Garlic and Blood Pressure : ரத்தக் கொதிப்பு பிரச்சனைகளுக்கு பூண்டு உதவி செய்யுமா? இதுல கட்டாயம் தெரியவேண்டியது எது?
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
பொதுவாக மனிதர்களுக்கு வயது கூட மற்றும் உணர்ச்சிவயப்பட்ட கோபமான மனநிலையில் ரத்த அழுத்தமானது அதிகரிக்கிறது. இந்த ரத்த அழுத்தமானது சரி செய்ய மருத்துவர்கள் நிறைய மருந்துகளை பரிந்துரை செய்தாலும் கூட இயற்கை முறையில் சித்த மருத்துவத்தில் பூண்டு ஆகச்சிறந்த மாற்று மருந்தாக செயல்படுவது என்று சொன்னால் மிகை இல்லை
பூண்டானது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.மூட்டுகளில் ஏற்படும் வலியைக் குறைக்கிறது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த பூண்டு சிறந்த மருத்துவம் நிறைந்த பொருளாக இருக்கிறது. இது இருமல் மற்றும் சளியை சரி செய்கிறது. நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த இது மிகவும் தேவையான உணவுப் பொருளாக இருக்கிறது. இதைப்போலவே நமது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
இது நமது இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது. உடலின் எடை குறைப்பிற்கும் பூண்டானது உதவுகிறது.
வாத கப பிரச்சினைகளுக்கு பூண்டானது ஆகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது தினமும் சிறிது வதக்கிய ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வர வாத பிரச்சனைகள் சரியாகும். பூண்டுடன் இஞ்சி கலந்து உணவில் நிறைய சேர்த்துக் கொள்ள இதயத்தில் இருக்கும் கொழுப்பு படிமங்களை கரைக்கிறது
பூண்டானது காரத்தன்மை நிறைந்த உணவு என்பதினால் இதை நேரடியாக எடுத்துக் கொள்ளாமல் வெயில் வதக்கியோ அல்லது வெறுமனே சுட்டோ அல்லது உணவில் கலந்து சாப்பிடலாம். பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும். (உங்களுக்கு அல்சர் மற்றும் கேஸ்டிக் பிரச்சினைகள் இருந்தால் சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு இவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிடுவதை நீங்கள் முயற்சி செய்ய வேண்டும் அல்லது திட உணவாக ஏதாவது அருந்திய பின் இவ்வாறு நீங்கள் முயற்சி செய்யலாம்) முருங்கை காயை போல பூண்டும் ஆண்களுக்கு பாலியல் தூண்டுதல்களுக்கு உதவி செய்கிறது.
சில பேருக்கு பூண்டின் வாசமே ஒத்துக் கொள்ளாது அத்தகையோ பூண்டை சமைக்கும் உணவுகளில் நிறைய சேர்த்து உண்பதினால் நிறைய பலன்களை பெற முடியும் குறிப்பாக ஓரிடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலையில் இருப்பவர்களுக்கு வாயுத்தொல்லையானது மிகப்பெரிய சாபக்கேடு என்று சொல்லலாம் அந்த வாயு தொல்லையை சரி செய்யும் தன்மை கொண்டிருக்கும் உண்டு. இதற்காக நீங்கள் மருத்துவரிடம் சென்று செலவு செய்யாமல் பூண்டை பாலில் கொதிக்க வைத்து கலந்து குடித்தோம் அல்லது உணவில் சேர்த்துக் கொண்டோ பயன்களை பெறலாம். பூண்டுடன் சிறிது கல்லுப்பை கலந்து மென்று தின்றோமேயானால், திடீரென்று வயிற்றில் ஏற்படும் எரிச்சல்,நெஞ்செரிப்பு, நெஞ்சு கரிப்பு, போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
பூண்டுடன், வெற்றிலையை அரைத்து வெண் தேமல் உள்ள இடங்களில் பூசி வர,விரைவில் இந்த வெண் தேமல் குணமாகும். நெஞ்சில் நிறைய சளி கட்டி இருக்கும் சமயங்களில்,பாலில் ஒரு சிட்டிகை மஞ்சளை போட்டு கொதிக்க வைத்து, அதில் பூண்டு பற்களை தட்டிப்போட்டு, பூண்டின் காரத்தன்மை, குறைந்த பிறகு சிறு துளி மிளகு தூள் இட்டு,குடித்து வர, நெஞ்சில் சளி கறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும். இத்தகைய சிறப்புகள் நிறைந்த பூண்டில் என்னென்ன உயிர் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன என்று பார்க்கலாம்.
ஆவியாகும் நல்ல எண்ணெய், கார்போஹைட்ரேட்டுகள், அரபினோஸ், கேலக்டோஸ் ஆகியவை உள்ளன.மேலும் வைட்டமின்கள், ஃபோலிக் அமிலம், நியாசின், ரிபோஃப்ளேவின், தயாமின், வைட்டமின் சி, அமினோ அமிலங்கள்(அரினிக், அஸ்பாரஜிக் அமிலம், மெத்தியோனைன் போன்றவை) என்சைம்கள் - அல்லினேஸ் ஆவியாகும் சேர்மங்கள் - அல்லைல்ஆல்கஹால், அல்லில்தியால், அல்லில்ப்ரோபில் டைசல்பைடு போன்றவை நிறைந்து காணப்படுவதனால் பூண்டினை குட்டி மருத்துவமனை என்று நாம் அழைக்கலாம்.