மேலும் அறிய
Advertisement
உடல் எடையைக் சோம்பு தண்ணீர் குடித்தே குறைத்துக் கொள்ளலாம்.. எப்படித் தெரியுமா?
சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் செய்கின்றது
உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்தே குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும். சோம்பு என அழைக்கப்படும் பெருஞ்சீரகம் சமையலில் நறுமணப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கும் பல்வேறு சத்துப் பொருட்கள் இதில் அடங்கியிருக்கின்றன. இது உலக அளவில் சிறந்த மூலிகைப் பொருளாக வர்ணிக்கப்படுகிறது. தெற்கு ஐரோப்பாவை தாயகமாகக் கொண்ட இவை அம்பெல்லிபெரி தாவர குடும்பத்தைச் சேர்ந்தவை. இதன் அறிவியல் பெயர் போநிகியூலம் வல்காரேவர். மத்திய கிழக்குப் பகுதிகளில் சீனா, இந்தியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. சோம்பு செடிகள் 2 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது .
சோம்பு விதைகளில் உடலை வலுப்படுத்தும் சத்துப் பொருட்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள், தாதுபொருட்கள், வைட்டமின் போன்றவை மிகுந்து காணப்படுகின்றன.பல்வேறு நோய் எதிர்ப்பு பொருட்கள் சோம்பு விதைகளில் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை காயம்பெரோல் மற்றும் குவார்சிட்டின் ஆகும். சோம்பு புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்து உடலைக் காக்க வல்லவை. சோம்பு விதைகளில் எளிதில் கரையக்கூடிய நார்பொருட்கள் அதிகமாக இருக்கின்றன. 100 கிராம் விதையில் 39.8 கிராம் அளவிற்கு நார்ச்சத்து காணப்படுகிறது, இவை உட்கொள்ளும் உணவை எளிதில் செரிக்க வைக்கின்றன. மேலும் மலச்சிக்கலை சீராக்குகிறது.
உடலுக்கு வலுவூட்டும் தாதுப்பொருட்களான தாமிரம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், செலினியம், துத்தநாகம் மற்றும் மக்னீசியம் போன்றவை சிறந்த அளவில் காணப்படுகின்றன. தாமிரம் தாது இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்ய உதவுகிறது. சோம்பு விதைகளில் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகிறது. உயிர் அணுக்கள் உற்பத்திக்கும், செரிமானத்திற்கும் இதுஅவசியம்.
இதிலுள்ள பொட்டாசியம், தாது உடற்செல்களை வழவழப்பாக வைத்திருப்பதுடன், இதயத் துடிப்பையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.வைட்டமின் ஏ, இ, சி போன்றவையும் பி குழும வைட்டமின்களான தயாமின், பைரோடக்ஸின், ரிபோபிளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துப்பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. ரொம்ப அளவில் சிறியது, இதில் சிறிதளவு உப்பு சேர்த்து உணவிற்கு பின் மெல்லுவது, வாய் துர்நாற்றம் வராமல் தடுக்க உதவுகிறது. வடைகறி, மாமிச உணவுகள், பிரியாணி, ஊறுகாய் மற்றும் ரொட்டி தயாரிக்கவும் பயன்படுகிறது.
சோம்பு விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட எண்ணெய் கை, கால், மூட்டு வலியை போக்குவதுடன் மட்டுமல்லாமல் இருமலையும் போக்கவல்லது.உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல், சோம்பு தண்ணீர் குடித்தே குறைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பலன் தாமதமாக கிடைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும். அளவுக்கு அதிகமாக பசி எடுப்பவர்களுக்கு சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும்.
சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தில் சுத்தப்படுத்தும். மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரகங்களில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும்.தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், வயிற்றுவலி நீங்கும்.
சோம்பு தண்ணீர் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற வழிவகுக்கும்.சோம்பு தண்ணீர் மெலடோனின் என்னும் மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற வழிவகுக்கும். இதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கலாம்.
சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ பணிகளையும் செய்கின்றது.நீண்ட நாட்களாகப் பசியெடுக்காமல் அவதிப்படுபவர்களுக்குக் கூட, பசி உணர்வை சோம்புத் தூண்டுகின்றது. கடினமான உணவு வகைகளையும் அலட்டல் இல்லாமல் செரிக்கவைக்கும் குணம் இதற்கு உண்டு
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion