மேலும் அறிய

IND vs NZ 1st T20: அபிஷேக் சிக்ஸர் மழை.. ரிங்கு காட்டடி..! 239 ரன்களை எட்டுமா நியூசிலாந்து?

IND vs NZ 1st T20: அபிஷேக் சர்மா அதிரடி சதம், கடைசி நேர ரிங்குசிங் பேட்டிங்கால் இந்திய அணி 238 ரன்களை குவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையி்ல், இரு அணிகளும் மோதிய முதல் டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவை பேட்டிங் செய்ய அழைத்தார். 

காட்டடி அடித்த அபிஷேக் சர்மா:

மைதானம் பேட்டிங்கிற்கு ஒத்துழைத்ததால் தொடக்க வீரர்கள் சாம்சன் - அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாகவே ஆட்டத்தை ஆரம்பித்தனர், சாம்சன் 7 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அடுத்து வந்த இஷான் கிஷான் முதல் பந்திலே பவுண்டரியுடன் பேட்டிங்கைத் தொடங்க, அவர் 5 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 8 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

27 ரன்களுக்குள் 2 விக்கெட் விழுந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் - தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தனர். விக்கெட் விழுந்ததைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அபிஷேக் சர்மா பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசினார். அவருக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவும் பவுண்டரிகள் விளாசி ஒத்துழைப்பு அளித்தார். 

84 ரன்கள்:

ஜேக்கப் டஃபி மட்டும் சற்று சவால் அளிக்க, ஜேமிசன், கிளார்க், சோதி பந்துகளை அபிஷேக் சர்மா சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் அனுப்பினார். இதனால், இந்தியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் ஏறியது. சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா அரைசதம் கடந்தார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 11வது ஓவரில் பிரிந்தது. சூர்யகுமார் யாதவ் 22 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யாவும் அதிரடி காட்ட, அரைசதம் கடந்து சதத்தை நோக்கி சென்ற அபிஷேக் சர்மா சோதி பந்தில் அவுட்டானார். அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி 8 சிக்ஸருடன் 84 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் அதிரடியாக காட்டிய ஹர்திக் பாண்ட்யாவும் 16 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

ரிங்குசிங் அதிரடி:

கடைசி கட்டத்தில் இந்திய அணிக்காக ரிங்குசிங் அதிரடியாக ஆடினார். டேரில் மிட்செல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் ரிங்குசிங் 20 ரன்களை விளாசினார். ரிங்குசிங் 20 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 238 ரன்களை எடுத்துள்ளது. 239 ரன்கள் என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.

நியூசிலாந்து அணிக்காக ஜேக்கப் டஃபி சிறப்பாக பந்துவீசினார். பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும் இந்த மைதானத்தில் அவர் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜேமிசன் 4 ஓவர்களில் 54 ரன்களையும், கிளார்க் 4 ஓவர்களில் 40 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். நியூசிலாந்தும் வலுவான பேட்டிங் வைத்திருந்தாலும் பும்ரா, அர்ஷ்தீப்சிங், அக்ஷர் படேல், ஹர்திக் பாண்ட்யா, வருண் பந்துவீச்சில் நெருக்கடி தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget