(Source: Poll of Polls)
J&K - PAK Attack: அத்துமீறிய பாகிஸ்தான்; தக்க பதிலடி தந்த இந்தியா - காஷ்மீர் எல்லையில் நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீர் ஆர்னியா செக்டரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருக்கும் சர்வதேச எல்லையை ஒட்டிய ஆர்னியா செக்டாரில் இந்திய எல்லை பாதுகாப்பு படை நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் தாக்குதல் நடத்தியதாக எல்லைக் காவல் படை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் சுட்டுக்கொலை:
நேற்று இரவு 8.00 மணிக்குத் தொடங்கிய துப்பாக்கிச் சூடு பல மணி நேரம் தொடர்ந்தது, இதற்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
BSF Retaliates to Unprovoked Firing by Pak Rangers in Sector Jammu
— BSF (@BSF_India) October 27, 2023
On the evening of October 26, 2023, at about 2000 hrs, Pakistan Rangers resorted to unprovoked firing along the Indo-Pak International Border in Sector Jammu.
In response, BSF troops immediately retaliated to… pic.twitter.com/va7SlYXKrm
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு செய்த எல்லையோர காவல்ப்படை, ”அக்டோபர் 26, 2023, இரவு சுமார் 8 மணி அளவில், ஜம்மு பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பி.எஸ்.எஃப். (எல்லை பாதுகாப்பு படையினர்) வீரர்கள் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
துப்பாக்கிச்சூடு:
அதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் ரேஞ்சர்கள் எங்கள் அருகிலுள்ள பகுதிகளை குறிவைத்து துப்பாக்கிச் சூட்டை நீட்டித்தனர். சுமார் 9 மணியளவில், பாகிஸ்தான் ரேஞ்சர்கள் எல்லைப் புறக்காவல் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து மோட்டார் துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினர். அதில் சில குண்டுகள் அர்னியா நகரில் இருக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது, இதன் விளைவாக ரஜினி தேவி என்பவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.
சுமார் 10.40 மணி அளவில், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் பாகிஸ்தானில் இருந்து கனரக இயந்திர துப்பாக்கியை பயன்படுத்தி, எங்கள் பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தினர், அதற்குத் தகுந்த முறையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களால் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. நேற்று இரவு தொடங்கிய துப்பாக்கிச் சூடு இன்று அதிகாலை 2 மணி வரை நீடித்தது.
உயிரிழப்புகள் மற்றும் காயங்கள்:
நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் சி.டி. பசவ ராஜ் என்ற வீரருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த நபர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதுக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, அதே சமயம் சேதாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லை பாதுகாப்பு படையினர் எப்போதும் விழிப்புடன் உள்ளது. எல்லையில் ஊடுருவல் நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pedicure: சுத்தமான, அழகான பாதங்கள் வேண்டுமா? வீட்டிலேயே ஈசியா பெடிக்யூர் செய்வது எப்படி?