Ancient Temples In India : இந்தியாவில் விசிட் செய்யவேண்டிய தொன்மை மாறாத டாப் 5 கோவில்கள்..
கைலாச கோவில் முழுவதும் ஒரு பாறையில் செதுக்கப்பட்ட ஒன்று.
இந்தியா பழமைக்கும் தொண்மைக்கும் பெயர் போனது. இந்தியாவில் பலங்கால கட்டிடங்கள், கோவில்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் கோவில்களும் அடங்கும் . அழகிய வடிவமைப்புடன் பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்திய கோவில்களுள் சிலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம் .
View this post on Instagram
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் :
2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக நம்பப்படும் இக்கோயில் பார்வதி தேவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. பார்வதியின் மற்றொரு பெயர் மீனாட்சி, மேலும் அவர் சிவபெருமானை திருமணம் செய்த தலமாக நம்பப்படுகிறது. மீனாட்சி கோயில், 14 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள தூண்கள் மற்றும் சிலைகள் அனைத்துமே வரலாற்று சிறப்பு மிக்கவை .
ஸ்ரீ விருபாக்ஷா கோயில், கர்நாடகா
யுனெஸ்கோவின் அங்கீகாரம் பெற்ற ஸ்ரீ விருபாக்ஷா கோயில் கர்நாடக மாநிலம் ஹம்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசு தோன்றுவதற்கு முன்பே இந்த ஆலயம் உருவானது. இது ஒரு சிறிய கோவிலாக ஆரம்பிக்கப்பட்டு இன்று பரந்த வழிபாட்டு தளமாக மாறியுள்ளது. புண்ணிய தலங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.
View this post on Instagram
பிரம்மாஜி கோவில், ராஜஸ்தான்
புஷ்கரில் அமைந்துள்ள இந்த ஆலயம் உலகிலேயே பிரம்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே ஆலயம். கோயிலின் அடித்தளம் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலின் உச்சியில் ஸ்வான் மாளிகையுடன் கூடிய தனிச்சிறப்பு வாய்ந்த சிவப்பு நிற சிகரம் உள்ளது.
கைலாச கோவில், மகாராஷ்டிரா
கைலாச கோவில் முழுவதும் ஒரு பாறையில் செதுக்கப்பட்ட ஒன்று. இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.எல்லோரா குகைகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
லிங்கராஜா கோவில், ஒடிசா
சிவபெருமானுக்கு உரிய இந்த ஆலயம் 10 ஆம் நூற்றாண்டில் மன்னர் ஜஜாதி கேசரியால் கட்டப்பட்டது. கலிங்க கட்டிடக்கலையின் உருவகமாக விளங்கும் இக்கோயில் ரெட்ஸ்டோன் கட்டுமானத்தைக் கொண்டுள்ளது. பெரிய நிலப்பரப்புகளை உள்ளடக்கிய இந்த கோவிலின் வளாகத்தில் 150 சிறிய கோவில்கள் உள்ளன. பிரதான அமைப்பு 54.86 மீட்டர் உயரத்தில் உள்ளது.