மேலும் அறிய

யானைகள் பற்றி நீங்கள் அறியாத 8 சுவாரஸ்யங்கள் இதோ!

யானைகள் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாம்.

யானைகள் எதையும் மறக்காது:

நிலத்தில் வாழும் பாலூட்டி உயிர்களிலேயே மிகப் பெரிய மூளையையுடைய விலங்கு யானை. தூரத்தில் இருக்கும் நீர் நிலைகள், மற்ற யானை கூட்டங்கள், பார்த்த மனிதர்கள் ஆகிய பலவற்றைப் பல ஆண்டுகளுக்கும் கூட நினைவில் வைத்திருக்கும் திறனுடையவை. 

யானைகள் பற்றி நீங்கள் அறியாத 8 சுவாரஸ்யங்கள் இதோ!
அதுவுமில்லாமல் தங்களுடைய அறிவை ஒவ்வொரு தலைமுறைகளுக்கும் கடத்துகின்றன. இதன் மூலம் தொலை தொலைதூரத்தில் உணவு கிடைக்கும் இடங்களையும் நினைவில் வைத்திருக்கும். இன்னும் சுவாரசியமாக, எந்த சீசனில் எந்த பழம் எங்கு கிடைக்கும் என்பதை கூட சரியாக நினைவில் வைத்திருக்குமாம். 

யானைகளால் மனித மொழிகளை பிரித்தறிய முடியும்:

யானைகளால் மனிதர்களின் மொழிகளைப் புரிந்துக் கொள்ள முடியுமாம். கென்யாவில் யானைகளை வேட்டையாடும் குழு ஒன்றை வைத்தும், சாதாரண குழுவையும் யானைகள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் வேட்டையாடும் குழுவினரின் குரலைக் கேட்டதும் யானைகள் கூட்டாக ஒன்று சேர்ந்து, தற்காக்கும்  முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. ஆனால், சாதாரண குழுவினரின் பேச்சுகளைக் கேட்டு அவை பயப்படவில்லை. 

அதே பொல ஆசியாவை சேர்ந்த ஒரு யானை கொரிய மொழியில் சில வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு அவற்றை பேசவும் செய்திருக்கிறது. யானை வளரும்போது மனிதர்களுடன் இருந்த முதன்மை தொடர்பு காரணமாகத்தான் அப்படி பேசமுடிகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

யானைகளால் பாதங்களின் மூலமாக கேட்க முடியும்:

நாய்களைப் போலவே தரையில் கேட்கும் அதிர்வெண்களைக் கொண்டு யானைகளால் கேட்க முடியும். விரிவடைந்த காது எலும்புகள், பாதங்களிலும், தும்பிக்கையிலும்  நிறைவடையும் மெல்லிய நரம்புகள் மூலம் இந்த செயல் திறன் யானைகளுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

யானைகள் பற்றி நீங்கள் அறியாத 8 சுவாரஸ்யங்கள் இதோ!

யானைகள் உயிர் வாழ்வதில் இந்த உணர்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. எதாவது ஒரு யானை ஆபத்தில் சிக்கிக் கொண்டால் அருகில் இருக்கும் யானைகளை எச்சரிப்பது மட்டுமல்லாமல், மைல்களுக்கு அப்பால் வெகு தொலைவில் உள்ள தனது கூட்டத்தை சேர்ந்த மற்ற யானைகளுக்கும் ஆபத்தைப் பற்றி சிக்னல் அனுப்புகிறது. 

யானைகளால் நீந்த முடியும்:

யானைகள் தண்ணீரில் விளையாடுவதை பார்த்திருப்போம். தும்பிக்கைக் கொண்டு தன் மீதும் அருகிலிருப்பவர்கள் மீதும் தண்ணீரைப் பீய்ச்சியடித்து களி கொள்ளும். ஆனால் இவ்வளவு பெரிய உடலமைப்பைக் கொண்ட யானைகளால் நீந்த முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

யானைகள் பற்றி நீங்கள் அறியாத 8 சுவாரஸ்யங்கள் இதோ!

ஆம். உணவு தேடி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும்போது இடையில் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் இருக்கும். இதனால் நீந்த தெரிந்திருப்பது யானைகளுக்கு மிகவும் அவசியம். அப்படி நீந்தி கடக்கும்போது தும்பிக்கையை உயர்த்தி சுவாசித்தப்படி பயணிக்குமாம். 

உணர்ச்சிவசமிக்கவை யானைகள்:

யானைகள் மிகவும் புத்திக்கூர்மை வாய்ந்தவை. மனிதர்களைப் போலவே இரக்கம், பரிவு, பாசம் போன்ற குணங்கள் யானைகளுக்கும் உண்டு. ஒரு ஆய்வின் முடிவில், ஒரு யானை சோகமாக இருந்தால் அருகிலிருக்கும் யானை மனிதர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சமாதானப்படுத்துவது போலவே அந்த யானையை சமாதனப்படுத்துவது தெரிய வந்தது.

யானைகள் பற்றி நீங்கள் அறியாத 8 சுவாரஸ்யங்கள் இதோ!

ஒரு யானை நோய்வாய்ப்பட்டாலோ, அடி பட்டாலோ மற்ற யானைகள் அருகிலிருந்து அக்கறையாகப் பார்த்துக் கொள்ளுமாம்.

தந்தம் இல்லாமல் உயிர்வாழ முடியாது:

யானைகளின் தந்தம் 40,000 தசைகளைக் கொண்டது. அது மிகவும் சக்திவாய்ந்தது, அதே போல மிகுந்த உணர்திறன் மிக்கது. பல்வேறு காரணங்களுக்காக தனது தந்தத்தை பயன்படுத்துகின்றன யானைகள். அதில் முக்கியமானது வாசனை நுகர்வுத்திறன்

மண்ணை சன்ஸ்கீரினாக பயன்படுத்தும்:

யானைகள் பற்றி நீங்கள் அறியாத 8 சுவாரஸ்யங்கள் இதோ!
யானைகளின் தோல் மிகவும் சென்சிட்டிவானது. சூரிய கதிர்களால் ஏற்படும் அலெர்ஜிக்களிலிருந்து தற்காத்துக் கொள்ளதான் தம்மீது மண்ணைப் பூசிக் கொண்டு நடக்கின்றன.

இறந்து போன யானைகளை மதிக்கும் திறனுடையவை:

யானைகளின் தோலைப்போலவே அவற்றின் மனதும் சென்சிடிவ் ஆனது.  ஒரு யானை இறந்துபோன பிறகு, யானைகள் திரும்பி வந்து மிஞ்சியிருக்கும் எலும்புகளை தங்களது கால்களாலும், தந்தங்களாலும் தொட்டு மரியாதை செலுத்துமாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget