கூந்தல் வளர்ச்சிக்கு முக்கியமான 5 டிப்ஸ் இதோ!
கூந்தல் உதிர்வது, அனைவருக்கும் இருக்கும் பழக்கம் ஆகும். கூந்தல் உதிர்வது பல்வேறு காரணங்கள் ஏற்படுகிறது. அதனால் கூந்தல் வளர்வதற்கு சில இயற்கை முறையை பின்பற்றுங்கள்.
கூந்தல் உதிர்வது, அனைவருக்கும் இருக்கும் பழக்கம் ஆகும். கூந்தல் உதிர்வது பல்வேறு காரணங்கள் ஏற்படுகிறது. அதனால் கூந்தல் வளர்வதற்கு சில இயற்கை முறையை பின்பற்றுங்கள்.
கண்டீஷனரை பயன்படுத்துங்கள் - சிலருக்கு முடி உதிர்தல், வறட்சியான முடி,முடி நுனி உடைந்து போதல், போன்ற பிரச்சனைகள் இருக்கும். இதற்கு காரணம் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் இருக்கும். அதனால் கண்டீஷனரை பயன்படுத்துங்கள். இது முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. தலை குளித்த பிறகு கண்டீஷனரை போடுங்கள்.
எண்ணெய் மசாஜ் - வெதுவெதுப்பான எண்ணையை சூடு பண்ணி தலைக்கு மசாஜ் செய்வது முடி வளர்ச்சிக்கு உதவும். முடி வேகமாக வளரவும், முடி ஆரோக்கியமாக வளரவும் இது உதவும். முடி உதிர்தல் பிரச்சனை குறையும். முடி வேரில் இருந்து ஆரோக்கியமாக வளர்வதற்கு உதவும். தேங்காய், ஆலிவ் அல்லது லேவேண்டர் எண்ணெய் , நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றை கொண்டு மசாஜ் செய்யலாம். இது முடி வளர்ச்சிக்கு உதவும்.
இரவில் தலையை சீவுங்கள் - இரவில் தலையை சீவுவதால் தலையில் இரத்த ஓட்டத்தை அதிக படுத்துகிறது. அதனால் முடி வளர்ச்சி அதிகமாகும். சிந்தடிக் பிரிஸ்ட்ல்(synthetic bristles) பிரஷ்களைக் கொண்டு தலையை சீவினால், முடியில் அதிகம் சிகை உண்டாக்கி டேமேஜை ஏற்படுத்தும். அதனால் சரியான போர் பிரிஸ்ட்ல்( boar bristle brush) சீப்புகளை பயன்படுத்தி, தலை சீவுவது, உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. நீங்கள் தூங்குவதற்கு முன் முடி சீவுவது, இரத்த ஓட்டத்தை அதிக படுத்தும். அதனால் முடி வளர்ச்சிகு உதவும்.
ஈரமான கூந்தலுடன், முடியை கட்டி வைக்காதீர்கள் - பெண்கள் பெரும்பாலோனோர், தலை குளித்த பிறகு, தலையில் துண்டை கட்டி வைத்து இருப்பார்கள். இதனால் முடி உதிர்தல் அதிகமாகும். தலை குளித்த பிறகு, முடியை சாஃப்டான துண்டை வைத்து, துடைத்து கொள்ளுங்கள். முடியை துடைப்பது, சுத்தமாக காய வைப்பது முடி வளர்ச்சிக்கு உதவும்.
முட்டை மாஸ்க் - முட்டையின் வெள்ளை கருவை எடுத்து அதனுடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து தலை முடியில் மாஸ்க் ஆக போட்டு கொள்ளுங்கள். மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு சுத்த படுத்தி கொள்ள வேண்டும். முட்டையில் புரத சத்து நிறைந்து இருக்கிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து முழுக்க முட்டையில் இருந்து கிடைக்கும். வாரம் ஒரு நாள் முட்டை மாஸ்க் பயன்படுத்தலாம்.
இவை அனைத்தும் வெளிப்புறமாக செய்ய வேண்டியது. இதே போல், முடி வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் இ மற்றும் புரதம் சத்து நிறைந்த உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். இது முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது