Best Brain-Boosting Food | குழந்தைகளின் நினைவாற்றலை அதிகப்படுத்த உதவும் 5 உணவுகள்
ஒவ்வொரு பெற்றோர்க்கும், தன் குழந்தை பெரிய அளவில் சாதிக்க வேண்டும், படிப்பு, விளையாட்டு, கலை என எதில் கலந்து கொண்டாலும், முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருக்கும் இருக்கும்.
ஒவ்வொரு பெற்றோர்க்கும், தன் குழந்தை பெரிய அளவில் சாதிக்க வேண்டும், படிப்பு, விளையாட்டு, கலை என எதில் கலந்து கொண்டாலும், முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருக்கும் இருக்கும். என்ன செய்வது முதல் இடம் ஒன்று தானே இருக்கிறது. இருந்தாலும், இந்த நவீன கேஜெட் உலகத்தில் நினைவு திறன் என்பது குறைந்து விடுகிறது. ஒரு எண்ணை கூட நினைவில் வைத்து கொள்ளாமல், அனைத்தையும் அலைபேசியில் சேமித்து வைத்து விட்டு தேவையான நேரத்தில் எடுத்து பயன்படுத்தி கொள்கிறோம். இதனால் எதையும் நினைவில் வைத்து கொள்வது குறைந்து விட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும், இந்த நினைவு திறன் குறைபாட்டால் பாதிக்க படுகின்றனர்.
இப்போது நினைவு திறன் அதிக படுத்த நிறைய மெமரி நுட்பங்கள் வந்து விட்டது. ஒரு விஷயத்தை நினைவில் வைத்து கொள்ள, ஒரு செய்தியை கதை வடிவில் பேசி பார்த்து கொள்வது. இது போன்று ஒவ்வொரு பாடத்திற்கு ஒவ்வொரு விதமான நுட்பங்கள் பயன்படுத்தபட்டு வருகிறது. சில உணவுகள் இந்த நினைவு ஆற்றலை அதிக படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- முட்டை - அன்றாட உணவில் முட்டை சேர்த்து கொள்வது, நினைவு திறனை அதிகப்படுத்துகிறது. இதில் புரத சத்து, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகள் இருப்பதால், மூளை திறனை அதிக படுத்துகிறது. அதனால் அடிக்கடி உணவில் முட்டை சேர்த்து கொள்ளுங்கள்.
2. உலர் பழங்கள் - வால்நட், மற்றும் பாதாம் பருப்பு ஆகியவை மூளை திறனை அதிகப்படுத்துகிறது. இதில், வால்நட் பருப்பு பார்ப்பதற்கு மூளை வடிவத்தில் இருக்கும். இது மூளைக்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், புரத சத்துகள் அனைத்தையும் கொண்டுள்ளது. இதனால் அன்றாட உணவில் வால்நட் மற்றும் பாதாம் பருப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள். மூளை திறனை மேம்படுத்துகிறது என்று, அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. ஒரு நாளைக்கு 3- 5 எண்ணிக்கை எடுத்து கொள்வது போதுமானது.
3.மீன் - மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது மூளை திசுக்களை ஆரோக்கியமாக உருவாக்க உதவுகிறது. இந்த ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், குழந்தையின் வளர்ச்சியையும் , மூளை திறனையும் மேம்படுத்துகிறது.
4.ஓட்ஸ் - இதில் வைட்டமின் இ , துத்தநாகம், வைட்டமின் பி மற்றும் நார்சத்து நிறைந்து இருக்கிறது. இது காலை உணவாக எடுத்து கொள்வது நல்லது. இது ஒவ்வொரு நாளையும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. குழந்தைகள் மந்தமாக , மற்றும் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்தால் ஓட்ஸ் எடுத்து கொள்வது நல்லது.
5.காய்கறிகள் மற்றும் பழங்கள் - அன்றாட உணவில் குறைந்தது 2 பழங்கள், 1 காய், மற்றும் ஏதேனும் ஒரு கீரை எடுத்து கொள்வது உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவும். இது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும். மொபைல் போன் அதிகம் பயன்படுத்தி ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால் வரும் உடல் சோர்வுஆகியவற்றை போக்கும். அதனால் தினம் உணவில் காய்கள் பழங்கள் எடுத்து கொள்ளுங்கள்