News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Chettinad Rangoon Puttu: சுவையான செட்டிநாடு ரங்கூன் புட்டு... எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க...

ரவையை வைத்து சுவையான செட்டிநாடு ரங்கூன் புட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.

FOLLOW US: 
Share:

புட்டு ஒரு ஆரோக்கியமான உணவு. இதில் கோதுமை புட்டு, கேழ்வரகு புட்டு, சிவப்பரிசி புட்டு என பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான புட்டு பிடிக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக சிப்ஸ் உள்ளிட்டவற்றை கொடுப்பதற்கு பதிலாக ஆவில் வேகும் புட்டு போன்றவற்றை செய்து கொடுக்கலாம்.  நாம் இன்று ஒரு புதிய வகை புட்டு ரெசிபி தான் பார்க்க போறோம். செட்டிநாடு ஸ்பெஷல் ரங்கூன் புட்டு எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க. 

தேவையான பொருட்கள் 

ரவை -ஒரு டம்ளர் , வெல்லம்-130 கிராம், ஏலக்காய் -3 , நெய்- தேவையான அளவு,  தேங்காய்- அரை மூடி, திராட்சை-6, முந்திரி பருப்பு -15

செய்முறை 

ஒரு பாத்திரத்தில் 103 கிராம் வெல்லத்தை எடுத்து அதை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். வெல்லம் முழுமையாக உருகியது அதை அடுப்பில் இருந்து இறக்கி கொள்ள வேண்டும். ஆறியதும்,  அதை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில்  இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து அதில்  முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும். முந்திரி நிறம் மாற ஆரம்பிக்கும் போது அதில் திராட்சையை சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டையும் வேறு ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அரை மூடி தேங்காயை எடுத்து நன்றாக வறுக்க வேண்டும். தேங்காய் நெய்யில் பொன்னிறமாக மாறியதும், அதையும் வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். 

அதே வாணலியில் ரவையை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து, ரவையை நன்றாக, அதே நேரத்தில் தீயாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரவை சிவக்க ஆரம்பிக்கும் போது அதில் ஏற்கனவே வடிகட்டி எடுத்து வைத்த வெல்லபாகை சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விட வேண்டும். வெல்லம் முழுமையாக ரவையில் மிக்ஸ் ஆனதும், அதில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு நன்றாக கிளறி விட வேண்டும். அதில் அரைஸ்பூன் ஏலக்காய் பவுடர் மற்றும் ஒரு பிஞ்ச் உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். 

பின்னர் ஏற்கனவே வறுத்து வைத்த முந்திரி திராட்சை, தேங்காய் ஆகியவற்றை இதில் சேர்க்க வேண்டும்.  இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து,  மூடி போட்டு 5 நிமிடம் வரை வேக விட வேண்டும். பின்னர் இதில் தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டால்,  சுவையாக  ரங்கூன் புட்டு தயார். 

மேலும் படிக்க

ADMK-BJP: "அண்ணாமலையை நீக்க சொன்னோமா? கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்" - கே.பி.முனுசாமி பரபர பேட்டி!

Published at : 28 Sep 2023 12:53 PM (IST) Tags: Chettinad rangoon puttu puttu recipe special rangoon puttu

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!

சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!

Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?

Indian 2 Trailer Review:

Breaking News LIVE: கல்வராயன் மலைப்பகுதியில் 2,200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு

Breaking News LIVE: கல்வராயன் மலைப்பகுதியில் 2,200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு

பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்

பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்