Gas Cylinder Tips | உங்க சமையல் சிலிண்டர் பாதுகாப்பானதா? காலாவதி தேதி எப்படி பாக்கணும்? இதோ வழிகள்..
பொதுவாக நாம், உணவு, மருந்து பொருட்களுக்கு தான் காலாவதி தேதி என்று நினைத்திருப்போம். ஆனால் நம் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் அதாங்க கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
பொதுவாக நாம், உணவு, மருந்துப் பொருட்களுக்கு தான் காலாவதி தேதி என்று நினைத்திருப்போம். ஆனால் நம் வீட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் அதாங்க கேஸ் சிலிண்டருக்கும் காலாவதி தேதி இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இன்று நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் பயன்பாடு பெருகிவிட்டது. உஜ்வாலா யோஜனா திட்டம் என்ற திட்டம் மூலம் மத்திய அரசு அனைத்து வீடுகளுக்கும் கேஸ் சிலிண்டர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒன்று விறகுக்காக மரங்களை அழிப்பது குறையும். அதனால் மரபுசார் எரிசக்தி பயன்பாட்டை குறைக்கலாம். இரண்டாவது விறகுப் புகையால் பெண்களுக்கு டிபி நோய் வருவது குறையும். இந்த இரண்டு நோக்கங்களை முன்வைத்தே இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. சரி, இப்போது நாம் நம் மையப்புள்ளிக்கு வருவோம்.
கேஸ் சிலிண்டருக்கான காலாவதி தேதி குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விளக்கமளித்துள்ளது. எல்பிஐ சிலிண்டர் உருளையானது ஒருவகை பிரத்யேக உலோகம் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதனுள் பாதுகாப்பு பூச்சு இருக்கும். அனைத்து கேஸ் சிலிண்டர்களையும் BIS 3196 தரத்தில் தான் தயாரிக்கின்றனர்.
இந்த சிலிண்டர்களை சர்வ சாதாரணமாக எல்லோரும் தயாரித்துவிட முடியாது, BIS உரிமம் பெற்றவர்கள் மட்டுமே சமையல் சிலிண்டர்களைத் தயாரிக்க முடியும். அதேபோல் (CCOE) என்ற வெடிப்பொருட்களுக்கான தலைமைக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் மட்டுமே சிலிண்டர்களை தயாரிக்க முடியும்.
ஒவ்வொரு சிலிண்டரிலும் வெள்ளை நிறத்தில் அதன் எடை குறிப்பிடப்பட்டிருக்கும். அதே இடத்தில் தான் காலாவதி தேதியும் இருக்கும். ஆனால் அது மற்ற பொருட்களில், பண்டங்களில் உள்ளது போல் தேதி அடிப்படையில் இல்லாமல் குறியீடு அடிப்படையில் இருக்கும்.
குறியீட்டைக் கண்டுபிடிப்பது எப்படி?
A-23, B-23, C-24 அல்லது D-25 என்ற எண்கள், எழுத்துகள் அடிப்படையில் அந்த குறியீடு இருக்கும். இதில் ஏபிசிடி என்ற ஆங்கில எழுத்துக்கள் மாதங்களைக் குறிக்கும். A என்பது ஜனவரி டூ மார்ச் மாத காலம், B என்பது ஏப்ரல் டூ ஜூன், C என்பது ஜூலை டூ செப்டம்பர், D என்பது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தைக் குறிக்கும். அதேபோல் சிலிண்டரில் இருக்கும் எண்கள் ஆண்டைக் குறிப்பிடும்.
சரி, உங்களுக்கு வரும் சிலிண்டரில் A-22 என்று இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அப்படியென்றால் அந்த கேஸ் சிலிண்டர் 2022 ஆம் ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதத்துக்குள் காலாவதியாகிவிடும் என அறிந்து கொள்ளுங்கள். இனி சிலிண்டர் வாங்கும்போது நீங்களே செக் செய்து கேள்வி எழுப்புங்கள்.