ் செய்யலாமா? ஆரோக்கியமான கரேலா டிக்கி செய்வது எப்படி?
பாகற்காயைக் கொண்டு சுவையான ஆரோக்கியமான டிக்கி செய்து அசத்துவது எப்படி? என்பதை கீழே காணலாம்.
பாகற்காய் கசப்பு சுவை கொண்டது என்பதால் அதிகமானோர் இதை விரும்புவது இல்லை. ஆனால் இந்த கசப்பு சுவை நிறைந்த பாகற்காய்களை கொண்டு சுவையான ஸ்நாக்ஸ் செய்ய முடியும். பாகற்காயை கொண்டு சுவையான கரேலா டிக்கி செய்யலாம். இது வெங்காயம், கடலைப்பருப்பு, பனீர் மற்றும் மசாலாப் பொருட்களால் நிரம்பியது. கரேலா டிக்கி என்பது ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாகும். இதை தக்காளி சாஸ், க்ரீன் சட்னி போன்றவற்றுடன் வைத்து சாப்பிட நல்ல சுவையாக இருக்கும். வாங்க கரேலா எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 பெரிய பாகற்காய்கள், 1/2 கப் குறைந்த கொழுப்பு பனீர் துருவியது, 1 வெங்காயம், 2 பச்சை மிளகாய், 1 அங்குல இஞ்சி, 4 பூண்டு பற்கள், 1/2 கப் கொத்தமல்லி இலைகள், 1 கப் கடலை பருப்பு, 1 தேக்கரண்டி சாட் மசாலா, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி ஓமம், உப்பு- சுவைக்கேற்ப, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்.
செய்முறை
1.பாகற்காயை நன்றாகக் கழுவி, வெளிப்புறத் தோலை அகற்ற வேண்டும். இதை மிக்சி ஜாருக்கு மாற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையில் 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து 30 நிமிடம் அப்படியே வைத்து விட வேண்டு.
2.வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
3.பின்னர், அரைத்த பாகற்காய் கலவையில் இருந்து தண்ணீரைப் பிழிந்து, பாகற்காய் சக்கையை கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
4.பனீர் மற்றும் மேலே பட்டியலிடப்பட்டுள்ள மசாலா பொருட்களைக் கலந்து, பின்னர் ஓமம் மற்றும் கடலை பருப்பு சேர்த்து நன்றாக பிசைந்து எடுத்துக் கொண்டு உப்பை சரி பார்க்கவும். உப்பு குறைவாக இருந்தால், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
5. இப்போது இந்த மாவில் இருந்து சிறிய உருண்டைகளை எடுத்து வட்டமான டிக்கிஸ் செய்ய அவற்றை வட்டமான வடிவில் தட்டையாக தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயில் டிக்கியை வறுத்தெடுக்க தேவையான அளவு எண்னெய் சேர்த்து அவற்றை பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் பொறித்து எடுக்க வேண்டும். டிக்கிகளை பச்சை சட்னியுடன் சூடாக பரிமாறினால், சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க
&K - PAK Attack: அத்துமீறிய பாகிஸ்தான்; தக்க பதிலடி தந்த இந்தியா - காஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன?