Chilli Paneer Recipe : சில்லி பன்னீர் ரெசிப்பி.. ஈஸியா ப்ரோட்டீன் கிடைக்க இதை ட்ரை பண்ணுங்க..
நீங்கள் எடைகுறைக்க முயற்சி செய்பவர் என்றால் உங்களுக்கு ஏற்ப ஆரோக்கியமான முறையில் இதனை தயார் செய்யலாம்
சீன உணவுக்கு என்று இந்தியாவில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதனாலேயே தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் சீன உணவுத் தயாரிப்புக் கூடங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. அடிக்கடி ஸ்விக்கி சோமாட்டோக்களில் சீன உணவு ஆர்டர் செய்பவர்களும் நம்மிடையே உண்டு. ஆனால் அப்படி அடிக்கடி சாப்பிடலாமா என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஒவ்வொரு நாளும் தாராளமாகச் சாப்பிடலாம் என்பதுதான் உண்மை. நூடுல்ஸ், சில்லி சிக்கன் மற்றும் சில்லி பனீர் என்பது பொதுவாக அனைவரின் ஆர்டர் சாய்ஸாக உள்ளது.ஆனால் எடைக்குறைப்பு நடவடிக்கையில் இருக்கும் ஒருவர் இதனை உண்ணலாமா? நிச்சயம் இதுபோன்ற உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்கிற எண்ணம் ஏற்படும். இருப்பினும் அதன் சுவைக்கு நாவைக் கட்டுப்படுத்தவும் முடியாது... என்னதான் செய்யலாம்? நீங்கள் எடைகுறைக்க முயற்சி செய்பவர் என்றால் உங்களுக்கு ஏற்ப ஆரோக்கியமான முறையில் இதனை தயார் செய்யலாம் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்.
View this post on Instagram
எடை குறைப்புக்கு பனீர் நல்லதா? உடல் எடையை குறைக்க எத்தனிப்பவர்களுக்கு பனீர் சிறந்த தேர்வு. இதில் புரோட்டீன் நிறைந்துள்ளது.பொதுவாகவே புரத உணவுகளுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் குணம் உண்டு. அந்த குணம் பனீருக்கும் உண்டு. இதனால் அதிக்கப்படியாக உணவு உண்ணும் எண்ணத்தைத் தடுக்கிறது. இதில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால் இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.அது சரி, பொதுவாக சீன உணவுகளை நாம் ஆரோக்கியமற்றதாக கருதுவதால், இந்த உணவு எப்படி ஆரோக்கியமானது என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். எதையுமே ஆரோக்கியமான முறையில் சமைக்கும்போது அதுதானாகவே உடலையும் பாதுகாக்கத் தொடங்குகிறது..இதோ! உங்களுக்கான ஹெல்த்தி சில்லி பனீர் ரெசிபி!
சில்லி பனீர் செய்ய, முதலில் பனீர் துண்டுகளை நெய்யில் வறுக்கவும். அதை ஒரு புறம் வைத்துவிட்டு பின்னர் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் துண்டுகளை சிறிது நெய்யில் பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து அதனுடன் வதக்கவும். இதனுடன் அரை தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் தக்காளி சாஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். நன்கு கலந்து வெங்காயம் மற்றும் குடைமிளகாய் மென்மையாகும் வரை வதக்கவும். பரிமாறும் முன் பனீர் சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்படுபவர்கள் இதில் சாட் மசாலா அல்லது வேறு எந்த மசாலாவையோ சேர்க்கலாம்.