Mangoes : இந்த முறையில மாம்பழங்கள் சாப்பிட்டா, உங்க எடை சரசரன்னு இறங்கும்.. டாப் சீக்ரெட்ஸ்
உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் மாம்பழம் பயனுள்ளதாக இருக்கும்
பொதுவாக கோடைக்காலங்கள் என்றாலே மாம்பழத்திற்கு பஞ்சம் இருக்காது. மாம்பழம் பிடிக்காதவர்கள்தான் யாரும் இருப்பார்களா என்ன? எனக்கெல்லம் மாம்பழம் என்றால் சொல்லவே வேண்டாம்! இன்னும் சிலர் கோடைக்காலத்தில் சில்லென்று மாம்பழத்தை சாம்பிட விரும்பி தங்களது குளிர்சாதன பெட்டிக்குள் மாம்பழங்களை அடுக்கி வைத்திருப்பார்கள். மாம்பழம் என்னதான் சீசனல் ஃப்ரூட்டாக இருந்தாலும் , பலருக்கு பிடித்தமான பழங்களில் ஒன்றாக இருந்தாலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் அதனை தக்க வைத்துக்கொள்ள விரும்புபவர்கள் அதனை சாப்பிட தயங்குகிறார்கள்.
காரணம் அதில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதுதான். ஆனால் உண்மையில் மாம்பழம் உடல் எடையை அதிகரிக்குமா என்றால் ? பிரபல உணவியல் நிபுணர் ஷிகா குமாரி மறுத்துள்ளார்.
View this post on Instagram
அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாம்பழ வீடியோவுடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில், “மாம்பழத்தில் உள்ள பயோஆக்டிவ் சேர்மங்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் கொழுப்பு செல்கள் மற்றும் கொழுப்பு தொடர்பான மரபணுக்களை அடக்கி, எடை கட்டுப்பாட்டிற்கு வழிவகை செய்யும் என்கிறது ஆய்வு.எனவே மாம்பழங்களை சாப்பிடுவது உடல் எடையையும் குறைக்க உதவும். மாம்பழங்கள் 40-60 வரை மிதமான கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன,எனவே அளவோடு சாப்பிடுவது எடையைக் குறைக்க உகந்ததாக இருக்கும். .உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் மாம்பழம் பயனுள்ளதாக இருக்கும்.
மாம்பழங்கள் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ ஊட்டச்சத்தை கொண்டுள்ளன.இது கண் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும். பழத்தில் ஃபோலேட், வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் பல பி வைட்டமின்கள் உள்ளன, அவை உடலில் பல முக்கிய பங்கு வகிக்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram