Bread Bhurji: ப்ரெட் கொஸ்து... அட முட்டை பொடிமாஸ் லெவலுக்கு இருக்கே டேஸ்ட்... வாங்க செய்முறை பார்க்கலாம்...
பிரெட் கொஸ்து :அட்டகாசமான சுவையிலான பிரேக் பாஸ்ட் ரெசிபி... எப்படி செய்வது என பார்க்கலாம்.
ப்ரெட் கொஸ்து என்பது பிரபலமான மற்றும் சுவையான உணவு. நீங்கள் சைவ உணவு உண்பவர்களாக இருந்தால் நீங்கள் முட்டையின் சுவையை சுவைக்க முடியாமல் இருக்கலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாம். உங்களுக்காக தான் இந்த பிரெட் கொஸ்து டிஷ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ஸில் நாம் முட்டைக்கு பதிலாக, ரெட்டியை பயன்படுத்த போகிறோம். இது ஒரு வித்தியாசமான முட்டையின் சுவைக்கு நிகரான உணவாகும். பிரெட் கொஸ்து எப்படி செய்வது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
5 முதல் 6 ரொட்டி துண்டுகள், அரை கப் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 நறுக்கிய வெங்காயம், 1 நறுக்கிய தக்காளி, 1 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், கடுகு, கொத்தமல்லி இலைகள் அல்லது கறி வேப்பிலை மற்றும் நீங்கள் விரும்பும் குடை மிளகாய், கேரட் அல்லது சோளம் போன்ற காய்கறிகள்.
செய்முறை
ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் தயிர் சேர்த்து, அதில் 2 ஸ்பூன் தண்ணீர், மஞ்சள், சிவப்பு மிளகாய் மற்றும் உப்பு சேர்க்க வேண்டும். ரொட்டித் துண்டுகளை க்யூப்ஸாக நறுக்கி, அந்த தயிர் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து கலக்கவும். மெதுவாக கலக்கவும், ரொட்டி உடைக்காமல் பார்த்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைக்கவும்; சூடானதும், எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போடவும். கடுகு பொறிந்தவுடன், பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் தக்காளி (அல்லது உங்கள் விருப்பப்படி மற்ற காய்கறிகள்) போன்ற காய்கறிகளைச் சேர்க்க வேண்டும். கலவையை ப்ரெளன் நிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். தயாரித்து வைத்துள்ள ரொட்டி கலவையை பாத்திரத்தில் சேர்க்க வேண்டும். ரொட்டி பொன்னிறமாகும் வரை கிளறி விட வேண்டும்.
தற்போது சுவையான பிரெட் கொஸ்து தயார். இதை ஒரு தட்டில் அல்லது ஒரு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து, அதன் மீது சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விட வேண்டும். பிரெட் கொஸ்து தற்போது சாப்பிட தயாராக உள்ளது.
இந்த சுவையான ரெசிபி செய்வது மிகவும் எளிதானது மற்றும் 15 முதல் 20 நிமிடங்களில் செய்யலாம். இது குழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் போன்ற உணவாகும். நீங்கள் இதை காலை உணவாக சாப்பிடலாம். இந்த பிரெட் கொஸ்து நிச்சயம் அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும்.
மேலும் படிக்க
Watch Video: 'என்ன அப்படியே நின்னுடுச்சி’ .. அந்தரத்தில் தொங்கிய ரோலர் கோஸ்டர்.. வைரல் வீடியோ இதோ..!