News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்! ப்ளம் கேக் இப்படி செய்து பாருங்க - சூப்பரா இருக்கும்

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் நிலையில் ப்ளம் கேக் எப்படி எளிமையாக செய்வது என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் நினைவுக்கு வரும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பலகாரம் , பிரியாணி உள்ளிட்டவை செய்தாலும் கேக் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். கேக்கில் ஸ்ட்ரா பெர்ரி, மேங்கோ, சாக்லேட், வெண்ணிலா என பல்வேறு வகைகள் உள்ளன.

இருந்தாலும் ப்ளம் கேக் கிறிஸ்துமஸ் சமயத்தில் அதிகமாக செய்யப்படுகிறது. இந்த ப்ளம் கேக்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க ப்ளம் கேக் எப்படி செய்வதென்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

முட்டை - 3

மைதா -100 கிராம்

பட்டர் - 100 கிராம்

சர்க்கரை - 100 கிராம்

கார்ன் பிளார் - 2 ஸ்பூன்

ஓமம் தூள் - 1/2 ஸ்பூன்

திராட்சை - 30 கிராம்

சுக்குத் தூள் – 1/2 ஸ்பூன்

பால் - 1/4 கப்

முந்திரி,பிஸ்தா,வால்நட்- ஒரு கைப்பிடி அளவு

செர்ரி பழம் – 50 கிராம் 

செய்முறை:

முதலில் முந்திரி, பிஸ்தா, வால்நட் ஆகியவற்றை நன்றாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையையும் மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு சோள மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதில் பால் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.  பின்பு ஒரு  பாத்திரத்தினை அடுப்பில் வைத்து, அதில் அந்த கலவை நன்றாக கூழ் பதத்திற்கு வரும் வரை கிளற வேண்டும்.

மைதா மாவினை சலித்தும், பட்டரை உருக்கியும், செர்ரி பழத்தினை சிறு சிறு துண்டாக வெட்டியும் வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில்  மைதா மாவு, பொடித்த சர்க்கரை, பட்டர் சேர்த்து மிருதுவாக பிசைய வேண்டும். முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்து, மைதா சேர்த்து பிசைந்த கலவையில் முட்டையை ஊற்றி நன்கு பிசைய வேண்டும்.

இந்த கலவையில் பால் சேர்த்து கலந்து, பின்பு கேக் டின்னில் பட்டர் பேப்பர் தடவி கலவையை பாதி வரும் வரை ஊற்ற வேண்டும்.

வெட்டி வைத்துள்ள செர்ரி பழங்களையும், பொடித்த நட்ஸ்களையும் இந்த கலவையின் மீது தூவி விட வேண்டும்.  ப்ரீ ஹீட் செய்து பின்பு ஓவனின் கேக் டின்னை வைத்து சுமார் 40 நிமிடத்திற்கு பின் எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க 

CM Stalin On Governor: ”தமிழ்நாடு ஆளுநரின் செயலுக்கு இதுதான் என் ரியாக்‌ஷன்” - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பளிச் பதில்

Teachers Dress Code: பெண் ஆசிரியர்கள் பள்ளிகளில் தங்கள் விருப்பப்படி ஆடை அணியலாம்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு

Minister Ponmudi Case: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி..

Published at : 19 Dec 2023 09:11 PM (IST) Tags: christmas special plum cake plum cake procedure

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?