அரை ஹெல்மெட் அணிந்த போலீஸ்: அபராதம் விதித்த சக போக்குவரத்து காவல்துறை அதிகாரி!
பெங்களூரு போக்குவரத்து காவல்துறை அதிகாரி, சக அதிகாரி முழுமையான தலைகவசம் அணியாததால் அபராதம் விதித்ததை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகி, மக்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பெங்களூரு போக்குவரத்து காவல்துறையினர் விதிகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதனை பலமுறை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் அதிகாரிகள், சக அதிகாரிகள் மீது அதே அளவு விதிமீறல்களை பதிவு செய்வதைப் பார்ப்பது அரிது. இதனை மாற்றியமைக்கும் வகையில், பெங்களூருவின் ஆர்டி நகர் போக்குவரத்து காவல்துறை அதன் டிவிட்டர் பக்கத்தில், போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் முழுமையான ஹெல்மெட் அணியாததற்கு சக போக்குவரத்து காவல் துறை அதிகாரி அபராதம் விதித்ததை பதிவு செய்ததுள்ளது. "குட் ஈவினிங். ஹாஃப் ஹெல்மெட் கேஸ் பொலிஸுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என அந்த பதிவில் இடம்பெற்றிருந்தது.
Good evening sir
— R T NAGAR TRAFFIC BTP (@rtnagartraffic) October 17, 2022
half helmet case booked against police
Tq pic.twitter.com/Xsx5UA40OY
அரை ஹெல்மெட் எனப்படும் half helmet மக்கள் அணிய தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த ட்வீட் மிகவும் வைரலாகி நெட்டிசன்கள் மத்தியில் பல்வெறு தரப்பு பதில்களை பெற்றது. அதுமட்டுமல்லாமல் நெட்டிசன்கள் இந்த புகைபடத்தை பயன்படுத்தி வாகனத்தின் முந்தைய மீறல்கள், மாசு சான்றிதழ்கள் போன்றவற்றை சுட்டிக்காட்டினர். மேலும் ஒரு சிலர் இந்த டிவீட்டிற்கு பதிலளிக்கும் வகையில் காவல்துறையினர் மட்டுமல்லாமல் விதிகளை மீறும் அனைத்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளனர். இந்த டிவீட் மூலம் நாட்டில் தற்போதுள்ள ஹெல்மெட் சட்டங்கள் குறித்து காவல்துறையினரால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Awesome, not only the poor conistable, please catch officers and politicians too, they have to lead by an example. Below politician vehicle is coming on Right side of divider at McDonald signal HSR layout 29th sep 11:06 am. @hsrltrafficps pic.twitter.com/dhA9nLKBaT
— Venkat (@tvchalapathi) October 18, 2022
ஒரு தரப்பு மக்கள் இதனை வரவேற்றுள்ளனர். இது போல் சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது அரிதான செயல் என்றும், மக்கள் மத்தியில் காவல்துறை அதிகாரிகளாக இருந்தாலும் அவர்களும் விதிகளுக்கு உட்பட்டவர்களே என்பதை சுட்டிக்காட்டுகிறது என பாராட்டியுள்ளனர்.
வாகனங்களை நாய்கள் துரத்துவதன் பின்னாலான உளவியல்
அதே சமயம் மற்றோரு தரப்பினர் பெங்களூரில் அரை ஹெல்மெட் என்ப்படும் half helmet ஏராளமான மக்கள் சாலையில் அணிந்த வண்ணம் வாகனங்களை இயக்கி செல்வதாகவும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளனர், மேலும் இது வெறும் மக்களை ஏமாற்றும் விளம்பர யுக்தி எனவும் குறிப்பிட்டுள்ளனர். அனைவரும் சட்ட்த்தின் முன் சமம், அதனை கடைபிடிக்கும் வகையில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.