Almonds : பாதாமை ஊறவைங்க.. தோல் உரிச்சு சாப்பிடுங்க.. இவ்வளவு மேஜிக் நடக்குமா? கொஞ்சம் படிங்க..
இதயம், எலும்புகளை வலிமையாக்க முயற்சித்தால் அதற்கும் பாதாம் உதவும். பாதாமில் உள்ள பல நன்மைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
![Almonds : பாதாமை ஊறவைங்க.. தோல் உரிச்சு சாப்பிடுங்க.. இவ்வளவு மேஜிக் நடக்குமா? கொஞ்சம் படிங்க.. Control Blood Sugar Levels Lose Weight Manage Blood Pressure And Much More With Almonds Know 7 Notable Benefits Almonds : பாதாமை ஊறவைங்க.. தோல் உரிச்சு சாப்பிடுங்க.. இவ்வளவு மேஜிக் நடக்குமா? கொஞ்சம் படிங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/1d25e0d8e75fe4c45444b298e8aa4f661669524168012109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய நட்ஸில், பாதாம் மிகவும் பரவலாக அனைவரும் விரும்பும் ஒன்றாகும். அவற்றில் நிறைய நன்மை தரும் கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் அவை மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாக உள்ளன. உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாதாம் பருப்பு மக்களால் உட்கொள்ளப்படுகிறது. பாதாம் உங்கள் உடலுக்கும் உங்களுக்கும் நல்ல ஊட்டச்சத்து அளிக்கும் சக்திவாய்ந்த ஆதாரமாகும். இதயம், எலும்புகளை வலிமையாக்க முயற்சித்தால் அதற்கும் பாதாம் உதவும். பாதாமில் உள்ள பல நன்மைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
- இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது
பாதாமில் நார்ச்சத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்புகள் அதிகம் ஆனால் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு அவை சிறந்தவை ஆகும். பாதாமில் குறிப்பிடத்தக்க வகையில் மெக்னீசியம் உள்ளது. இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவது உட்பட 300 க்கும் மேற்பட்ட உயிரியல் செயல்பாடுகளுக்கு மெக்னீசியம் தாது உதவும். மெக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளும்போது, நீரிழிவு இல்லாதவர்கள் இன்சுலின் எதிர்ப்பில் பயனடைகிறார்கள்.
- ஒரு வசதியான மற்றும் நிறைவான சிற்றுண்டி
சாப்பிடுவதற்கு நிறைய நேரம் இல்லாதபோது, பாதாம் விரைவாகவும், நிறைவாகவும் வைக்க உதவும். எடுத்துச் செல்லவும் வசதியாக இருக்கும், பயணத்திலேயே சாப்பிடலாம். பாதாம் உட்கொள்வது நாம் உட்கொள்ளும் அதிகப்படியான உணவைக் குறைக்கும் மற்றும் பசியை தீர்க்கும், எனவே இது எடை அதிகரிப்பதைத் தடுப்பது மட்டுமின்றி, குறைப்பதிலும் செயல்படுகிறது.
- இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவுகிறது
பாதாம் பருப்பில் உள்ள மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்று உயர் இரத்த அழுத்தம். நீங்கள் அதிக எடையுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மெக்னீசியம் இல்லாதது உயர் இரத்த அழுத்தத்தை தரும். மெக்னீசியம் பற்றாக்குறைக்கு சிகிச்சையளிப்பது இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
- ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்
ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த ஆதாரம் பாதாம். ஆக்சிஜன் குறைந்தால் அவை உயிரணுக்களில் உள்ள மூலக்கூறுகளுக்கு தீங்கு விளைவிக்கும். புற்றுநோய் போன்ற நோய்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தும். எனவே பாதாமை உட்கொள்வதன் மூலம் இதுபோன்ற நோய்கள் விரைவாக வளர்வதை தடுக்கலாம்.
- கொலஸ்ட்ராலை குறைக்கிறது
குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL), என்பது கொலஸ்ட்ராலின் தீங்கு விளைவிக்கும் வடிவமாகும். பாதாம் பருப்புகளை உட்கொள்ளும் போது, இவை குறைக்கப்பட்டு, ஆரோக்கியமான வடிவமான உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) அதிகரிக்கிறது.
- சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
இயற்கையாகவே கிடைக்கும் பாதாம் எண்ணெயுடன், தினசரி உட்கொள்ளும் வைட்டமின் ஈ-யில் பாதியையும், கணிசமான அளவு மெக்னீசியம் மற்றும் ரிபோஃப்ளேவின் அளவையும் வழங்குகின்றன. வறண்ட அல்லது உதிர்ந்த தோல் மற்றும் பிற தோல் பிரச்சினைகள் இருந்தால் பாதாம் பயனுள்ளதாக இருக்கும்.
- எடையை நிர்வகிக்க உதவும்
பாதாமில் நிறைய கலோரிகள் உள்ளன, ஆனால் அவை உண்மையில் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும். அதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து காரணமாக, கொஞ்சம் உட்கொண்டதுமே நிறைவான உணர்வு கிடைக்கும். அது பசியைத் தணிக்கும்போது வேறு உணவுகளில் இருந்து கிடைக்கும் கலோரிகளை குறைக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)