Acid Reflux Solution : அசிடிட்டி பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா ? இதை ட்ரை பண்ணுங்க..
ஒரு கப் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பருகினால் செரிமான பிரச்சனை மற்றும் நெஞ்செரிச்சலுக்கான சிறந்த தீர்வாக இருக்கும்.
அசிடிட்டி :
அசிடிட்டி அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் என்பது உலகில் பொதுவாக எதிர்கொள்ளும் இரைப்பை குடல் பிரச்சனைகளில் ஒன்றாகும். இது குறிப்பிட்ட சில உணவுப்பொருட்கள் ,மது அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் அதிக மசாலாப் பொருட்களின் பயன்பாடு போன்றவற்றால் உண்டாகிறது.வயிற்றுப்பகுதியில் எரியும் உணர்வுகள், நெஞ்செரிச்சல், மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை இது உண்டாக்கும். இதனை உனடியாக தடுக்க கீழ்கண்ட குடிபானங்களை பயன்படுத்தலாம்.
தேங்காய் தண்ணீர்
தேங்காய் நீர் உங்கள் சுரப்பிகளை ஹைட்ரேட் செய்வது மட்டுமல்லாமல், சோடியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை உங்கள் உடலுக்கு வழங்குகிறது. மேலும் உங்கள் வயிற்றின் PH ஐ சமநிலைப்படுத்த உதவும் பொட்டாசியம் போதுமான அளவு இருப்பதால், எரியும் உணர்வுகளை கட்டுப்படுத்துகிறது. மேலும் அமில வீக்கத்தால் ஏற்படும் அசௌகரியத்தையும் குறைக்கிறது.
சர்க்கரை இல்லாத ஸ்மூத்தீஸ்:
நீங்கள் காய்கறிகள் மற்றும் பழ ஸ்மூத்திகளை முயற்சி செய்யலாம் அதில் சர்க்கரையை சேர்க்க கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நார்ச்சத்து அதிகம் உள்ள ஓட்ஸை சேர்த்து ஸ்மூத்தீஸ் தயார் செய்யலாம்.ஏனென்றால் வெறும் வயிற்றில் சில நேரங்களில் அசிடிட்டி ஏற்படலாம்
புதினா :
புத்துணர்ச்சியூட்டும் மூலப்பொருளாக அறியப்படுவது புதினா, ஆசிட் ரிஃப்ளக்ஸைத் தணிக்கும்.நெஞ்செரிச்சல் அறிகுறிகளை எளிதில் அகற்றக்கூடிய இயற்கையான குளிரூட்டியாக செயல்படுகிறது. சில புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து, நாள் முழுவதும் பருகினால் எரிச்சல் , அசிடிட்டி , அலர்ஜி உள்ளிட்ட பிரச்சனைகள் குணமாகும்.
குளிர்ந்த பால்
குளிர்ந்த பால் உட்கொள்வது அமிலத்தன்மைக்கு சிறந்த இயற்கை தீர்வுகளில் ஒன்றாக இருக்கும். பாலில் காணப்படும் கால்சியத்தின் அளவு, வயிற்றில் அதிகப்படியான ஹைட்ரோகுளோரிக் அமிலம் சுரப்பதைத் தடுக்கிறது, அமில வீக்கத்தின் வேறு ஏதேனும் வலி அறிகுறிகளில் இருந்தால் அதற்கு உடனடி தீர்வு கிடைக்கிறது. எந்த சர்க்கரையும் சேர்க்காத குறைந்த கொழுப்புள்ள குளிர்ந்த பால்தான் அருந்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எலுமிச்சை, இஞ்சி மற்றும் துளசி
எலுமிச்சை மற்றும் இஞ்சி இரண்டும் செரிமான பிரச்சனைக்கான தீர்வை வழங்கும் ஆற்றல் கொண்டவை. அவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளையும் போக்கவல்லது. இதேபோல், துளசியில் அல்சர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது இரைப்பை அமில சுரப்புகளின் அளவைக் குறைக்கிறது மற்றும் செரிமான அமைப்பைத் தூண்டுகிறது, அதே நேரத்தில் அமிலத்தன்மையின் அறிகுறிகளை உடனடியாக நீக்குகிறது. எலுமிச்சம்பழம், இஞ்சி மற்றும் துளசி அனைத்தையும் ஒன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து, ஒரு கப் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பருகினால் செரிமான பிரச்சனை மற்றும் நெஞ்செரிச்சலுக்கான சிறந்த தீர்வாக இருக்கும்.