மேலும் அறிய

ADMK-BJP: "அண்ணாமலையை நீக்க சொன்னோமா? கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்" - கே.பி.முனுசாமி பரபர பேட்டி!

ஒரு கட்சியின் மாநில தலைவரை  நாங்கள் மாற்ற வேண்டும் என்று கூறுவது ஒரு சிறுப்பிள்ளைதனமான கேள்வியாக நினைக்கிறேன் என்றார் கே.பி.முனுசாமி.

"ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது”

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.பி. முனுசாமி, "அதிமுக தலைவர்கள் பற்றி கடுமையான பாஜகவினர் விமர்சனம் செய்தார்கள். தொடர்ந்து விமர்சனம் செய்ததால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டோம்.  உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததால் தொண்டர்கள் கோபமடைந்தனர். 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளை மாவட்ட செயலாளர்கள் எடுத்துரைத்தனர். பாஜக உடனான கூட்டணியை முறிப்பது என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு. அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றார்.

ஆனால், தேர்தல் வந்தால் மீண்டும் பாஜகவுடனான அதிமுக கூட்டணி சேரும் என்று மு.க.ஸ்டாலின், உதயநிதி கூறி வருகின்றனர். இது ஒருபோதும் நடக்காது. பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய பயத்தில் திமுகவினர் பேசி வருகின்றனர். கூட்டணி முடிவை அறிவித்த உடன் திமுக தங்களது கூட்டணி கட்சிகளை அழைத்து பேசுவது பயத்தின் வெளிபாடு. எந்த காரணத்திற்காகவும் பாஜகவுடனான கூட்டணி ஒருபோதும் இருக்காது. 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக  தலைமையில் கூட்டணி அமையும்” என்றார்.

"அண்ணாமலையை மாற்றக் கோரவில்லை"

தொடர்ந்து பேசிய அவர், ”ஒரு கட்சியின் மாநில தலைவரை  நாங்கள் மாற்ற வேண்டும் என்று கூறுவது ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வியாக நினைக்கிறேன். எனவே, அண்ணாமலையை மாற்ற கோரிக்கையையும் வைக்கவில்லை. அந்த கேள்விக்கும  இடமில்லை. பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் கோரிக்கையை வைப்பது சிறுபிள்ளைத்தனமானது.  அண்ணாமலையை மாற்றக் கோருவது எங்கள் எண்ணம் இல்லை. நாகரீகமான தலைவர்கள் எங்களிடம் உள்ளனர்.  முதிர்ந்த ஒரு அரசியல் கட்சி எந்த நிலையிலும் ஒரு கட்சியின் தலைவரை மாற்ற வேண்டும் என கேட்காது” என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

யார் பிரதமர் வேட்பாளர்? - மழுப்பிய முனுசாமி:

மேலும்,  ”எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன்  அதிமுக கூட்டணி இருக்காது. 2024 ஆம் ஆண்டு மக்களை தேர்தல் மட்டுமின்றி, 2026ல் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இருக்காது. இந்த இரண்டு தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு தேர்தலை சந்திப்போம். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார்” என்றார் முனுசாமி. இதனை தொடர்ந்து, "மக்களுக்காக, மக்கள் நலனுக்காக, மாநில உரிமைக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம்.

ஒடிசாவில் பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாய்க் எந்த கட்சியையோ, பிரதமர் வேட்பாளரையோ ஆதரிப்பதில்லை. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழக மக்களின் நலன் கருதியே அதிமுக செயல்படும்” என்றார்.  பாஜகவுடன் கூட்டணி இல்லை எனில் அதிமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு முனுசாமி மக்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுப்போம் என மழுப்பலான பதிலை தெரிவித்தார்.  

 

தலைப்பு செய்திகள்

ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget