தேவையற்ற கொழுப்பைக் குறைக்க வேண்டுமா? நிபுணர்கள் பரிந்துரைக்கும் மேஜிக் டிரிங்க் - ரெசிபி இதோ!
இன்ஃப்ளமேசன் பாதிப்பை குறைக்க உதவும் டிரிங்க் தயாரிப்பு முறை பற்றி இங்கே காணலாம்.
தேவையில்லாத, ஆரோக்கியமற்ற கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேர்வது இயல்பானது. அப்படி நீண்ட நாள்களாக வயிற்றுப் பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரா கொழுப்பை குறைக்க திட்டமிடுபவரா? உங்களுக்காக நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
உடல் எடையை குறைப்பதை விட முக்கியமானது ஆரோக்கியமாக இருப்பது. உடல் எடை நிர்வாகம் அவசியமானது. உடல் பருமன் பிரச்னை இருப்பவர்கள் அதற்கு தேவையானதை செய்யலாம். அதற்கு முன், குடல் ஆரோக்கியம், ’Inflammation’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
Inflammation:
’Inflammation’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இது வைரஸ், தொற்று, கிருமி ஆகியவற்றிற்கு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் இயற்கையான ரெஸ்பான்ஸ் ஆகும். இன்ஃபளமேசன் என்பது உடல் நோய்தொற்றுக்கு எதிராக போராடும் திறன், உடலில் உள்ள செல்கள், Tissue ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டால் அதை சரிசெய்வதற்கு, மீட்டுருவாக்கம் செய்ய நோய் எதிர்ப்பு மண்டலம் மேற்கொள்ளும் பாதுகாப்பு மெக்கானிசம் ஆகும். ஆனால், க்ரானிக் இன்ஃப்ளமேசன் ஏற்பட்டால் உடல்நிலை பாதிக்கப்படும். பல்வெறு நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஊட்டச்சத்து இல்லாத துரித உணவுகள், மன அழுத்தம், அடிக்கடி மைதா உள்ளிட்ட ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, போதிய தூக்கமின்மை உள்ளிட்ட பல காரணங்களால் Chronic inflammation நிலை ஏற்படும். இது ’cortisol' அளவை அதிகரித்துவிடும். cortisol ஹார்மோன் அதிகரித்தால் அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்துவிடும். தொப்பை ஏற்படுவதற்கு காரணாம் அதிகமாக சாப்பிடுவது மட்டுமல்ல. ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது, cortisol ஹார்மோன் அளவு அதிகரிப்பது ஆகியவற்றின் காரணமாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேரலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் Inflammation அளவை குறைக்க வேண்டும். அதற்கு உணவு பழக்கங்களில் மாற்றம், சீரான உடற்பயிற்சி, மன அழுத்த நிர்வாகம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். உடல் எடல் குறை வேண்டும் எனில் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிப்பது, வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துதல் உள்ளிட்ட சிலவற்றை மேற்கொள்ள வேண்டும்.
- இதற்கு உதவும் எனர்ஜி டிரிங்காக ஊட்டச்சத்து நிபுணர் நேகா பாரிகர் பரிந்துரைப்பதை காணலாம்.
- இஞ்சி, மஞ்சள், நெல்லிக்காய், ஆரஞ்சு உள்ளிட்ட பொருட்களை வைத்து மேஜிக் டிரிங்க் தயாரிக்கலாம்.
- இஞ்சி, ஃப்ரெஷ் மஞ்சள், ஆரஞ்சு ஆகியவற்றை தோ நீக்கவும். இதை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
- மிக்ஸி ஜாரில், நறுக்கியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதில் மிளகு தூள், தேன் அல்லது உப்பு சிறிதளவு சேர்க்கலாம்.
- அரைத்த ஜூஸை வடிக்கடி காலையில் வெறும் வயிற்றில் அருந்தலாம்.
- cortisol ஹார்மோன் அளவு, Inflammation அளவை குறைக்க பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
View this post on Instagram
மஞ்சளில் Curcumin என்ற பொருள் நிறைந்திருக்கிறது. இது ஆன்டி- இன்ஃப்ளமேட்ரி பண்பு கொண்டது. மிளகு Curcumin முறையாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்யும். இஞ்சி செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நெல்லிக்காயில் வைட்டமின் சி இருக்கிறது. ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின் சி உடன் இனிப்பு சுவையும் இருக்கிறது. காலையில் எழுந்ததும் காஃபி, டீ குடிப்பதை தவிர்த்து ஆரோக்கியமாக அன்றைய நாளை தொடங்க இதை ட்ரை பண்ணுங்க.