Bachelor Recipe | பயோடின், வைட்டமின், நார்ச்சத்து.. இந்த கேரட் ரெசிப்பியை உடனே ட்ரை பண்ணுங்க..
கேரட் பெரும்பாலோனோருக்கு மிகவும் பிடித்த காய்கறி ஆகும். இதன் நிறம், இயற்கையிலே இருக்கும் இனிப்பு சுவை, காரணமாக அனைவர்க்கும் பிடிக்கும்
கேரட் பெரும்பாலோனோருக்கு மிகவும் பிடித்த காய்கறி ஆகும். இதன் நிறம், இயற்கையிலே இருக்கும் இனிப்பு சுவை, காரணமாக அனைவர்க்கும் பிடிக்கும். கேரட் பச்சையாக சாப்பிட்டாலே அவ்வளவு சுவையுடன் இருக்கும். கேரட் பச்சடி, கேரட் தோசை, கேரட் இல்லாத உணவுகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்து சமையலிலும் கேரட் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும். அந்த வரிசையில் இப்போது கேரட் துவையல் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம்.
கேரட் துவையல் செய்வதற்கான தேவையான பொருள்கள்
கேரட் - 1 கப் ( துருவியது )
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4,
புளி - பாக்கு அளவு,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
நறுக்கிய இஞ்சி – சிறிதளவு
செய்முறை
- கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
- அதனுடன் கேரட் துருவலை சேர்த்துக்கு வதக்கி கொள்ளவும்.
- இஞ்சி, புளி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து வதக்கி கொள்ளவும்.
- வதக்கிய கேரட் கலவை நன்றாக ஆறிய பிறகு, மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- கேரட் துவையல் தயார்.
- இட்லி, தோசை, சப்பாத்திக்கு சிறந்த சைடிஷ் ,
- கேரட் கொண்டு இந்த வித்தியாசமான ரெசிப்பு செஞ்சு பாருங்கள்
கேரட் டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் - இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்து இருக்கிறது. இதில் வைட்டமின் கே மற்றும் பயோட்டின் ஆகிய விட்டமின்கள் நிறைந்து இருக்கிறது. இதில் கரோடெனாய்ட்ஸ் அதிகம் இருக்கிறது.
கேரட் எடுத்து கொள்வதால் பயன்கள்
- தினம் உணவில் கேரட் சேர்த்து கொள்ளலாம். கண் பார்வைக்கு சிறந்தது.
- இது உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைகிறது.மேலும் கொலெஸ்டெரோல் பிரச்சனை இருப்பவர்களுக்கு கேரட் சிறந்த நிவாரணியாக இருக்கிறது
- இது புற்று நோய் வராமல் தடுக்கிறது.
- இது குறைவான கலோரி கொண்டுள்ளதால், உடல் எடை குறிக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இதை எடுத்து கொள்ளலாம்.
யாரெல்லாம் எடுத்துக்கொள்ள கூடாது - இது இயற்கையிலே இனிப்பு சுவை மிக்க காய் ஆகும். அதனால் நீரிழிவு நோயாளிகள், இதை எடுத்து கொள்ளும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் அளவான கேரட் எடுத்து கொள்ளலாம்