மேலும் அறிய
Father - Children Relationship: எச்சரிக்கை! அப்பாவின் மனசோர்வு குழந்தையை பாதிக்கக்கூடும்! எப்படி தெரியுமா?
பெற்றோரின் மனசோர்வு என்பது கண்டிப்பாக குழந்தைகளின் மனநிலையை, மாற்றக்கூடும் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்
தந்தையின் மனசோர்வு அவரின் குழந்தைகளின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என மருத்துவ ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பாவின் சோகமான மனநிலை குழந்தையின் இளமைப்பருவத்தில் அவர்களின் மனசோர்வையும் அதிகரிக்கும். மேலும் பெற்றோரின் மனசோர்வு குழந்தைகளின் மனநிலையில் பாதிப்பை மேலும் அதிகரிகரிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது என ‘டெவலப்மென்ட் அண்ட் சைக்கோபாதாலஜி’ இதழில் தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சி தரும் ஆய்வு :
சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை நிதியுதவி பெற்ற ஆசிரிய உறுப்பினர் மற்றும் உளவியல் மற்றும் மனித மேம்பாடு மற்றும் குடும்ப ஆய்வுகளின் புகழ்பெற்ற பேராசிரியரும் Jenae Neiderhiser இந்த பிரச்சனை குறித்த தனது கருத்தினை தெரிவிக்கையில், பல ஆராய்ச்சிகள் உயிரியல் ரீதியாக தொடர்புடைய குடும்பங்களுக்குள் ஏற்படும் மனசோர்வை மையமாக வைத்து ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்றைய சூழலில் தத்தெடுக்கப்பட்ட குடும்பங்கள் அல்லது கலப்பு குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தகவல்கள் அவர்களின் மூலம் பெறப்படுகிறது.

ஒரு ஆய்வில் 720 குடும்பங்கள் கலந்து கொண்டன. அதில் பாதிக்கும் மேலான குடும்பங்களில் உள்ள குழந்தைகள் மாற்றான் தாயிடம் வளர்ந்து வருகின்றன. இந்த சூழலில் பெற்றோர்களுக்கும் இளமை பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கும் இடையில் மரபணு தொடர்பாக இயற்கையாகவே நிகழும் மாறுதல்களை பற்றி ஆய்வு செய்தனர். அதில் தந்தைக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ஒரு ஈடுபாடு இல்லாமலும் அவர்களின் மனநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதை அவர்களின் செயல்களில் தெளிவாக வெளிப்பட்டன என்றார்.
பிரச்சனை :
மேலும் இந்த ஆராய்ச்சி பற்றி கூறுகையில் "குடும்பங்களுக்குள் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் தந்தைக்கும் ஒரு குழந்தைக்கும் உயிரியல் ரீதியாக தொடர்பு இருந்தாலும் மற்றும் ஒரு குழந்தையோடு தொடர்பு இல்லாததால் அவர்களுக்கு இடையில் ஒரு நல்ல உறவுமுறை இருப்பதில்லை. இதன் விளைவாக இருவருக்கும் இடையில் மோதலை ஏற்படுத்துகிறது. நிச்சயம் டீனேஜ் பருவத்தில் அவர்களின் மனநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

மரபணு ரீதியாக தொர்புடைய பெற்றோர்- குழந்தைகள் இடையே இருக்கும் பாதிப்பு நிச்சயம் வலுவானதாக இருக்கும். பெற்றோரின் மனசோர்வு என்பது கண்டிப்பாக குழந்தைகளின் மனநிலையை, மாற்றக்கூடும் என்பதால் அதற்கான தீர்வினை பெற்றோர்கள் உடனடியாக செயற்படுத்த வேண்டும்.
இந்த நடத்தை பிரச்சனையின் காரணியாக இருப்பது மரபணு ரீதியா அல்லது சுற்றுச்சூழல் விளைவுகளா என்று பிரித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம் அறியலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் படிக்கவும்