மேலும் அறிய
Dental Hygiene | ஒழுங்கா பல் துலக்குறீங்களா? இந்த 5 தவறுகளை பண்ணவே பண்ணாதீங்க..!
பற்களை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். எதை எல்லாம் செய்யவே கூடாது என முதலில் தெளிவுபெறுங்கள். ஏனென்றால் பற்சுத்தம் இதய ஆரோக்கியத்துக்கு முக்கியமானது
![Dental Hygiene | ஒழுங்கா பல் துலக்குறீங்களா? இந்த 5 தவறுகளை பண்ணவே பண்ணாதீங்க..! Dental health Five common brushing mistakes that people make Dental Hygiene | ஒழுங்கா பல் துலக்குறீங்களா? இந்த 5 தவறுகளை பண்ணவே பண்ணாதீங்க..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/21/cdccd08671bd42b5c847dae817367906_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பல்_துலக்கும்_முறை
பல் மருத்துவரை பார்ப்பதே பலருக்கு பயத்தைத் தரும். ஆனால் பற்களையும் சுத்தமாக வைக்காமல், பல்வலி, ஈற்றில் இரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். பற்களை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். எதை எல்லாம் செய்யவே கூடாது என தெரிந்துகொள்வோம். பல் மருத்துவரை 3-6 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து பற்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பது அவசியம். நிறைய பேரு எப்படி பல் துலக்கனும்னு தெரியாம தப்பு தப்பா செஞ்சுகிட்டு இருக்கோம். அதை எப்படி சரி செய்யணும்னு தெரிஞ்சுக்கணும்.
- சரியான பிரஷ் தேர்வு செய்யணும். - ரொம்ப அழுத்தமான, கடினமான பிரஷ் பயன்படுத்துவது மட்டும்தான் பற்களை சுத்தமா வச்சுக்கும் என நினைத்து, அதை பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள். இது தவறானது. மிகவும் மென்மையான பிரஷ் பயன்படுத்தி லேசான அழுத்தத்துடன் பல் துலக்கினால் போதுமானது.
- கூச்சம் போக்க/ பல் வெண்மையாக்க சில பேஸ்டுகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள். அதை தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. பல் கூச்சம், வலி இருக்கும் சமயத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும். சிலர் தனக்கு இந்த பிரச்சனை தொடர்ந்து இருப்பதாக நினைத்து, தொடர்ந்து ஒரே பேஸ்ட் பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள். இது மிகவும் தவறான விஷயம். பிரச்னை முழுமையாக சரியாகிவிட்டதா என மருத்துவரை ஆலோசித்து, அதன் பிறகு பற்களை பாதுகாக்கும் முறைகளை மருத்துவரை கேட்டு தெரிந்துகொள்ளவும். பல் கூச்சம், இரத்தம் வடிதல், துர்நாற்றம் வீசுதல், ஈற்றில் வீக்கம் இது போன்ற பிரச்சனைகள் இருந்தால், மேலும் பற்களில் கறைபடிந்து இருந்தால் மட்டும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்த வேண்டும். பற்களை பாதுகாக்க பிளோரைடு கலந்த பேஸ்ட் வாங்கி பயன்படுத்துவது பற்களை பாதுக்காக்கும்.
- அடிக்கடி பல் துலக்குதல் - சிலர் ஒவ்வொருமுறை சாப்பிட்டு முடித்த பின்னும் பல் துலக்கும் பழக்கத்தை வைத்து இருப்பார்கள். இது மிகவும் தவறானது. இன்னும் சில 30 விநாடிகளுக்கு குறைவாக மட்டுமே பல் துலக்குவார்கள். இதுவும் தவறானது. காலை படுக்கையில் இருந்து எழுந்த பிறகும், மாலை, படுக்கைக்கு செல்வதற்கு முன்னும், பல் துலக்கினால் போதும். ஒரு நாளைக்கு இரண்டு வேலை பல் துலக்குவது அவசியம்.
- கடினமாக பல் துலக்குவது. - ஒரு நாளைக்கு 3-4 முறை வேகமாகவும், கடினமாகவும், பல் துலக்குவது, ஈறுகளை சேதப்படுத்தம். மென்மையாக பல் துலக்கும் முறைகளை கற்றுக்கொள்ள வேண்டும்.
- பல்துலக்கும் முறை - மேல் பற்களை மேலிருந்து கீழாக பிரஷ் கொண்டு தேய்க்கவேண்டும். கீழ் வரிசை பற்களை கீழிருந்து மேலாக தேய்க்கவேண்டும். இதேபோலதான் செய்யவேண்டும். இதுதான் சரியான பல் துலக்கும் முறை . வலது இடது பக்கமாகவோ, தேய்க்கக்கூடாது. இது ஈறுகளை சேதப்படுத்தும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
வணிகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion