மேலும் அறிய

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் - கண்களை பாதிக்கும் புதிய நோய்.. ஏன் வருகிறது? என்ன செய்ய வேண்டும்?

ஒரு நாளைக்கு 5-8 மணிநேரத்திற்கு மேலாக கம்ப்யூட்டரில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. தொடர்ந்து வருடக்கணக்கில் வேலை செய்வதால், கண்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கிறது.

நவீன உலகத்தில் அனைவரும் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரில் மட்டுமே வேலை என்றாகி விட்டது. ஒரு நாளைக்கு 5-8 மணிநேரத்திற்கு மேலாக கம்ப்யூட்டரில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. தொடர்ந்து வருடக்கணக்கில் வேலை செய்வதால், கண்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கிறது. நீண்ட நேரம் கம்ப்யூட்டர் பார்த்து கண்கள் பாதிக்கப்படும் நோய் தான் இந்த கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்  என்று அழைக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் - கண்களை பாதிக்கும் புதிய நோய்.. ஏன் வருகிறது? என்ன செய்ய வேண்டும்?

நோய் அறிகுறிகள் - கண் சோர்வு, கண் வலி, தலைவலி, கண் எரிச்சல், கண் நீர் வடிதல், பார்வை கோளாறு, கழுத்து மற்றும் தோள்பட்டை வலி  போன்ற அறிகுறிகள் தொடர்ந்து இருக்கும்.  இந்த அறிகுறிகள் ஆரம்ப நிலையில் இதை பற்றி பெரிதாக கவனம் கொள்ள மாட்டோம். ஆனால் நாளடைவில், இது பெரிய பிரச்சனையாக மாறும்.

யாருக்கு பாதிப்பு ஏற்படும். - ஒரு நாளைக்கு 3-5மணி நேரத்திற்கு கம்ப்யூட்டர் வேலை செய்யும் ஏறத்தாழ 75% பேருக்கு இந்த பிரச்னை ஏற்படும். கண் சிமிட்டாமல், நீண்ட நேரம் கம்ப்யூட்டர் திரையை பார்ப்பது, மற்றும், அதிக ஒளியுடன் திரையை வைத்து பார்ப்பது, பார்வை மேலும் அமரும் நிலை ஆகியவற்றால் இந்த நோய் வரும்.

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் - கண்களை பாதிக்கும் புதிய நோய்.. ஏன் வருகிறது? என்ன செய்ய வேண்டும்?

கண் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க சில டிப்ஸ்:

வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு கிடைக்கும் போதெல்லாம், கம்ப்யூட்டர் பயன்பாட்டை தவிர்த்திடுங்கள்.

இரவில் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது அறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதை உறுதி படுத்தி கொள்ளுங்கள். இருட்டான அறையில் அமர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்வது கண்களுக்கு அதிக ஸ்ட்ரைன் ஆகும். இரவு நேரம் பணி, பகலில் ஓய்வாக இருக்கும் பட்சத்தில் பகலில் போதுமான ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.

கம்ப்யூட்டர் திரை கண்களில் இருந்து  25 இன்ச்க்கு தொலைவில் வைத்து இருக்க வேண்டும். மானிட்டர் கண்களில் இருந்து 6 இன்ச் கீழே இருக்க வேண்டும்.

உங்கள் கண்களுக்கு நேராக ஜன்னல், மின் விளக்குகள் இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். உங்கள் கண்களுக்கு நேராக இருக்கும்  பட்சத்தில் கம்ப்யூட்டர் இடத்தை மாற்றி வைத்து கொள்ளுங்கள்..

கண்களை அடிக்கடி சிமிட்ட வேண்டும். இது கண்கள் உலர்ந்து போகாமல் பார்த்து கொள்ளும்.

கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம் - கண்களை பாதிக்கும் புதிய நோய்.. ஏன் வருகிறது? என்ன செய்ய வேண்டும்?

20-20-20 விதி - 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தொலைவில் இருக்கும் 20 வினாடிகளுக்கு பார்க்க வேண்டும். கம்ப்யூட்டரில் வேலை செய்யும் நேரங்களில் இது போன்று செய்ய வேண்டும். இது கண் தசைகளை தளர்வாக வைத்து கொள்ளும். கண்களை சுற்றி இருக்கும் ஸ்ட்ரெஸ் குறையும்.

கண் கண்ணாடிகள் - சிலருக்கு பார்வை குறைபாடு பிரச்னை இருப்பவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரை அணுகி கண் பரிசோதனை செய்து,  கண்ணாடிகளை மாற்றி பயன்படுத்துங்கள்.  இப்போது கம்ப்யூட்டர் பார்க்கும் நேரங்களில் கண்களுக்கு ஸ்ட்ரைன் ஆகாமல் இருக்க கண்ணாடிகள் அறிமுகப்படுத்த பட்டுள்ளது. கண் மருத்துவரின் ஆலோசனையுடன் அதை பயன்படுத்தலாம்.

தலைப்பு செய்திகள்

Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget