இந்த 3 வகை ஜூஸ் குடித்தால் போதுமாம்... சர்க்கரை... அக்கரைக்கு போய்விடுமாம்!
சர்க்கரை வியாதி வந்துடுச்சா அப்போ, இனிமேல் தினம் பாகற்காய் ஜூஸ், பாகற்காய் பொரியல், வறுவல், என அனைத்தும் ஒரே காய் எடுத்து கொள்ளலாம், என்ற எண்ணம் வந்து இருக்கும்.
சர்க்கரை வியாதி வந்துடுச்சா அப்போ, இனிமேல் தினம் பாகற்காய் ஜூஸ், பாகற்காய் பொரியல், வறுவல், என அனைத்தும் ஒரே காய் எடுத்து கொள்ளலாம், என்ற எண்ணம் வந்து இருக்கும். ஆனால் அதில் இருக்கும் கசப்பு சுவை நினைத்தாலே பயமும் சேர்ந்து இருக்கும். விதவிதமா ஜூஸ் எடுத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
பாகற்காய் உடன் எலுமிச்சை
பாகற்காய் , உப்பு, மஞ்சள், எலுமிச்சை , தண்ணீர் ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் உப்பு சேர்த்து கொள்ளவும். பாகற்காய் தோல் நீக்காமல், விதைகளை நீக்கி விட்டு தண்ணீரில் ஊறவைக்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு பாகற்காய் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதனுடன், எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம். அதனால் கசப்பு சுவை குறைவாக இருக்கும்.
பாகற்காய் உடன் பேரிக்காய் மற்றும் ஆப்பிள் ஜூஸ்
தேவையான பொருள்கள்
பாகற்காய் - 1
உப்பு - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
பேரிக்காய் சாறு - 1/2கப்
ஆப்பிள் - 1/2 கப்
செய்முறை
பாகற்காய் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். விதைகளை நீக்கி விட்டு மிக்ஸியில் , உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து கொள்ளவும். அதை வடிகட்டி அதனுடன், பேரிக்காய் மற்றும் ஆப்பிள் சாறு மூன்றையும் ஒன்றாக கலந்து பருகலாம்.
தேன் அல்லது வெள்ளம் சேர்த்து பாகற்காய் ஜூஸ்
தேவையான பொருள்கள்
பாகற்காய் - 1
இஞ்சி - 1 துண்டு
புதினா - சிறிதளவு
உப்பு - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தேன் அல்லது வெல்லம் - தேவைக்கு ஏற்ப
செய்முறை
பாகற்காய் அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து , விதைகளை நீக்கி விட்டு, பாகற்காய், இஞ்சி, உப்பு எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். இதை வடிகட்டி சுவைக்கு ஏற்றாற்போல் தேன் அல்லது வெள்ளம் சேர்த்து குடிக்கலாம்.
இரத்தத்தில் சர்க்கரையில் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு பாகற்காய் ஜூஸ் சிறந்த நிவாரணியாக இருக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை வியாதி இருந்தால் உங்களுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் பாகற்காய் ஜூஸ் வாரத்தில் 2- 3 முறை எடுத்து கொள்ளலாம். இது போன்று வித்தியாசமாக எடுத்து கொள்ளுங்கள். கசப்பு சுவை குறைவாக இருக்கும்.
பாகற்காய் ஜூஸ் குடிக்கின்றோம் என்பதற்காக நீங்கள் ஏற்கனவே எடுத்து கொள்ளும் மருந்துகளை தவிர்த்து விடாதீர்கள். மருந்துகளும் கட்டாயம் எடுத்து கொள்ளுங்கள். மருந்துகளை குறைப்பதற்கு மருத்துவ ஆலோசனை பின்பற்றுங்கள். நீங்களாகவே மருந்துகளை குறைத்து விடாதீர்கள்