Prawn Gravy:செட்டிநாடு ஸ்டைல் இறால் கிரேவி... இப்படி செய்தால் நாவூறும் சுவையில் இருக்கும்...
செட்டிநாடு ஸ்டைலில் சுவையான இறால் கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம் .
தேவையான பொருட்கள்
இறால்- 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு தேவையான அளவு
கிரேவி செய்வதற்கு
பெரிய வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்- 3
மிளகுத்தூள்-1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
கருவேப்பிலை -1 கொத்து
மல்லித்தழை -கைப்பிடி அளவு
செய்முறை
இறாலை சுத்தம் செய்து நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல் இறால் மற்றும் சிறிது உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இப்போது இறாலில் இருந்து சிறிதளவு நீர் வெளியேறும். இந்த நீர் வற்றும் வரை இறாலை வதக்கி, இதை எடுத்து தனியாக வைத்து விட வேண்டும்.
பின்பு வேறொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, சூடானதும், பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் விட்டு, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இப்போது, இறால் சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கி விட வேண்டும்.
3 நிமிடங்கள் கழித்து, மிளகுத்தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். பச்சை வாசம் போகும் வரை வதக்கி விட்டு, பின்னர் தண்ணீர் சேர்த்து கடாயை, ஒரு தட்டு போட்டு மூடி வைத்து சுமார் 5 நிமிடங்கள் வேக விட வேண்டும்.
கிரேவி நன்றாக கொதித்து, கிரேவியில் இருந்து எண்ணெய் பிரிந்து தனியாக வரும் போது , மல்லித்தழையை தூவி இறக்கினால், நாவூறும் செட்டிநாடு இறால் கிரேவி தயார்.
இறாலின் நன்மைகள்
இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது.
இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால், உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், இந்த கடல் உணவை பயப்படாமல் சாப்பிடலாம் என கூறப்படுகிறது.
இறால் ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டாக விளங்குகிறது. அதனால் சூரிய ஒளி மற்றும் புறஊதா கதிர்வீச்சுகளால் ஏற்படும் சரும சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படும்.
இறாலில் உள்ள கனிமங்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணை புரியும்.
இறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க
Kadalai Paruppu Payasam: கடலை பருப்பு பாயாசம் அசத்தலாக செய்வது எப்படி?
Broccoli Soup : பலகாரங்கள் சாப்பிட்டு வயிறு உப்புசமா? ப்ரொக்கோலி சூப் சாப்பிடுங்க.. இதோ ரெசிப்பி..