சைவ உணவு மட்டும்தான் சாப்பிடுவீங்களா? நீங்க கண்டிப்பா சேத்துக்க வேண்டிய 6 ப்ரோட்டீன் உணவுகள் இதோ..
கோழி, ஆட்டிறைச்சி போன்ற பல இறைச்சிகளுக்கு மாற்றான சைவ புரத உணவு வகைகளை உங்களுக்காக இங்கே பட்டியலிடுகிறோம்...
ஆரோக்கியமான மற்றும் சீரான உணவின் இன்றியமையாத பகுதியாக புரதம் உள்ளது. இது உடலுக்கு ஆற்றலையும், எலும்புகளுக்கு வலிமையையும், வயிற்றுக்கு உண்ட நிறைவையும் அளிக்கிறது. அசைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சி வடிவில் புரதங்களின் உணவு ஆதாரங்களைக் கண்டறிவது எளிதானது என்றாலும், சைவ உணவு உண்பவர்களுக்கு இறைச்சிக்கு சமமான போதுமான புரதம் நிறைந்த உணவுகளைத் தேடி உண்பதில் சிக்கல் இருக்கலாம். காய்கறிகளில் போதுமான அளவு புரத ஆதாரங்கள் இல்லாததும் பிரச்னைதான்.காய்கறிகளில் பெரும்பாலும் நமக்கு நார்ச்சத்து மட்டுமே கிடைக்கிறது
பிறகு சைவ உணவு உண்பவர்கள் எப்படி போதுமான புரதத்தைப் பெறுகிறார்கள்?
கோழி, ஆட்டிறைச்சி போன்ற பல இறைச்சிகளுக்கு மாற்றான சைவ புரத உணவு வகைகளை உங்களுக்காக இங்கே பட்டியலிடுகிறோம்...
புரதம் அதிகம் உள்ள சைவ உணவுகள் 6:
1. முட்டைகள்: முட்டைகள் சைவ உணவு ரகங்களில் இல்லை என்றாலும் சைவ உணவுப் பிரியர்கள் முட்டை உட்கொள்கிறார்கள்.அவர்கள் எகெட்டேரியன் எனப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு முட்டையாவது சாப்பிட முயற்சிக்கவும். மற்றும் சிறந்த அம்சம் என்னவென்றால், நீங்கள் பல வழிகளில் முட்டைகளை உட்கொள்ளலாம். முட்டை தொக்கு, முட்டைக்கறி, ஆம்லேட், வேகவைத்த முட்டை என முட்டை சமைக்க எளிதான உணவாகவும் உள்ளது.
2. வேர்க்கடலை பட்டர்: புரதம் என்றாலே அதில் சுவை இருக்காது என்று நினைப்பவர்களுக்கு இந்த பீநட் பட்டர் ஆல் இன் ஆல் அழகு ராணி. தோசை, சப்பாத்தி, பிரெட் என எதனுடனும் சேர்த்து இதனைச் சாப்பிடலாம். நீங்கள் ஒரு நாளில் 2 டீஸ்பூன் பீநட் பட்டர் அதிகபட்சமாக சாப்பிடலாம். வீட்டில் குழந்தைகளுக்கு பிடித்த உணவாகவும் இது இருக்கிறது.
3. கொண்டைக்கடலை: ஜிம் வொர்கவுட் செய்யும் பல சைவ உணவுப் பிரியர்களுக்கு இதுதான் டாப் விருப்பம். அரிசி சாதத்துடன் கலந்தோ அல்லது பல்வேறு காய்கறிகளுடன் கலந்து சாலட்டாகவோ இதனை உட்கொள்ளலாம். வெண்கடலை என்பதால் குறைந்தது 8 மணிநேரமாவது இதனை ஊறவைக்க வேண்டும். சுண்டலாகவும் சமைத்து சாப்பிடலாம்.
4. பால் கால்சியம் மட்டுமல்ல, பால் புரதத்தின் சிறந்த மூலமாகும்.சாதாரணமாக பால் அருந்தப் பிடிக்கவில்லை என்றால் அதனை ஸ்மூத்தியாகவோ, செரல், ஓட்ஸ், கெல்லாக்ஸ் போன்றவற்றுடன் கலந்தோ சாப்பிடலாம். பாலாகச் சாப்பிடப் பிடிக்காதவர்களுக்கு பனீர் போன்றவையும் பரிந்துரைக்கப்படுகிறது.
5. நட்ஸ்: வீட்டில் ஒரு டப்பாவில் பாதாம், வால்நட், முந்திரி, பிஸ்தா என பல நட்ஸ்களை மிக்ஸ்டாக போட்டு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேலைக்குச் செல்பவர் என்றால் உங்கள் பையில் ஒரு டப்பாவில் ஒரு கைப்பிடி அளவு இதனை வைத்திருங்கள். நட்ஸ்கள் நரம்புகளை வலுவாக்குவது அல்லாது புரதத்தின் சிறந்த மூலமாகவும் கருதப்படுகிறது.
6. வால்நட்ஸ் : பிற கொட்டைகளில் கொழுப்பு அதிகம் இருப்பதால் கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்களால் அவற்றை சாப்பிட முடியாது.அதுவே வால்நட்டில் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருப்பதால் அதனை உட்கொள்வது நல்லது. இது ஒருபக்கம் மூளையின் செயல்பாட்டுக்கு நல்லது எனக் கூறப்பட்டாலும் வால்நட்டில் அதிக அளவு புரதமும் உள்ளது.