Food Tips: சுவையான கோதுமை ரவா உப்புமா செய்வது எவ்வாறு? ஈசியான ரெசிபி ரெடி...!
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு தான் இந்த கோதுமை ரவா உப்புமா. பொதுவாக உப்புமா என்றாலே எல்லோரது வீடுகளிலும் ஒன்று காலை உணவாக அல்லது இரவு உணவாக இருக்கும். ஆனாலும் வீடுகளில் மிகவும் இலகுவாகவும் ,எளிமையாகவும் செய்யக்கூடிய இந்த உப்புமாவை தொடர்ந்து உண்பவர்களுக்கு இது சற்று கசப்பானதாக தான் இருக்கும். ஆனால் புதிதாக இதன் சுவையை அறிய விரும்புபவர்களுக்கு மிகவும் இனிமையானதாக தான் இருக்கும். ஆகவே ரவா உப்புமாவிலிருந்து சற்று வித்தியாசமாக கோதுமை ரவா உப்புமாவை நாம் முயற்சி செய்து பார்க்கலாம்.
கோதுமை ரவை உப்புமா சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அவசரமாக வேலைக்கு செல்பவர்கள் காலை வேளையில் மிகவும் எளிதாக செய்யக் கூடியதும் ,ஆரோக்கியமான ஒரு உணவாகவும் இந்த கோதுமை ரவா உப்புமா இருக்கிறது. இந்த உப்புமாவில் மேலதிகமாக சிறிதாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து சமைக்கும் போது உப்புமாவை வெறுப்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
சாதாரணமாக நாம் உப்புமா செய்யும் ரவையுடன் இந்த கோதுமை ரவாவை ஒப்பிடும் போது இது சுத்திகரிக்கப்படாததால் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மிகவும் எளிமையான, இலகுவான, நிறைவான, ஆரோக்கியமான ஊட்டச்சத்து மிக்க காலை உணவு வேண்டும் என்றால் எளிதில் நாம் செய்யக் கூடியது இந்த கோதுமை ரவா உப்புமா தான். இதில் கேரட், பீன்ஸ், கிழங்கு போன்ற காய்கறிகளையும் சேர்த்து சமைக்கும் போது இதன் சுவை மிகவும் அதிகமாக இருக்கும். இந்த கோதுமை ரவை உப்புமாவை காரமாகவும் சாப்பிடலாம், அல்லது அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்தும் இதனை சாப்பிடலாம்.
இப்படி ஆரோக்கிய நற்பயன்களை கொண்டுள்ள கோதுமை ரவை உப்புமா செய்வது எவ்வாறு என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
1 கப் வறுத்த கோதுமை ரவா
1 வெங்காயம்
4 பச்சை மிளகாய்
2 தேக்கரண்டி நறுக்கிய கேரட்
2 தேக்கரண்டி பச்சை பட்டாணி
3 கப் தண்ணீர்
உப்பு - தேவைக்கேற்ப
½ தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
2 தேக்கரண்டி கடலைப் பருப்பு
2 தேக்கரண்டி எண்ணெய்
1 துளிர் கறிவேப்பிலை
செய்முறை:
முதலில் ரவாவை ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 2 நிமிடம் வரை மிதமான தீயில் வறுக்கவும். ரவாவை வறுக்கும் போது அதில் வரும் நறுமணம் மிகவும் நன்றாக இருக்கும்.
கடாயில் எண்ணெயுடன் விட்டு சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவற்றைத் தாளிக்கவும். பருப்பு பொன்னிறமாக மாறும் வரை கிளறவும்.
பின்னர் கறிவேப்பிலை , வெட்டிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து ,வெங்காயம் நன்கு வதங்கும் வரை சமைக்கவும்.
தொடர்ந்து வெட்டிய காய்கறிகளைச் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தண்ணீர் ஊற்றி சற்று கொதிக்க விடவும்.
கொதித்ததும் கோதுமை ரவாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கிளறவும். உப்பு சேர்த்து, தண்ணீர் அளவு குறையும் வரை மற்றும் உப்புமா பதத்துக்கு வரும் வரை மிதமான தீயில் வைக்கவும்.
பத்து நிமிடங்களுக்கு மூடி வைத்து முழுவதுமாக தண்ணீர் வற்றும் வரை வைத்தால் மிகவும் மென்மையான உப்புமா கிடைக்கும்.
தேவையானால் சுவைக்காக இறுதியில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயைச் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )