Hyperuricemia: சிறுநீர் கழிக்கும்போது இந்த பிரச்சனையா? உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் என்னாகும்?
Hyperuricemia:யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது ஹைபர்யூரிசிமியா (Hyperuricemia) என்று அழைக்கப்படுகிறது.
நம் உடல் பல்வேறு வேதியல் மாற்றங்களுக்கு உட்படும் என்பது நாம் அறிந்ததே. யூரிக் அமிலம் (Uric acid) என்பது பியூரின்கள் ( purines) எனப்படும் கிரிஸ்டலைன் காம்பவுண்ட் உடையும்போது உருவாகும் ஒரு இரசாயனமாகும். பொதுவாக உடலில் பியூரின்கள் உற்பத்தி நடக்கும். மேலும் சில உணவுப் பொருட்களிலும் இது காணப்படுகின்றது. பியூரின்கள் நிறைந்த உணவுகளில் ஆட்டிறைச்சி கல்லீரல், நெத்திலி, உலர்ந்த பீன்ஸ், பட்டாணி மற்றும் பீர் ஆகியவை அடங்கும். யூரிக் அமிலத்தின் பெரும்பகுதி இரத்தத்தில் கரைந்து சிறுநீரகத்தை அடைகிறது. சிறுநீரகம் அதை சுத்தப்படுத்தி உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுகிறது.
கூடுதல், குறைவு இரண்டுமே உடலுக்கு நல்லது இல்லை. உடலில் யூரிக் அமிலம் அதிகமாக உற்பத்தியானாலோ அல்லது போதுமான அளவில் அவை உடலில் இருந்து வெளியேற்றப்படாவிட்டாலோ ஆபத்தானக்து. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பது ஹைபர்யூரிசிமியா (Hyperuricemia) என்று அழைக்கப்படுகிறது. இது அறிகுறி இல்லாத பிரச்சினையாக கருதப்படுகிறது.
யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் பொதுவான பிரச்சனைகளில், பாதங்களில் வலி, வீக்கம், விறைப்பு, கணுக்கால் வலி, கன்றுகளில் வலி, முழங்கால் மற்றும் மூட்டுகளில் வலி ஆகியவை அடங்கும். அதிகரித்த யூரிக் அமிலம் இரத்த பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. அதிகரித்த யூரிக் அமிலம் நீரிழிவு மற்றும் சிறுநீரக பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
ஆப்பிள், பேரிட்சை பழம், புளி, சப்போட்டா பழம், காய்ந்த திராட்ச்சை உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவும் உணவுகள்:
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )