News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Beetroot Cutlet: இரும்புச்சத்து நிறைந்த பீட்ரூட்டில் சுவையான கட்லெட் செய்யலாம் - செய்முறை இதோ!

சுவையான பீட்ரூட் கட்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 1 , உருளைக்கிழங்கு - 3 , வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) , பச்சை பட்டாணி - 2 டேபிள் ஸ்பூன் , இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது) , பூண்டு - 1 டீஸ்பூன் (துருவியது) , மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் , மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் , கரம் மசாலா - 1/4 டீஸ்பூன் , சேமியா - 1/4 கப் , பிரட் தூள் - 3/4 கப் , உப்பு - சுவைக்கேற்ப , மைதா - 2-3 டேபிள் ஸ்பூன் , கொத்தமல்லி - சிறிது, எண்ணெய் - 4-5 டேபிள் ஸ்பூன்.

செய்முறை

உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட்டை குக்கரில் சேர்த்து, அதில் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் வரும் வரை வேகவைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கையும், பீட்ரூட்டையும் வெளியே எடுத்து ஆற வைக்கவும்.

பின்னர் சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து வேக வைத்து, இறக்கி தண்ணீரை வடித்து விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதற்கிடையே பச்சை பட்டாணியை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

உருளைக்கிழங்கை மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட்டை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும், இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

பின் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பீட்ரூட், சேமியா, மசாலா பொடிகள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, 2 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கவும்.  கொத்தமல்லியைத் தூவி கிளறி ஆற வைக்க வேண்டும்.

பிறகு அந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக கட்லெட் வடிவில் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

இதற்கிடையே ஒரு கிண்ணத்தில் மைதா, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

வேறொரு தட்டில் பிரட் தூளை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பின் தட்டி வைத்துள்ள கட்லெட்டை எடுத்து மைதாவில் பிரட்டி பின், பிரட் தூள்களில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், தயார் செய்து வைத்துள்ள கட்லெட்டை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் கட்லெட் தயார். 

Published at : 11 Feb 2024 01:50 PM (IST) Tags: beetroot cutlet cutlet procedure beetroot cutlet procedure

தொடர்புடைய செய்திகள்

Beetroot Carrot Soup: சுவையான பீட்ரூட் - கேரட் சூப் செய்வது எப்படி?இதோ ரெசிபி!

Beetroot Carrot Soup: சுவையான பீட்ரூட் - கேரட் சூப் செய்வது எப்படி?இதோ ரெசிபி!

Travel With ABP: ஆட்டையாம்பட்டி டூ அமெரிக்கா... இது ஒரு முறுக்கின் கதை!!! சேலம் வந்தா மிஸ் பண்ணிடாதீங்க.

Travel With ABP: ஆட்டையாம்பட்டி டூ அமெரிக்கா... இது ஒரு முறுக்கின் கதை!!! சேலம் வந்தா மிஸ் பண்ணிடாதீங்க.

Summer Veg Pasta Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க;பாஸ்தா இப்படி செய்து பாருங்க!

Summer Veg Pasta Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க;பாஸ்தா இப்படி செய்து பாருங்க!

Mango Phirni: ஸ்வீட் க்ரேவிங்ஸ் - இதோ மாம்பழ பிர்னி செய்து சாப்பிடுங்க! ரெசிபி!

Mango Phirni: ஸ்வீட் க்ரேவிங்ஸ் - இதோ மாம்பழ பிர்னி செய்து சாப்பிடுங்க! ரெசிபி!

Corn Cheese Pasta:பாஸ்தா பிரியரா? இப்படி செய்து பாருங்க - ஸ்வீட்கார்ன் மட்டும் போதும்!

Corn Cheese Pasta:பாஸ்தா பிரியரா? இப்படி செய்து பாருங்க - ஸ்வீட்கார்ன் மட்டும் போதும்!

டாப் நியூஸ்

BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!

BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!

”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!

”ஆந்திராவில் பதற்றம்” : ஆந்திர ஆளுநருக்கு ஜெகன்மோகன் ரெட்டி வேண்டுகோள்!

Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?

Breaking News LIVE: ஜூன் 9ல் பிரதமராக பதவியேற்கிறார் நரேந்திர மோடி?

“எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து விளக்கம்

“எல்லாத்துக்கும் அண்ணாமலைதான் காரணம்” - உண்மையை உடைத்து பேசிய வேலுமணி தோல்வி குறித்து  விளக்கம்