மழைக்காலம் வந்தாச்சுன்னா, இந்த காய்கறிகளை குறைவா பயன்படுத்துங்க.. ஆயுர்வேதம் என்ன சொல்லுது?
பருவமழை காலத்தில் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பருவமழை வெப்பத்தை தணித்து குளிச்சியான சூழலை தருகிறது. பருவ மழை காலங்களில் பாக்டீரியா தொற்று, நீர் மூலம் பரவும் நோய்கள் மற்றும் செரிமான பிரச்சினைகள் உள்ளிட்டவையும் ஏற்படுகின்றன. எனவே மழை காலத்தில் உணவில் தனி கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம். குறிப்பாக காய்கறித் தேர்வில் கவனம் செலுத்துவது முக்கியமானது. ஏனெனில் சில வகையான உணவுகள் நமது செரிமான அமைப்பில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம்.
ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, நமது உணவு நன்கு சமைக்கப்பட வேண்டும். மழை காலங்களில் இலகுவான, புதிய, ஜீரணிக்க எளிதான மற்றும் வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது
"நம் உடலுக்கும் பருவகால காய்கறிகளுக்கும் இடையே ஒரு அழகான தொடர்பு உள்ளது. பருவங்கள் நம் உடலில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அதற்கு ஏற்றவாறு நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டால், ஆது நல்ல ஆரோக்கியத்தை வாழ்வியலை நமக்கு தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய காய்கறிகள் எவை என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
- கீரை: ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, கீரை வயிற்று தொற்று அபாயத்தை அதிகரிக்கும். இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகளை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும் என கூறப்படுகிறது.
- முட்டைக்கோஸ்: முட்டைக்கோஸ் சாலட்கள், நூடுல்ஸ் மற்றும் பல்வேறு தெரு உணவுகள் போன்ற பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி, மழைக்காலத்தில் இதைத் தவிர்க்க வேண்டும் எனக்கூறப்படுகிறது. ஏனென்றால் அதன் குளிர்ச்சித்தன்மை உள்ளிட்ட குணங்கள் செரிமானத்தை பாதிக்கலாம் என சொல்லப்படுகிறது.
3. குடை மிளகாய்கள்: அதன் பச்சையான மற்றும் குளிர்ச்சியான தன்மை செரிமானத்தை சீர்குலைத்து, வாத மற்றும் பித்த தோஷத்தை மோசமாக்கும் என கூறப்படுகிறது
4.தக்காளி: சூப்கள், சாலடுகள் மற்றும் கறிகள் அனைத்தும் புளிப்பு சுவை இல்லாமல் முழுமையடையாது. மறுபுறம், தக்காளி அமிலத்தன்மையை உருவாக்கும் என்பதால், மழைக்காலங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அவற்றின் சூடான மற்றும் புளிப்பு பண்புகள் திரிதோஷத்தை மோசமாக்கலாம் என்றும் அமிலத்தன்மை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
5. காலிஃபிளவர்: மழைக்காலத்தில் நாம் அனைவரும் சூடான காலிபிளவர் பக்கோடாவை விரும்பி உண்ணுவோம். என்றாலும், அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் அதன் குளிர்ச்சி மற்றும் திரவ பண்புகள் செரிமானத்தை பாதிக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த காய்கறிகளையும் அறவே தவிர்த்துவிடாமல் குறைவாக எடுத்துக்கொள்ளும்படி ஆயுர்வேதம் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது