Bed Sheet : கழிவறை இருக்கையை விட போர்வைக்குள் அதிகமான பாக்டீரியாக்களா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..
கழிவறை இருக்கையில் இருப்பதை விட ஒரு மாதம் பயன்படுத்தப்படும் போர்வைக்குகள் 1 கோடிக்கு அதிகமான பாக்டீரியாக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Bed Sheet : கழிவறை இருக்கையில் இருப்பதை விட ஒரு மாதம் பயன்படுத்தப்படும் போர்வைக்குகள் 1 கோடிக்கு அதிகமான பாக்டீரியாக்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர்வை
நாள் முழுக்க வேலை செய்த களைப்பில் தூங்கலாம் என்ற தலை சாய்ப்போம். ஆனால் நாம் தூங்குவதற்கு பயன்படுத்தப்படும் போர்வையையும், தலையணை உறையை சுத்தம் செய்வோமா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. வேளைக்கு சென்றிருக்கு களைப்பில் நாம் அன்றாட அணியும் துணிகளை மட்டுமே துவைத்து கொண்டிருக்கிறோம்.
ஆனால் நாம் தினமும் உறங்குவதற்கு பயன்படுத்தப்படும் போர்வையை சுத்தம் செய்கிறோமா என்று பார்த்தால் இல்லை. குறிப்பாக குளிர்காலம், மழைக்காலம் என்றால் மாதத்திற்கு ஒரு முறை நமது போர்வைகளை துவைப்பது கூட அந்த நேரத்தில் இருக்காது என்று கூட சொல்லாம். இந்நிலையில் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் போர்வை குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
1 கோடிக்கு அதிகமான பாக்டீரியாக்கள்
அதன்படி, ஜேசன் டெட்ரோ என்ற நுண்ணுயிரியல் நிபுணரின் கூற்றுப்படி, நாம் படுக்கை விரிப்புகளில் 10 கோடிக்கு அதிகமான பாக்டீரியாக்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஒரு மாதம் பயன்படுத்தப்படும் படுக்கை விரிப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை நாம் பயன்படுத்தும் டூத் பிரஷ் ஸ்டாண்டில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. அதேபோல, 3 வாரம் பயன்படுத்தப்படும் போர்வையில் 90 லட்சம் பாக்டீரியாவும், 2 வாரம் பயன்படுத்தப்படும் போர்வையில் 50 லட்சம் பாக்டீரியாவும், 1 வாரம் பயன்படுத்தப்படும் போர்வையில் 45 லட்சம் பாக்டீரியாவும் இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
தலையணை உறை
நமது படுக்கை விரிப்பை விட தலையணை உறைகளிலும் பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதன்படி, 4 வாரம் பயன்படுத்தப்படும் தலையணை உறையில் 12 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. அதேபோல், ஒரு வாரம் பயன்படுத்தப்படும் தலையணை உறையில் சுமார் 5 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த கிருமிகளை நமது படுக்கை விரிப்புகளிலும் கொண்டு வருவதற்கு நாம்தான் பொறுப்பு. நாம் தூங்கும் போது வரும் வியர்வை மற்றும் உமிழ்நீர்தான் பாக்டீரியாக்கள் உருவாகுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு வாரமும் படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறைகளை மாற்ற வேண்டும் என்ற மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் போர்வை மற்றும் தலையணை உறைகளை துவைப்பதன் மூலம் இதனை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க