ஆல்கஹால் நல்லதுன்னு இனியும் உருட்டாதீங்க.. எச்சரிக்கை கொடுக்கும் புதிய ஆராய்ச்சி..
அயர்லாந்தில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையின் டாக்டர் பெத்தானி வோங் இதுதொடர்பான ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார்.
ஆராய்ச்சியின் படி, தற்போது சில நாடுகளில் பாதுகாப்பானதாகக் கருதப்படும் மது அருந்துதல் பழக்கம் இதயம் செயலிழக்கும் பிரச்னையுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஐரோப்பிய ஒன்றியம் உலகிலேயே அதிக குடிப்பழக்கம் உள்ள பகுதியாகும். ஆல்கஹாலிக் கார்டியோமயோபதி என்றழைக்கப்படும் ஒரு வகை இதய செயலிழப்பை நீண்ட கால அதிக மது அருந்துதல் ஏற்படுத்தும் என்பது நன்கு அறியப்பட்டாலும், ஐரோப்பிய மக்களில் மட்டுமே நிலவிவந்த இந்தசான்றுகள் ஆசிய மக்களிலும் தற்போது தெரியத் தொடங்கியுள்ளன எனக் கூறப்படுகிறது.
அயர்லாந்தில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையின் டாக்டர் பெத்தானி வோங் கூறுகையில், "இந்த ஆய்வு மது அருந்துவதில் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை என்பதற்கான ஆதாரத்தை சேர்க்கிறது” என்கிறார்.
மேலும் ஐரோப்பிய இதயவியல் சங்க மாநாட்டில் பேசிய அவர்,"ஆல்கஹால் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் அபாயத்தைக் குறைக்க சில நடவடிக்கைகள் தேவை. உங்களுக்குக் குடிப்பழக்கம் இல்லையென்றால் கவலை இல்லை. நீங்கள் குடித்தால், உங்கள் வாராந்திர நுகர்வு ஒரு பாட்டில் ஒயின் அல்லது மூன்றுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.அல்லது பீர் அருந்துபவர் என்றால் 4.5 சதவிகித ஆல்கஹால் உடைய அரை 500 மில்லி கேன்கள்" எனக் கூறியுள்ளார்.
இந்த ஆராய்ச்சியின் மிக முக்கிய அம்சம் மதுபானம் போன்ற ஆபத்து காரணிகள் பயன்பாட்டை பராமரிப்பது, "பாதுகாப்பான அளவுகள் பற்றிய விழிப்புணர்வு முக்கியமானது" என்று வோங் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வில் 40 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் 744 பேர், ஆபத்து காரணிகள் (எ.கா. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன்) அல்லது முன் இதய செயலிழப்பு (ஆபத்து காரணிகள் மற்றும் இதய அசாதாரணங்கள் ஆனால் அறிகுறிகள் இல்லை) காரணமாக இதய செயலிழப்பு ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். சராசரியாக 5.4 ஆண்டுகளில் மது அருந்துதல் மற்றும் இதய ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
வாரத்திற்கு 70 கிராமுக்கு மேல் மது அருந்துவது இதய செயலிழப்புக்கான அறிகுறிகள் தென்படுவது அல்லது செயலிழப்புக்கு முந்தைய நிலைக்குத் தள்ளுவது என சில பிரச்னைகளை உண்டுபண்ணுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
"குறைந்த ஆல்கஹால் உபயோகத்தின் எந்தப் பலனையும் நாங்கள் கவனிக்கவில்லை. இதய செயலிழப்பு அறிகுறிகள் இல்லாத நபர்களுக்கு அதற்கான வாய்ப்புக்ள் இருக்கும் நிலையில் அவர்களுக்கான பாதுகாப்பான ஆல்கஹால் உட்கொள்வதற்கான வரம்புகளை நாடுகள் பரிந்துரைக்க வேண்டும் என்று எங்கள் முடிவுகள் குறிப்பிடுகின்றன," என்று வோங் குறிப்பிட்டுள்ளார்.
நான் சோஷியல் ட்ரிங்கர்தான், நண்பர்களோட மட்டும்ந்தான் குடிப்பேன் எனக் காரணம் சொல்பவர்கள் கொஞ்சம் உஷாராக இருந்துகொள்ளவும்.