Ada Pradhaman Payasam : கேரளாவின் சூப்பர் ரெசிபி: அடப்பிரதமன் செய்வது எப்படி தெரியுமா?
இதற்குத் தேவையானவை : 100 கிராம் அரிசி,250 கிராம் பனை வெல்லம், 300 மில்லி புதிதாகச் செய்த தேங்காய் பால், 3 ஏலக்காய், 50 கிராம் உலர்ந்த தேங்காய், 10 கிராம் முந்திரி பருப்பு..
கேரளாவின் மிகப் பிரதானமான உணவுப் பதார்த்தங்களில் ஒன்று அடப் பிரதமன். அரிசி சாதத்தில் செய்யப்படும் இந்த உணவு ஓணம் பண்டிகையின் போது பிரதானமான உணவுகளில் ஒன்றாகப் பரிமாறப்படுகிறது. அட பிரதமன் என்பது அரிசி, முந்திரி பருப்பு, தேங்காய் மற்றும் பனை வெல்லம் சேர்த்து செய்யப்படும் பாயாசத்தின் ஒரு வகையாகும். பண்டிகைக் காலத்தில் செய்ய விரைவான, எளிதான மற்றும் சுவையான இந்திய இனிப்பு இது
இதற்குத் தேவையானவை 100 கிராம் அரிசி,250 கிராம் பனை வெல்லம், 300 மில்லி புதிதாகச் செய்த தேங்காய் பால், 3 ஏலக்காய், 50 கிராம் உலர்ந்த தேங்காய், 10 கிராம் முந்திரி பருப்பு, 10 கிராம் திராட்சை, 50 மில்லி நெய்
View this post on Instagram
அரிசியை கொதிக்கும் வெந்நீரில் 15 நிமிடம் ஊறவைக்கவும், அல்லது அது மென்மையாகும் வரை ஊறவைக்கவும். நெய்யை சூடாக்கி முந்திரி, திராட்சை மற்றும் தேங்காய் துண்டுகளை தனித்தனியாக வறுக்கவும். பின்னர் அதனைக் கடாயில் இருந்து இறக்கவும். அதே கடாயில், நெய்யை சூடாக்கி, அரிசியை 4-5 நிமிடங்கள் குறைந்த தீயில் வறுக்கவும். இப்போது அரிசியுடன் வெல்லம் தண்ணீர் மற்றும் ஏலக்காய் சேர்த்து, அது கெட்டியாகும் வரை குறைந்த தீயில் சமைக்கவும். நன்கு கிளறிச் சூடாகப் பரிமாறவும்.