Gold rate today: 2வது நாளாக சரிந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவு குறைந்துள்ளதா.!! துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்
தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக 5 ஆயிரம் ரூபாய் அளவிற்கு குறைந்தது. இதனையடுத்து மீண்டும் உயர்ந்த தங்கம் விலை தற்போது குறைந்து வருவதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் மீது மக்களின் ஆர்வம்
தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக திருமண விஷேசங்கள், பண்டிகை காலங்களில் அதிகளவில் நகைகளை வாங்குவார்கள். தங்க நகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். குறிப்பாக தங்கத்தின் மீதான முதலீட்டால் அதிகளவில் லாபம் கிடைப்பதால் மக்கள் தக்கங்களை அதிகளவு வாங்கி வருகிறார்கள். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கும் உடனடியாக தங்கத்தை விற்பனை செய்வதற்கும், அடகு வைப்பதற்கும் பெரிய அளவில் உதவியாக உள்ளது. இந்த நிலையில் தான் தங்கநகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விலையானது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஏறி இறங்கும் தங்கம் விலை
அடுத்த 12 மாதங்களில் ஒரு சவரனுக்கு 40 முதல் 45 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு வருடத்தில் இரண்டு மடங்காக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் நடுத்தர வர்க்க மக்கள் தங்க நகைகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது நேற்று காலையில் ஏறிய நிலையில் மாலையில் குறைந்தது. ஜனவரி 7-ம் தேதியான நேற்று காலையில், தங்கத்தின் விலை கிராமிற்கு 40 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,870 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 320 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 1,02,960 ரூபாய்க்கும் விற்பனையானது.
மாலையில் திடீரென தங்கத்தின் விலை குறைந்தது. ஒரு கிராமிற்கு 70 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 560 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 1,02,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலை குறைந்தது
இதனையடுத்து இன்று காலையில் தங்கத்தின் விலையானது மீண்டும் குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 2ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மற்றும் இன்று மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் குறைந்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவிற்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்நுள்ளது.





















