மேலும் அறிய

Food: சுவையான மொறு மொறு பீட்ரூட் ஊத்தப்பம்..! எப்படி செய்வது?

தோசை, ஊத்தப்பம் இரண்டுமே மக்களுக்கு மிகவும் பிரியமான உணவு. இவை இரண்டுமே ஒன்றே ஒன்று என யாராலும் நிறுத்திவிட முடியாது.

பீட்ரூட்டை ஒரு சர்ச்சைக்குரிய காய்கறி எனலாம். நிறைய பேருக்கு அதன் நிறம் பிடிக்காது, பலருக்கு அது மிகவும் பிடிக்கும். இன்று வரை நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடலாமா கூடாதா என்கிற கேள்வி பலருக்கும் உண்டு.

ஆனால் பீட்ரூட் ஒரு சிறந்த மல்டி வைட்டமின், தேர்ந்த நார்ச்சத்து உடைய ஒரு காய்கறி. சாப்பிடவே மாட்டேன் என அடம்பிடிக்கும் பிள்ளைகளுக்கு பீட்ரூட்டின் இந்த சத்து கிடைக்க பல வழிவகைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் பீட்ரூட் ஊத்தப்பம். 

தோசை, ஊத்தப்பம்:

தோசை, ஊத்தப்பம் இரண்டுமே மக்களுக்கு மிகவும் பிரியமான உணவு. இவை இரண்டுமே ஒன்றே ஒன்று என யாராலும் நிறுத்திவிட முடியாது. அதுவும் முறுவலான வெங்காயத்தை மேலே தூவி மிருதுவாக வார்த்து எடுக்கும் ஊத்தப்பத்தை யார் தான் வேண்டாம் எனச் சொல்ல முடியும். பீட்ரூட் ஊத்தப்பம் செய்வது எளிது. 20 நிமிடத்தில் ஆரோக்கியமான முறுவலான மிருதுவான ஊத்தப்பத்தை செய்துவிடலாம். 

செய்முறை: 

ஒரு பெரிய கிண்ணத்தில் இட்லி / தோசை மாவை எடுத்துக்கொள்ளவும். இந்த செய்முறைக்கு நீங்கள் ரெடிமேட் மாவோ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட மாவையோ பயன்படுத்தலாம். அதே கிண்ணத்தில் பீட்ரூட்டை சேர்க்கவும்.துருவிய பீட்ரூ அல்லது மிக்ஸியில் அடித்த பீட்ரூட் இரண்டில் ஒன்றை சேர்த்துக்கொள்ளவும். ஒரு ஃப்ரெஷ்ஷான இளஞ்சிவப்பு நிறத்தில் மாவு நிறம் மாறும் வரை அதனை நன்கு கலக்கவும். சூடான தவாவில், எண்ணெயைச் சேர்த்து, அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.

மாவை மெல்லியதாகத் தேய்க்காமல் தடிமனான பான்கேக் போன்ற பதத்தில் உருவாக்கவும். அதன் மீது நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் போன்ற காய்கறிகளை தூவி மாவில் மெதுவாக அதனை அழுத்தவும்.  ஊத்தப்பத்தின் ஓரங்களில் அதிக எண்ணெய் சேர்க்கவும். சில நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர், அதைப் பிறட்டி, மறுபுறமும் வேகும் சமைக்கவும்.ஊத்தப்பத்தை நறுக்கிய கொத்தமல்லி தூவி தேங்காய் அல்லது புதினா சட்னியுடன் பரிமாறவும். 

அதிக சத்துக்கள்:

ஏனைய காய்கறிகளுடன் ஒப்பிடும் போது பீட்ரூட்டானது அதிகளவான சத்துக்களை கொண்டுள்ளது.   உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்தும் ஆற்றல் இந்த பீட்ரூட்டில் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பீட்ரூட்டை குழந்தைகளுக்கு சிறு வயது முதலே உணவுடன் சேர்த்து வழங்கும்போது குழந்தைகளின் ஆற்றல் பெருகுவதோடு உயிர்சத்தும் உடலில் அதிகரிக்கிறது.

கிழங்கு வகையை சார்ந்த பீட்ரூட் பொட்டாசியம், விட்டமின் ஏ இரும்புச்சத்து ,ஆன்ட்டி ஆக்சிஸிடன்ட்கள் மற்றும் குறைந்த கலோரி‌யைக் கொண்டுள்ளது. உடலில் ஹீமோகுளோபின் எனும் இரத்த சிவப்பு அணுக்களை அதிகளவில் உருவாக்கும் தன்மை இந்த பீட்ரூட்டில் உள்ளது. ரத்த சிவப்பணு குறைபாடு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முதல் உணவு இந்த பீட்ரூட் ஆகும்.

ஆரோக்கியம்:

உடலுக்கு நல்ல சுறுசுறுப்பையும் ஆற்றலையும் வழங்கக்கூடிய இந்த பீட்ரூட், உடல் உள்ளுறுப்புகளான கல்லீரல் ,பித்தப்பை ,சிறுநீரகம் போன்றவற்றில் இருக்கும் நச்சுக்களை நீக்கி சிறப்பாக செயல்படுகிறது. அதேபோல் வயிற்றில் ஏற்படும் அல்சர் எனப்படும் வயிற்றுப் புண்ணையும் இந்த பீட்ரூட் குணப்படுத்துகிறது.

ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட பீட்ரூட் ஒரு அழகான நிறத்தன்மையை கொண்டது.  இதனைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது உடல் நிறத்தை மட்டுமல்ல உடல் உள் உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget