மேலும் அறிய

Healthy gulab jamun: குலாப் ஜாமுன் பிடிக்குமா? ஆரோக்கியமான முறையில் செய்து அசத்துங்க!

Healthy gulab jamun: ஆரோக்கியமான குலாப் ஜாமுன் ரெசிபி வகைகள் பற்றி இங்கே காணலாம்.

குலாப் ஜாமுன் ஆரோக்கியமாக செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? இதோ சர்க்கரை வள்ளிக்கிழங்கு வைத்து செய்து அசத்துங்க. 

சர்க்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமுன்:

என்னென்ன தேவை?

வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 3/4 கப்

துருவிய பனீர் - 1/2 கப்

அரைத்த ஓட்ஸ் - 1/2 கப்

நெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேகவைத்து எடுக்கவும். பனீரை துருவி வைக்கவும். அரை கப் ஓட்ஸ் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுக்கவும். 

இப்போது ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, துருவிய பனீர், ஓட்ஸ் பொடி உப்பு, நெய் சேர்த்து நன்றாக குலாப் ஜாமுன் தயாரிக்கும் அளவிற்கான மாவாக தயாரிக்கவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டி, ஏர் ஃப்ரையரில் 170 டிகிரி வெப்பநிலையில்15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் தயார். 

இதற்கு நாட்டு சர்க்கரை பயன்படுத்தி ஜூரா தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் நாட்டு சர்க்கரை சேர்த்து, ஒன்றரை கப் தண்ணீர், 5-6 ஏலக்காய், சிறிதளவு ரோஸ் வாட்டர் எல்லாவற்றையும் நன்றாக கொதித்ததும் அதில் குலாப் ஜாமுன் உருண்டைகளை சேர்த்து, இனிப்பில் நன்றாக ஊறியதும் சுவையான குலாப் ஜாமுன் தயார்.

View this post on Instagram
 
A post shared by Adhya S (@auraartofhealthyliving)

கேரட் குலாப் ஜாமுன்

என்னென்ன தேவை?

  • கேரட் - 6
  • சர்க்கரை - 2 கப்
  • ஏலக்காய் - 2
  • நெய் - ஒரு கப்
  • பால் - ஒரு கப்
  • ரவை - ஒரு சிறிய கப்
  • பால் பவுடர் -ஒரு கப்
  • எண்ணெய் - பொரிப்பதற்கு
  • பிஸ்தா - சிறிதளவு

செய்முறை:

முதலில் குலாப் ஜாமுன்களை ஊறவைக்க சர்க்கரை பாகை தயாரித்து ஆறவைக்க வேண்டும்.  ஒரு டம்ளர் தண்ணீரை அடுப்பில் கொதிக்க விட வேண்டும். கொதிவந்ததும் அதில் ஒரு கப் சர்க்கரை மற்றும் ஏலக்காயை பொடித்து சேர்க்க வேண்டும். சர்க்கரை கரைந்து பாகு போல பதம் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி தனியே ஆறவிட வேண்டும். 

இப்போது ஜாமூன்களை தயாரிக்கலாம். கேரட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகாளாக்கி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து எடுக்க வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு கப் நெய் சேர்த்து அதில் கேரட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து ஒரு கப் பால் சேர்த்து அதில் கேரட்டை வேகவிடவேண்டும். இப்போது ரவையை சேர்க்கலாம். நன்றாக கிளற வேண்டும். கேரட், ரவை இரண்டும் நன்றாக வெந்துவிடும். உதிரியாக இருக்கும்போது பால் பவுடரை அதில் சேர்த்து கிளற வேண்டும்.

பால் பவுடர் சேர்த்ததும் அது நன்றாக இறுகிவிடும். உருண்டைகளாக உருட்ட ஏற்ற அளவில் மாவு இருக்கும். அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக 10 நிமிடங்கள் ஆறவிடவும். 

இப்போது, அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்றாக சூடாவதற்குள் குலாப் ஜாமூன்களை சிறிய உருண்டைகளாக தயாரிக்கவும். எண்ணெய் சூடானதும், உருண்டைகளை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.கொஞ்சம் சூடு ஆறியதும் ஜாமூன் உருண்டைகளை சர்க்கரை பாகில் சேர்த்து 1-2 மணிநேரம் ஊற வைத்து எடுத்தால் சுவையான கேரட் குலாப் ஜாமுன் தயார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget