மேலும் அறிய
Advertisement
எத்தனை நாள் தான் அதே டீ, காபி.? புதுசா இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!
காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடித்தால் தான் பலருக்கு இங்கே பொழுது விடிகிறது.இதற்கு சிறந்த மாற்றாக என்ன செய்யலாம். டீ , காபி குடிப்பதால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருகிறது
காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடித்தால் தான் பலருக்கு இங்கே பொழுது விடிகிறது.இதற்கு சிறந்த மாற்றாக என்ன செய்யலாம். டீ , காபி குடிப்பதால் உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.அதை தவிர்க்க இந்த டீ காபி க்கு மாற்றாக வேறு பானங்களை எடுத்து கொள்ளலாம்.
- மஞ்சள் பால் - மஞ்சள் சிறந்த ஆன்டி ஆக்சிடென்டுகளை கொண்டுள்ளது. இது ஒவ்வாமை பிரச்சனைகளை சரி செய்கிறது. இது உடலில் தொற்று நோய்கள் வராமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. மேலும், சளி, இருமல் பிரச்சனை இருப்பவர்கள் அனைவரும், டீ, காபி க்கு பதில் பாலில் மஞ்சள், மிளகு தூள் சேர்த்து பருகலாம்.
- க்ரீன் டீ - இதன் சுவை அனைவர்க்கும் பிடிப்பது இல்லை. ஒரு வித துவர்ப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது. இதை ஒரு மருந்தாக நினைத்து கொண்டு எடுத்து கொள்ளுங்கள். இப்போது இதில் பல்வேறு சுவைகள் கலந்து வருகிறது. லெமன் ,துளசி, பெப்பெர்மிண்ட் என பல பிளேவர்களில் க்ரீன் டீ கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த சுவைகளில் குடிக்கலாம்.
- சத்து மாவு கஞ்சி - பாரம்பரிய முறைகளில் வீட்டில் தயார் செய்து வைத்து சத்து மாவை, மாலை டீ, காபி பதிலாக எடுத்து கொள்ளலாம். உடலுக்கு தேவையான அணைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கிறது. மேலும் இதில் புரத சத்து நிறைந்து இருக்கிறது. குழந்தைகளுக்கு டீ, காபி, மற்ற பானங்களுக்கு பதில் இந்த சத்து மாவு கஞ்சி எடுத்து கொள்வது நல்லது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இந்த சத்து மாவு முக்கிய பங்கு வகிக்கிறது.
- சீரக தண்ணீர் - சீரகம் முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து விட்டு காலை எழுந்ததும் அந்த தண்ணீரை வடிகட்ட குடிக்கலாம். அல்லது தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சீரகம் சேர்த்து தண்ணீரை ஆற வைத்து அந்த தண்ணீர் எடுத்து கொள்ளலாம். இது அனைத்து செரிமான பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இருக்கும். வயிறு புண், நெஞ்செறிச்சல் போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு, காலை எழுந்ததும் சீரக தண்ணீர் குடிப்பது, வயிற்றில் அமில சுரப்பை சரி செய்யும்.
- துளசி டீ - துளசி டீ அல்லது துளசி கலந்த தண்ணீர் குடிப்பது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும், வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும். துளசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தும்.துளசியின் துவைக்காக தேன் சேர்த்து குடிக்கலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion