Lemon Water: எந்த டயட்ல இருந்தாலும் இத மட்டும் மிஸ் பண்ணீடாதீங்க.. இது ஹெல்த்துக்கு ரொம்ப முக்கியம்..!
காலையில் எலுமிச்சையை நீரில் கலந்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.
நமது வீடுகளில் இன்றளவும் யாருக்கேனும் செரிமானக்கோளாறு இருந்தால் உடனே நாம் அவர்களுக்கு சிபாரிப்பது, எலுமிச்சை டீ, எலுமிச்சை ஜூஸ், எலுமிச்சை சோடா போன்றவைதான். அப்படியான எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் போன்ற சத்துக்கள் இருப்பது நமக்கு தெரிந்தாலும், எலுமிச்சையில் உள்ள மற்ற நன்மைகள் குறித்து ந்த தொகுப்பில் விரிவாக காணலாம். குறிப்பாக காலையில் எலுமிச்சையை நீரில் கலந்து உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.
செரிமானத்திற்கு உதவுகிறது
காலையில் எலுமிச்சை தண்ணீரை முதலில் குடிப்பதால் இரைப்பையில் செரிமானத்திற்கான அமிலங்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது, சிறந்த செரிமானத்தை ஊக்குவிக்கிறது.
வைட்டமின் சி நிறைந்தது
எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே எலுமிச்சை சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகும், மேலும், தீங்கு விளைவிக்கும் நச்சுகளில் இருந்து செல்களை பாதுகாக்க உதவுகிறது. கூடுதலாக, வைட்டமின் சி உடலில் ஹார்மோன்கள் உற்பத்திக்கு உதவுகிறது. அதேபோல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சாதாரண நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
நீரேற்றம்
டி-ஹைட்ரேட்டுடன் (நீரேற்றம்) ஒரு நாளைத் தொடங்க எலுமிச்சை நீர் ஒரு சிறந்த வழியாகும். சீரான டி-ஹைட்ரேட்டுடன் இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமானது. ஒவ்வொரு நாளும் போதுமான அளவு தண்ணீரை உட்கொள்வதை உறுதி செய்வது முக்கியம். நீர் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நம்பகமான ஆதாரமாக இருந்தாலும் எல்லோரும் அதன் சுவையை விரும்புவதில்லை. எனவே நீருடன் எலுமிச்சை சாறு சேர்த்து அந்த நீரை அருந்தினால் அதிக தண்ணீர் குடிக்கலாம்.
எடை குறைப்பு
எலுமிச்சம்பழத்தில் உள்ள பெக்டின் ஃபைபர் பசியைக் கட்டுப்படுத்தவும், எடை குறைப்பை ஊக்குவிக்கவும் உதவும். கூடுதலாக, எலுமிச்சை நீர் நமக்கு இயல்பாக எழும் பசியை அடக்கும். எலுமிச்சை, தண்ணீர் மற்றும் பிற பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் டிடாக்ஸ் நீர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும்.
சிறுநீரக ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
சில ஆராய்ச்சிகளின் படி, எலுமிச்சை நீர் சிறுநீரக கற்களை போக்க உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஒரு பயனுள்ள மாற்று சிகிச்சையாக இருந்தாலும், முறையான மருத்துவ சிகிச்சையுடன் இணைந்து பயன்படுத்தும்போது மிகவும் சிறப்பான ரிசல்ட்களை தரும். சிறுநீரகத்தில் தாதுக்கள் சேருவதால் சிறுநீரக கற்கள் உருவாகின்றன. அவை பொதுவாக கால்சியம் ஆக்சேட்டைக் கொண்டிருக்கின்றன.
உடலின் அமிலத்தன்மை சீராக்க
எலுமிச்சம்பழம் அமிலத்தன்மை கொண்டதாக இருந்தாலும், அவை உடலில் அமிலத்தன்மையை சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால் தான் அதிகப்படியான உணவினை உட்கொண்ட பின்னர் எலுமிச்சை உட்கொள்ள தெரிந்தோ தெரியாமலோ அறிவுருத்துகிறோம். இது உடலின் pH அளவை சமநிலைப்படுத்துவது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சுவாசத்தை புத்துணர்ச்சியாக்குகிறது
எலுமிச்சை நீரில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்யவும், பாக்டீரியாவால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்கவும் உதவும்.
இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
எலுமிச்சையில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குவதைத் தடுப்பதன் மூலம் இருதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
சரியான உடல் செயல்பாடுகளுக்கு
எலுமிச்சை நீரில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன, அவை இதய ஆரோக்கியம் மற்றும் தசை செயல்பாடு உட்பட சரியான உடல் செயல்பாடுகளுக்கு அவசியமானது என்பதால் எலுமிச்சையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளைக் குறைக்கலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )