மேலும் அறிய

நாய் சாதியும், சாதி நாயும்... நாய்கள் பற்றி தெரியவேண்டுமா உங்களுக்கு...?

ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் 2020 ல் “நாய் சாதியும் சாதி நாயும்” என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.  அதில் இப்பெயர் நாய்களுக்கு வந்ததற்கான காரணம் என்னவாக இருக்குக் கூடும் என்பதை அறிஞர் அயோத்திதாசர் கூற்றை அடிப்படையாகக் கொண்டு விளக்கி, கூடவே வேறு எந்தச் சாதிப்  பெயரிலும் இப்படி ஒரு நாயினம் இருப்பதாகக் தனக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

                                              வேட்டைத் துணைவன் - 3

வேழம், களிறு, களபம், மாதங்கம் என அறுபது பழந்தமிழ் பெயர்களுக்குப் பக்கமாக அடையாளப்படுத்தப்படும் யானைகளோடு ஒப்பிடும் போது நாய்களுக்கென்றுள்ள பெயர்கள் சொற்பம் தான். சங்க இலக்கியங்களில் “ஞமலி, ஞாளி, கதநாய்” எனச் சில அகப்படுகிறது. அதனோடு வாழ்ந்த விளிம்புநிலை மக்களின் வாழ்வும் கொஞ்சம் புலப்படுகிறது.

நாய் சாதியும், சாதி நாயும்... நாய்கள் பற்றி தெரியவேண்டுமா உங்களுக்கு...?

பிரித்தானியர் ஆட்சி காலத்தில் இன்றைய indigenous breeds அல்லாத நாட்டு நாய்களுக்கு பொதுவாக “பறையா நாய்கள் “ என்ற பெயர் வழங்கப்பட்டது. சக மனிதன் மீது அக்கறையும், மரியாதையும் கொண்ட எவரையும் முகம் சுளிக்க வைக்கும் பெயர்தான். நம் மண் மீதும் மக்கள் மீதும் எந்தவிதத்திலும் பிணைப்பல்லாத அந்நியரால் இப்பெயர் குறிக்கப்பட்டது எப்படி? உலகம் முழுவதும் இயற்கை தேர்வில் உருவான பல landrace  நாய்களுக்கு இப்பெயர் பொதுவானது எப்படி? 1960 ஆம் ஆண்டு “இஸ்ரேல்” நாட்டின் நாட்டு நாய்களை ஆய்வு செய்த “Dr. R. Menzle  மற்றும் Dr. Rudolphina menzal “ தன் புத்தகத்திற்கு “Pariahunde” எனப் பெயர் வைக்க என்ன முகாந்திரம் இருக்கும்? போன்ற கேள்விகளை இந்த இடத்தில் நாம் முன்வைக்க வேண்டியது அவசியமான ஒன்றாகிறது.

பதினேழாம் நூற்றாண்டிலேயே இப்பெயர் நாட்டு நாய்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பிரித்தானியர்கள் எழுதிய தமிழகத்தின் பிரதேச வாரியான கெசட்டுகள்,இந்தியாவுக்கு வந்திருந்த பிரித்தானிய  இயற்கை விரும்பிகள்  மற்றும் வேட்டையடிகளின் குறிப்புகள் என அத்தனையிலும் இதே பெயர் எடுத்தாளப்படுகிறது. அங்கு இருந்தே இச்சொல் ஆங்கில அகராதி வரைக்கும்  சென்றது.

1892 ஆம் ஆண்டு Thomas Brown  எழுதி வெளியான “Biographical sketches and authentic anecdotes of dogs” என்ற புத்தகத்தில் ஒரு வரி உண்டு.

“if a man go single for hunt. Pariah give a best service” என்று, இந்த வாக்கியத்தில் “pariah “ என்று thomas brown குறிப்பிடுவது, முன்னவர்கள் “பறையா நாய்கள் “ என்று குறிப்பிட்ட நாட்டு நாய்களையே ! அதே புத்தகத்தில், கிராமங்களில் புலிவேட்டைக்கு சில தன்னார்வலர்கள் முன்வருவதாகவும் அவர்களோடு “பறையா நாய்கள்” பங்கேற்பதாகவும் குறிப்பிடுகிறார்.

பாளையக்காரர்களின் எழுச்சி, பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சி என பல முக்கிய நிகழ்வுகளை நேரத் துல்லியதோடு பதிவு செய்த col. James welsh, தனது “Military Reminiscences,  extracted from a journal of nearly forty years active service in the east indies” என்ற புத்தகத்தில் 1812 ஆம் ஆண்டு, பதினோராம் தேதி, மாலை ஐந்து மணிக்கு மைசூர் ராஜாவின் அரண்மனையில் தான் கண்ட காட்சியை விவரிக்கிறார். பலர் முன்னிலையில் ஒரு நலிவுற்ற புலியை ‘பறையா நாய்களை’ கொண்டு தாக்குதலுக்கு உள்ளாக்கியதாகவும். பின் அதை அம்பு எய்து கொல்ல ராஜா தனக்கு ஒரு வாய்ப்பு தந்ததாகவும் அதை தான் ஏற்றதாகவும் குறிப்பிடுகிறார்.

இவ்வாறான பெயர் பிரயோகம் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் கல்வி பயின்று வந்த பலரிடமும் காணப்படக்கூடிய ஒன்றாக இருந்திருக்கிறது. 1963 ஆம் ஆண்டு, முழுக்க முழுக்க இந்திய நாயினங்களைப் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கி வந்த  “The indian dog”  புத்தகத்தை எழுதிய W. V. Soman, ஏனைய இனங்களுக்கு படமும் குறிப்பும் கொடுத்து விளக்கிவிட்டு, நாட்டு நாய்களுக்கு ஒரு கட்டுரையை ஒதுக்குகிறார். அதற்கு அவர் இட்ட தலைப்பு “pariah dog” என்பதுதான்.

ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் 2020 ல் “நாய்ச்சாதியும் சாதிநாயும்” என்ற தலைப்பில் சுவாரஸ்யமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.  அதில் இப்பெயர் நாய்களுக்கு வந்ததற்கான காரணம் என்னவாக இருக்குக் கூடும் என்பதை அறிஞர் அயோத்திதாசர் கூற்றை அடிப்படையாகக் கொண்டு விளக்கி, கூடவே வேறு எந்தச் சாதிப்  பெயரிலும் இப்படி ஒரு நாயினம் இருப்பதாகக் தனக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத்தின் பிற கால்நடைகளுக்கு பெயர் எப்படி அமைந்துள்ளது எனக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஆடுகளையே முதலில் எடுத்துக்கொள்ளவோம்.

எட்டையபுரம் ஆடு, சேலம் கருப்பாடு, கச்சைக்கட்டி ஆடு,  தெக்கத்தி ஆடு என்ற இடப்பெயரையோ,  பொட்டு ஆடு, போர் ஆடு என்ற  நிறப்பெயரயோ ( சினைப்பெயரையோ) இனப் பெயராகக் கொண்டு வருகின்றன.  மாடுகளை எடுத்துக்கொண்டால் தென்பாண்டி மாடு, காங்கேயம் மாடு,  புளியங்குலம் மாடு, உம்பளாச்சேரி மாடு என்ற இடப்பெயரியோ செவல மரை,  மைலக் காளை, காரிக் காளை என்ற நிறப்பெயரையோ கொண்டு வருகின்றன... அப்படியே இதை நாய்களுக்கும் பொருத்திப் பார்த்தால் இராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை என்று எல்லாமுமே இடப் பெயர்கள்.செம்மரை, சாம்ப என நிறப் பெயர்களும் உண்டு. கூட்டாக குறிக்க  இடமே பிரதானம். கிடையை காத்துக் கிடைப்பதால் தான் கிடை ஆடு, கிடை மாடு.. அதுக்கு காவல் இருப்பதால் தான் கிடை நாய் / பட்டி நாய் . தெருவிலே திரிவதனால் தெருநாய். பிரத்தியேக இன அடையாளம் இல்லாது இருந்தால்  நாட்டு மாடு – நாடு ஆடு- நாட்டு நாய்.

இதில் எங்கும் சமூகங்கள் தொடர்பு படவில்லையே . அப்போது எந்த நாய் இனத்திற்கும் சமூகத்தோடு குறிக்கும் வழக்கம் கிடையாதுதானே என்றால்,  அப்படி அல்ல,  .

மேற்கூறிய முறையானது நமது வழக்கில் உள்ள பெயரிடும் முறை. ஆனால் பிரித்தானியர்கள் பெயரிடும் முறையானது முற்றிலும் வேறானது. அடிப்படையில் நாய்கள் மீது அதீத ஆர்வம் உள்ள அவர்கள் நாய்களை அதனோடு தொடர்புடைய மக்களின் சமூகத்தோடு ஐக்கியப் படுத்தியே  இனம் குறித்தனர்.  உதாரணமாக,

Banjara  பழங்குடிகள் வைத்திருந்த வேட்டை நாய்களை banjara hound  என்றும், vagri  பழங்குடிகள் வைத்திருந்த வேட்டைநாய்களை vaghari hound என்றும், Bakarwal இன மக்கள் வளர்த்த பரும் உடல் கட்டு கொண்ட நாய்களை Bakarwal dogs  என்றும்,  Gaddi என்ற ரஜபுத்திர குடிகள் வளர்த்த நாய் இனத்தை Gaddi dogs என்றும், மராட்டா குடிகள் வளர்த்த வேட்டை நாய் இனத்தை Mahratta  hound என்றும், Poligars  என்று பிரித்தானியர்கள் குறிப்பிடும் தமிழகத்தின் பாளையக்கார்கள் கொண்டு வந்த நாய்களை poligar hounds  என்றும்தான் பல புத்தகங்களில் பதிவு செய்தனர். இவை பெரும்பாலும் வெளியில் இருந்து வந்தவை. ஆனால் நாட்டு நாய்கள் aboriginal – landrace dogs. அதோடு இங்கு தொடர்பில் உள்ளவர்கள் முன்பே நாம் பார்த்தது போல எளிய விளிம்பு நிலை மக்கள். எனவே இப்படியான பெயர் அன்றைய மதராஸ் மாகாணத்தில் எடுத்தாளப்பட்டு இருக்கலாம்.

பிற தேசத்தவர்கள்  பலர் இப்பெயர் தமிழின் பூர்வ குடி மக்களை குறித்தே சூட்டப்பட்டது என்பதை அறியாது இருக்கக்கூடும். ஆனால் இங்கு உள்ள சகலமும் தெரிந்த பலருக்கு இது தெரிந்தே இருக்கும் அல்லவா? கொஞ்சம்  கூட தயக்கம் இன்றி அதையே அவர்களுக்கு பிடித்து தொங்கியதுதான் கொடுமை.

இந்தியாவின் முன்னோடி காட்டுயிர் புகைப்பட கலைஞரும் காட்டுயிர் ஆர்வலருமான “மா. கிருஷ்ணன்” கோவில் சிற்பங்களில் கடவுளர்களுடன் இடம் பெற்ற மிருங்கள் குறித்து சுவாரசியமான கட்டுரைகள் சிலவற்றை எழுதி இருந்தார்.  1975 ஆம் ஆண்டு புதுக்கோட்டை அருகே மருதம்பட்டியில் உள்ள கோவிலில்  நாயுடன் இருக்கும் பைரவர் சிலையை  மா.  கிருஷ்ணன்  புகைபடம் எடுத்ததுடன்,

“இந்த நாய்கள் பன்றி வேட்டைக்கும், பட்டிக் காவலுக்கும் பயன்படுத்தபடும் சுத்தமான பறையா நாய். இவை இன்றைய indigenous இனங்களான இராஜபாளையம், ராம்பூர், முதோல் இனங்களுக்கு முற்பட்டது . அவை எல்லாம் “Grey hound”, “சலுக்கி” போன்ற exotic இனங்கள் மூலம் இந்தியாவுக்கு அறிமுகமாகி 400 ஆண்டுகளே ஆகிறது. இந்த பறையா நாய் இனமோ இவற்றுக்கு எல்லாம் முந்தியது” என்று சொல்லி கூடவே சிற்பத்தில் உள்ள அந்த நாயின் உடல் அமைப்பையும் மிக கச்சிதமாக குறிப்பு எடுத்துத்திருக்கிறார்.

வரும் தொடர்களில் மிக முக்கியமான பல கதவுகளை நமக்கு திறந்து தர உள்ள மா. கிருஷ்ணன் அவர்களின் மிக முக்கியமான அவதானிப்பு இது.

ஒரு நெடிய தொடர் தரவின் பிடி அறுபடாமல் தொடர்ந்து தகவல் பெற்றுக் கொண்டு முன் நகரவேண்டுமெனில்  ஒரே பெயர் கொண்டு அழைப்பதே  சரி  என்ற வாதத்தை சிலர் முன்வைக்கலாம். இருக்கலாம்தான் .ஆனால் இதே பெயர் பலரால் பல இடங்களில் தங்கள் சாதி மேட்டிமை பொருட்டு பிறரை இழிவு செய்ய பயன் பட்டும் இருக்கும் என்பதை எவராலும் புனுகு பூசி மறைக்கவோ மறுக்கவோ  முடியாது.

முன்பு குறிப்பிட்ட Banjara hound, Maratta hound   எல்லாவற்றுக்கும் இங்கு பெரிய விற்பனை சந்தை உண்டு. இன்று எல்லா வற்றுக்கும் வேறு பெயர்கள் வந்துவிட்டது.  நாட்டு நாய்கள் தவிர. எந்தக் கிராமத்திலும் நாட்டு நாயைக் குறிக்க “பறையா நாய்” என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை. சட்டம் கல்வி, பகுத்தறிவு என்பதால் மட்டுமே அல்ல.   பேச்சில் நாய்களை குறிக்க  இவை அதிகம் பழக்கத்தில் இல்லாத ஒன்று என்பதால்.  ஆனால் இவை எழுத்தில் உண்டு. என்பதை ஒருவரும் உணரவில்லை. உங்கள் தொடு திரையில் நாட்டு நாய்கள் பற்றி கொஞ்சம் ஆங்கிலத்தில் தேடிப் பாருங்கள் உங்கள் திரையை அதே பெயர் நிறைப்பதை  கண்டு நீங்கள் அதிர்ந்து போவீர்கள். அத்துணை பேரும் படித்தவர்கள்தான். இதில் என்ன  இருக்கிறது இதுதானே பெயர் சொல் வதற்கு என்ன வந்தது என்ற கணக்கில் துளியும்  அக்கறை இல்லாது போகிற போக்கில் எழுத்திச் செல்கிறார்கள். ஆக எதுவும் அதுவாக எதுவும் அழியாது நாம் குரல் எழுப்பாத வரையில்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Embed widget