வாக்கிங் போறீங்களா? வீட்டுக்கு வந்ததும் இதை மட்டும் சாப்பிட்டா போதும்: எடையை ஈசியாக குறைக்கலாம்
உடற்பயிற்சிக்கு பின்பு, அதற்கான அதிக பலன்களை பெற வேண்டுமானாலும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
புரோட்டீன் நிறைந்த ஸ்மூத்திஸ்:
புரோட்டீன் நிறைந்த ஸ்மூத்திஸ் என்பது உடற்பயிற்சி செய்த பிறகு, உட்கொள்ளக்கூடிய ஆரோக்கியமான பானங்களாகும். கடுமையான உடற்பயிற்சி செய்யும் நபர்கள் தங்கள் தசைகளுக்கு நிறைய அழுத்தம் கொடுக்கிறார்கள். இதன் விளைவாக சில நேரங்களில் தசைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. வொர்க் அவுட்டிற்குப் பிறகு ஒரு நபர் செய்யும் முதல் விஷயம் தண்ணீர் குடிக்க வேண்டும். வொர்க்அவுட்டிற்குப் பிறகு குடிநீருக்கு பதிலாக புரதச்சத்து நிறைந்த ஸ்மூத்திஸ்களுடன் எடுத்துக் கொள்வதன் மூலம் தசைகளை வலுவாக்கவும், பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும்.
உங்களுக்காக இதோ புரோட்டீன் நிறைந்த 5 ஸ்மூத்திஸ்.....
சாக்லேட் பீனட் பட்டர் ஸ்மூத்தி:
சாக்லேட் பீனட் பட்டர் ஸ்மூத்தியை தயாரிக்க ஐந்து பொருட்கள் வேண்டும். அவை வாழைப்பழம், பீனட் பட்டர், பால், கோகோ பவுடர் மற்றும் வெண்ணிலா சாறு ஆகும்.
அல்மோன்டா பனானா ஸ்மூத்தி:
அல்மோன்டா பனானா ஸ்மூத்தி தயாரிப்பது மிக எளிமையான செய்முறை. மேலும் இது அதிக சுவையுடையது. இதை அதிக நபர்கள் விரும்பி அருந்துவர். இந்த ஸ்மூத்தியை தயாரிக்க பாதாம், வாழைப்பழம், வெண்ணிலா சாறு, பேரீச்சம்பழம் மற்றும் பால் ஆகியவை தேவை.
அவகாடோ ஸ்பினாச் ஸ்மூத்தி:
அவகாடோ ஸ்பினாச் ஸ்மூத்தியை தயாரிக்க வாழைப்பழம் கீரை, தேன், வெண்ணிலா சாறு, மற்றும் ஓட்ஸ் வேண்டும். இவை உடலுக்கு நல்லது மற்றும் தசைகளை வலுவாக்க உதவுகின்றன.
மாம்பழம் மற்றும் தேங்காய் ஸ்மூத்தி:
மாம்பழம் மற்றும் தேங்காய் ஸ்மூத்தி மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. இந்த பானத்தை தயாரிக்க மாம்பழங்கள், தயிர், தேன் மற்றும் தேங்காய் பால் ஆகியவை தேவைப்படுகிறது. அனைத்து பொருட்களையும், மென்மையான பானம் கிடைக்கும் வரை மிக்ஸியில் அரைத்தால், ஸ்மூத்தி தயாராகிவிடும்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
Calculate The Age Through Age Calculator
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்