நீரிழிவு நோயிலிருந்து விடுபட அக்குபங்சர் மருத்துவ முறை... தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
அக்குபங்சர் மருத்துவ சிகிச்சையானது இரண்டாம் வகை நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் சிறப்பாகப் பங்காற்றுவதாகத் கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரபல பல்கலைக்கழகமான ஈடித் கோவன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், அக்குபங்சர் மருத்துவ சிகிச்சையானது இரண்டாம் வகை நீரிழிவு நோய் வராமல் தடுப்பதில் சிறப்பாகப் பங்காற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ப்ரீடயாபடீஸ்க்கு தீர்வு
ப்ரீ டயாபட்டீஸ் எனப்படும் நீரிழுவுக்கு முந்தைய நிலையில் உள்ள 3600க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அக்குபங்சர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில் அக்கு பங்சர் மருத்துவ முறையானது ஃபாஸ்டிங் பிளாஸ்மா குளுக்கோஸ், இரண்டு மணிநேர பிளாஸ்மா குளுக்கோஸ் மற்றும் கிளைகேட்டட் ஹீமோகுளோபின் போன்ற நோய் அறிகுறிகளை கணிசமாக மேம்படுத்தியது. மேலும் ப்ரீடயாபட்டீஸ் எனப்படும் நீரிழுவுக்கு முந்தைய நிலையை பெரிய அளவில் சமன்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிஎச்டி படித்தவரும், முன்னணி ஆய்வாளருமான மின் ஜாங் என்பவர் கூறுகையில், ”உலகில் வயது வந்தோரில் 11 சதவீதத்தை பாதிக்கும் நீரிழிவு நோயைத் தடுப்பதில் அக்கு பங்சர் மருத்துவமுறை சிறப்பாக செயலாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது.
மருந்து அல்லாத சிகிச்சை
சர்வதேச நீரிழிவு சம்மேளனம் 2045ஆம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட 1.3 பில்லியன் மக்கள் நீரிழிவு அல்லது முந்தைய நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிட்டுள்ளது. மருத்துவ தலையீடு இல்லை எனில், ப்ரீடயாபட்டீஸ் உள்ளவர்களில் 93 சதவீதம் பேர் 20 ஆண்டுகளுக்குள் 2ஆம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நீரிழிவு போலல்லாமல், மேம்பட்ட உணவு மற்றும் உடற்பயிற்சியை அதிகரித்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் ப்ரீடயாபட்டீஸ் தாக்கத்தில் இருந்து மீளலாம்.
ஆனால், பலர் வாழ்க்கை முறை மாற்றங்களை நீண்ட காலத்திற்கு கடைப்பிடிக்கப் போராடுகிறார்கள். இங்குதான் அக்குபங்சர் மருத்துவம் போன்ற மருந்து அல்லாத சிகிச்சைகள் மதிப்புமிக்கதாக விளங்குகின்றன.
பாரம்பரிய சீன மருத்துவம்
நீரிழிவு நோய் பெரும்பாலும் வாழ்க்கை முறை காரணிகளுடன் தொடர்புடையது என்றாலும், வாழ்க்கையின் பிற அம்சங்களின் மீதும் இது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இங்குதான் அக்குபங்சர் மருத்துவம் உதவுகிறது. தூக்கப் பிரச்சினைகள், உயர் இரத்த அழுத்தம், அதிக மன அழுத்தம் ஆகியவற்றுக்கும் இந்த மருத்துவ முறை உதவுகிறது. ஆக மொத்தம் மக்கள் தங்கள் வாழ்வை சமநிலைப்படுத்த அக்கு பங்சர் முழுமையாய் உதவுகிறது. இம்மருத்துவமுறை பாரம்பரிய சீன மருத்துவ சிகிச்சைகளையும் உள்ளடக்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!
இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்