மூங்கில் உங்கள் வீட்டின் அமைதியை பாதுகாக்கும்; வாஸ்து சொல்லுவது என்ன?
மூங்கில் செடிகள் சூழ்ந்த வாழ்விடம் உங்களுக்கு அமைதியை கொடுக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.
நம் அனைவருக்குமே மரங்கள், பூச்செடிகள் சூழ இயற்கையுடன் வாழவிடம் இருக்க வேண்டும் என்பது பெரும் ஆசையாக இருக்கும் இல்லையா? வீட்டை சுற்றி பூச்செடிகள், க்ரோட்ன்ஸ், காய்கறி செடிகள் போன்ற தாவரங்களை கொண்டு கார்டெனிங் செய்வது என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. செடிகள் மற்றும் மரங்கள் காற்றை சுத்தப்படுத்தி தூய்மையான நச்சுத்தன்மையற்ற காற்றை சுவாசிக்க உதவி செய்கிறது. போலவே, உங்கள் வீட்டு அலங்காரத்தில் உட்புற தாவரங்களைச் சேர்ப்பது வாழ்க்கையில் சில நல்ல சக்திகளை சேர்க்க , நல்ல வைப் கொடுக்க அருமையான வழியாகும். ஏனெனில் இதன் மூலம் வீட்டிற்கு மிகவும் நல்ல, அமைதியான உணர்வைத் தருகிறது. வீட்டிற்குள்ளே வளர்க்கப்படும் தாவரங்களுக்கு மருத்துவ குணங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
வாஸ்து சாஸ்திரம் படி, வீடுகளில் மூங்கில் செடிகள் வைப்பது அமைதியான சூழல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
இதன்படி, வீடுகளிலும், பணி செய்யும் அலுவலகங்களிலும் மூங்கில் செடிகளை வைத்திருப்பது நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் தருகிறது என்று நம்பப்படுகிறது. பலரும் வீட்டிற்குள் மூங்கில் வளர்ப்பது அமைதியான சூழலைத் தரும். மூங்கில் செடிகள் இன்று வீட்டை அலங்கரிப்பதற்காக பலர் உபயோகிக்கிறார்கள்.அதை வீட்டில் வைத்திருப்பது பல நன்மைகளைத் தரும். வீட்டில் மூங்கில் செடிகள் இருப்பதால், வீட்டில் உள்ள அனைத்து வாஸ்து தோஷங்களும் நீங்கும் என்று நம்ப்படுகிறது. மேலும், வீட்டில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்றும் கூறப்படுகிறது.
உங்கள் வீட்டில் அமைதி நிறைந்திருக்க வேண்டும் என்றால், மூங்கில் சிறந்த சாய்ஸ். பாசிட்டிவ் வைப்ஸ்களுக்கு , மூங்கில் செடி, உங்கள் கண்ணில்படும்படியான இடத்தில் வைக்க வேண்டும். நீங்கள் பணி செய்யும் இடத்திலும் மூங்கில் செடிகளை வைக்கலாம். இதனால் வேலையில் வெற்றியும் குடும்பத்தில் பரஸ்பர அன்பையும் மகிழ்ச்சியையும் நிரம்பியிருக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. மேலும். மூங்கில் செடிகள் இன்று வெவ்வேறான அளவுகளிலும் கிடைக்கிறது.
மூங்கில் வீட்டில் இருந்தால், உங்கள் வாழ்வில் செல்வச் செழிப்புக்கு ஒருபோதும் பஞ்சம் இருக்காது என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
மூங்கில் மரங்கள் மற்றும் செடிகளை நாம் பல நேரங்களில், காடுகளில் தான் பார்த்திருப்போம். ஆனால் தற்போது அந்த மூங்கில் செடி நம் வீட்டின் அமைதிக்கும்,மகிழ்வுக்கும் வழிவகுக்கும் என்றால் அது நமக்கு நல்லதுதானே. மேலும், மூங்கில் காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூங்கில் செடிகளை நீங்கள் தாராளமாக வீட்டிலேயே வளர்க்கலாம். உங்கள் வாழ்வின் வளமும் பெருகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்