Kitchen Hacks : இனி கிச்சனிலேயே ரொம்ப நேரம் செலவிட வேணாம்.. இதோ டிப்ஸ்..
சமையலறையில் அதிக நேரம் செலவிட வேண்டாம் என நினைப்பவர்களுக்கான டிப்ஸ் இதோ!
சமையலறை எல்லாருக்குமான இடம். உணவு தயாரிப்பது என்பது பாலினம் சார்ந்த வேலை அல்ல. சாப்பிடும் அனைவரும் சமைக்கலாம். பிரபல அனிமேஷன் திரைப்படமான Ratatouille-ல் Gusteau கதாபாத்திரம் சொல்லும் வசனம் ' Anyone Can Cook'.. எல்லாருக்கும் சமையல் கலை வசப்படும்.
சிலருக்கு சமையலறை பக்கம் செல்லவே விருப்பம் இருக்காது. அதற்கு பல காரணங்கள் இருக்காலம். தொடர்ச்சியாக ஒரு குடும்பத்திற்கு சமையல் செய்வது வருபவர்களுக்கும் அது ஒருவித அயர்ச்சியை கொடுக்கும். ருசியாகவும் சமைக்க வேண்டும். ஆனால், சமையலறையில் அதிக நேரம் செலவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கான சில டிப்ஸ்..
சுத்தம் செய்யாமல் இருப்பது..
சமைக்கும்போது அதே நேரத்தில் சுத்தம் செய்யாமல் இருப்பது இந்த பழக்கம் நீங்கள் சமையலறையில் வேலை செய்யும் விதத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சமையலறையில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்திற்கும் முதலில் தனி தனியாக இடத்தை வைத்திருப்பது முக்கியம். அடுத்து. நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சமையலறை பொருட்களையும் பயன்படுத்திய உடனேயே அவற்றின் இடத்தில் வைக்க வேண்டும். அப்படிச் செய்தால், முதலில் குழப்பம் இருக்காது. இல்லையெனில்,எது எங்கே இருக்கிறது என தேடுவதில் அதிக நேரம் செலவிட வேண்டியதாக இருக்கும்.
ஃபிரிட்ஜ் சுத்தமாக இருக்கட்டும்
குளிர்சாதனப் பெட்டியில் தேவையற்ற பொருட்கள் இருப்பின் அவற்றை நீக்கி விடவும். சமைத்த உணவுகள் எல்லாவற்றையும் ஃப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டாம். காய்கறிகள், இறைச்சி, பழங்கள், பால், நட்ஸ், மசாலா உள்ளிட்டவற்றை வைக்கும் பழக்கம் இருக்கலாம். இருந்தாலும், அவற்றை எவ்வளவு காலம் வைக்க வேண்டும் என்பதில் கவனமுடன் இருக்க வேண்டும். உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், பழைய, காலாவதியான பொருட்களை ஃப்ரிட்ஜில் இருந்து வெளியேற்றுவது நல்லது. நீங்கள் இனி சாப்பிடவே மாட்டீர்கள் என்ற உணவு பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.
- தேவையான பொருட்கள் மட்டுமே சமையலறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
- சமையறைக்கு தேவையான பொருட்கள் மட்டுமே சமையலறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
- மளிகை வாங்கி வந்து அதை அதற்குரிய இடங்களில் வைப்பது என்பதே பெரிய வேலை. அதை முழுமையாக செய்து விட்டால் கொஞ்சம் வேலை எளிதாகிவிடும.
- எல்லாருக்கும் வசதியாக சமையலறை இருந்துவிடாது. அதற்கேற்றவாறு நாம் அதை மாற்றி அமைக்க வேண்டும்.
- சமையலறையில் அவசியமானது, அவசியமில்லாதது என பிரித்து நிர்வகிக்க வேண்டும்.
- எல்லாற்றிற்கும் தனி தனியே இடம் ஒதுக்குவது எவ்வளவு முக்கியமோ அதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தம் செய்யவும் வேண்டும்.
- சமையலறை கழிவுகளை உடனே சுத்தம் செய்வது நல்லது.
- ஒரு வேளை உணவு சமைத்தவுடன் அதனால் ஏற்படும் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுவத்து நேரத்தை மிச்சமாக்கும்.
- உணவுப் பொருட்களை திறந்தபடியோ, அப்படியே வைத்துவிட வேண்டாம். ஏதாவது ஒரு டப்பாவில் வைப்பது உகந்தது. சிலவற்றிற்கு தனித்தனியே டப்பா வைத்திருப்போம். சிலவற்றிற்கு இருக்காது. ஒரே டப்பாவில் திறந்த பாக்கெட்களை வைத்துவிடவும்.
- என்ன உணவு தயாரிக்க போகிறோம் என்பதை எல்லா வேளைக்கும் திட்டமிடுவது சிரமமாக இருந்தாலும் அதை செய்வது சமையல் அறையில் அதிக நேரத்தை செலவிடாமல் தடுக்க முடியும்.