மேலும் அறிய

Garlic Recipe : 10 நிமிடங்களில் பூண்டு ஊறுகாய் ரெடி.. எண்ணெய் மணக்க மணக்க.. இதுதான் ரெசிப்பி..

பூண்டு ஊறுகாய்,சுவைக்கு மட்டுமல்லாது,உடலுக்கும் ஆகச்சிறந்த நன்மைகளை தரும்.

ஊறுகாய் என்றால், ஊறிய காய், உறுகின்ற காய் மற்றும் ஊரும் காய் என மூன்று காலங்களையும் சேர்த்து குறிக்கும்.இதற்கு என்ன பொருள் என்றால் மூன்று காலங்களிலும் உப்பு போன்ற பொருளில் ஊறிக் கொண்டே இருக்கும் என்று ஒரு அர்த்தமும்,எக்காலத்திலும் பயன்படுத்தலாம் என்ற மற்றொரு அர்த்தமும் இதில் அடங்கி இருக்கும்.

இப்படியான ஊறுகாய் என்றதும், அனைவர் வாயிலும் எச்சில் ஊரும். இந்த ஊறுகாய்க்கு அச்சாறு என்ற மற்றும் ஒரு பெயரும் உண்டு.

மாம்பழம், எலுமிச்சை, கேரட், பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், இஞ்சி, பூண்டு, புளிச்சக்கீரை,புதினா மற்றும் தக்காளி நிறைய ஊறுகாய்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். அசைவத்திலும் கூட இறால் ஊறுகாய் மீன் ஊறுகாய் என பல விதங்களிலும் ஊறுகாய்கள் நம் நாவை நடனமாட வைக்கின்றன. உப்பு கண்டம்  மற்றும் கருவாடும் கூட ஒரு வகையில் காய்ந்த ஊறுகாய் என்றே நாம் சொல்ல வேண்டும்.

இப்படியான இந்த ஊறுகாய்களுக்கு இந்தியாவைப் பொறுத்தவரை ஆகச்சிறந்த வரவேற்பும்,தனி ரசிகர் கூட்டமும் உண்டு. பொதுவாக தயிர் சாதம்,எலுமிச்சை சாதம் மற்றும் தக்காளி சாதம் போன்ற சாத வகைகளுக்கும் இந்த ஊறுகாய்களில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டு சாப்பிடும் பழக்கம் நம் மக்களிடத்தில் இருக்கிறது.இப்படி இந்தியர்கள் அனைவர் வீடுகளிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும் இந்த ஊறுகாய்கள் மது பிரியர்களையும் விட்டு வைப்பதில்லை. இந்தியாவில் ஏதாவது ஒரு விருந்திற்கு நாம் சென்றால், இலையில் முதலில் இனிப்பும்,பிறகு உப்பும், அடுத்ததாக ஊறுகாயும் வைக்கும் பழக்கம் தோன்றுதொட்டு தொட்டு நம் மரபில் இருக்கிறது.

இப்படிப்பட்ட ஊறுகாயின் அடிப்படை என்னவென்று நாம் பார்த்தால்  எண்ணெய் மற்றும் உப்பில் ஊறி இருப்பது. இந்த இரண்டும் சேர்ந்து ஊறிக் கொண்டே, அந்த பொருளில் பாக்டீரியா உருவாகி கெட்டுப் போவதை தடுக்கின்றது.

இப்படியான ஊறுகாய்களில் பூண்டு ஊறுகாய்க்கு என்று தனி சுவையும், ரசிகர் கூட்டமும், நிறையவே இருக்கிறது. இந்த பூண்டு ஊறுகாயை பொருத்தவரை, துணை உணவாக தொட்டுக்கொள்ள என்று மட்டும் இல்லாமல்,வெறும் சோற்றுடன் இதை பிணைந்து சாப்பிடவும் மக்கள் விரும்புகிறார்கள். 

இப்படிப்பட்ட இந்த பூண்டு ஊறுகாய் குறுகிய நேரத்தில் எவ்வாறு தயாரிப்பது என்று பார்ப்போம். தோல் உரித்த அரை கிலோ பூண்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.இதை நீராவியில் இட்லிக்கு அவிப்பது போல அவித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக ஊறுகாய்கள் தயாரிப்பதற்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஆகச் சிறந்ததாக இருக்கும்.  நல்லெண்ணெய் சிறிது தாளிப்பதற்கு எடுத்துக் கொண்டு அதில் கடுகை இட்டு வெடித்து வந்ததும்,எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். ஆவியில் அவித்து ஆற வைத்த பூண்டில் மிளகாய் தூள்,மஞ்சள் தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் மற்றும் உப்பை சேர்க்கவும். இந்த கலவையில் கொதிக்க வைத்த எண்ணெயை  ஊற்றி நன்றாக கிளறி விடவும்.
இதில் இந்த கலவைக்கு மேலாக   எண்ணெய் மிதக்கும் அளவிற்கு  இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஒரு இரண்டு மணித்தியாலங்களுக்கு பிறகு,சூடு ஆறிய பின் இந்த சுவை மிகுந்த ஊறுகாய் சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும்.

இப்படி தயாரான பூண்டு ஊறுகாயை காற்று போகாத கொள்கலன்களில், அடைத்து,ஆக குறைந்தது 3 மாதங்கள் பயன்படுத்தலாம். மூன்று மாதங்களுக்குப் பிறகு, வெயில் படும்படியோ அல்லது ஒரு பாத்திரத்தில் இந்த ஊறுகாயை இட்டு சூடு செய்து  பயன்படுத்தலாம்.

இப்படி தயாராக இருக்கும் இந்த பூண்டு ஊறுகாய்,சாப்பிடுவதற்கு ஒரு உற்ற,தொடுபொருளாக இருக்கும். இந்த பூண்டு ஊறுகாய்,சுவைக்கு மட்டுமல்லாது,உடலுக்கும் ஆகச்சிறந்த நன்மைகளை தரும். அவை என்னவென்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1.சளி குணமாக்கும் பூண்டு ஊறுகாய்.

 பூண்டின் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்காக   உணவில்,குறிப்பாக இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உங்கள் ஒவ்வொரு உணவிலும் சிறிது பூண்டு ஊறுகாயைச் சேர்ப்பது உங்கள் உடலை ஜலதோஷம் மற்றும் காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும்.

2. இதயத்திற்கு இதமான பூண்டு

 ஒரு மனிதனுக்கு இதயத்தில் அடைப்பு வருவதற்கு முக்கியமான காரணம் அங்கு ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பு ஆகும். பூண்டு என்பது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் ஒரு மந்திரப் பொருளாகும். இது மட்டுமன்றி  அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் இந்த பூண்டு கொண்டுள்ளது. இதயத்திற்கு மட்டுமின்றி இரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புகளை கரைப்பதிலும்,பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.

3.இரத்த சுத்திகரிப்பானாக செயலாற்றும் பூண்டு.

இயற்கையாகவே பூண்டானது ஒரு கிருமி  நாசினியாகும். ஆகையால் இது ரத்தத்தை சுத்திகரிக்கிறது. மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் இந்த பூண்டனது உதவுகிறது.

இப்படி பூண்டு கலந்து செய்யப்படும் இந்த ஊறுகாயை தினமும் உட்கொள்வதினால், கொழுப்பு, இரத்த சுத்தப்படுத்துதல் மற்றும் நாவிற்கு சுவை என நம்மால் நிறைய நன்மைகளை பெற முடியும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?
ஓடும் பேருந்தில் சில்மிஷம்! வீடியோ வெளியிட்ட பெண்! உயிரை மாய்த்த பயணி!
மீண்டும் மீண்டுமா... தெறி ரிலீஸ்-க்கும் சிக்கல்! மோகன் ஜி-யால் புது பஞ்சாயத்து
AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
உண்ணாவிரதம்: முன்னோர் வாழ்வியல் முதல் புற்றுநோய் வரை! விரதத்தின் ரகசியங்கள், நன்மைகள்- மருத்துவர் விளக்கம்
Embed widget