Air Conditioner : வீட்டில் ஏசி பயன்படுத்துறீங்களா? நீங்க உடனடியா தெரிஞ்சுக்கவேண்டியது இதுதான்..
ஏ.சி. பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகளின் தொகுப்பு.
வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி ஏர் கண்டிஷனருக்கு Air conditioners (ACs) முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும், கோடைக்காலம் வந்துவிட்டாலே வீடுகளில் ஏ.சி.யின் பயன்பாடு அதிகரிக்கும். வெயிலின் வெக்கையை குறைத்து குளிர்ச்சியான சூழலை தருவதால் பெரும்பாலானோர் வீட்டில் ஏ.சி. இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், இந்த எலக்ட்ரானிக் கேட்ஜெட் பற்றி நமக்கு என்ன தெரியும்? ஏ.சி, பழுதாகும்போது, அதைச் சரிசெய்து கொள்வோம். ஆனால், அது எதனால் பழுதானது என்பது பற்றியெல்லாம் எல்லாரும் ரொம்ப கவனம் எடுத்துக் கொள்ள மாட்டோம் இல்லையா? ஆனால், நாம் ஏ.சி.யை பற்றி சில விஷயங்களைத் தெரிந்து கொள்வது ஏ.சி.யின் பாதுகாப்பிற்கும், வாழ்நாளை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும்.
ஏ.சி. பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய பத்து விஷயங்களைக் காணலாம்.
உங்களுடைய ஏ.சி. 5 ஸ்டார் ஆக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஏ.சி.யின் குளிர்விக்கும் திறனும், செயல்பட எடுத்துக்கொள்ளும் ஆற்றலும் மாறிக்கொண்டே இருக்கும். அதாவது, உங்கள் வீட்டில் இருப்பது 5 ஸ்டார் ஏ.சியாக இருந்தாலும் வாங்கிய நாளில் இருந்து தொடர்ந்து வரும் ஆண்டுகளும் 5 ஸ்டார் ரகத்திலேயே இயங்கும் என்பது உண்மையானதில்லை. வாங்கி ஓராண்டு ஆகி, அடுத்த ஆண்டு அதன் குளிர்விக்கும் திறன் குறைந்துவிடும்.
ஏ.சி. பயன்படுத்தும் அறையில், மின்விசிறியை குறைந்த வேகத்தில் சுற்றவிடுவது நல்லது. இதனால், அந்த அறை சீக்கிரமாக குளிராகிவிடும். ஆனால், ஏ.சி. பயன்படுத்தும்போது, மின்விசிறியை ஃபுல் ஸ்பீடில் சுற்ற விட்டால், ஏ..சி.யில் இருந்து குளிர்வருவதற்கு வெகு நேரம் எடுக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஏ.சி.யின் டெம்பரேச்சரை குறைவாக வைத்தால் அறை சீக்கிரத்தில் குளிர்ந்துவிடும் என்றும், குறைவான டெம்ப்ரேச்சரில் வைத்தால்தான் ஏ.சி. நல்ல குளிர்வான காற்றைத் தரும் என்று நம்பப்படுகிறது. ஆனால், அது உண்மையில்லை. Bureau of Energy Efficiency (BEE)-யின் கூற்றுப்படி, 24 டிகிரி என்பதே மனித உடல் தாங்கக் கூடியா சராசரி வெப்பநிலை ஆகும்.
ஏ.சி. பயன்படுத்தும் போது, வெளிக்காற்றை உள்வாங்கி விடும் ஃபேன் மெஷினை நாம் அனைவரும் வீட்டிற்கு வெளியே சூரிய ஒளிபடும்படிதான் வைப்போம். ஆனால், சூரிய ஒளியில் ஏ.சி.யை வைத்தால், உங்கள் அறை குளிர் நிலையை அடைய வெகு நேரம் ஆகும். ஏனெனில், ஏ.சி. சூரிய ஒளியால் மிகுந்த சூட்டுடன் இருக்கும். இதனால், நீங்கள் ஏ.சி.யை ஆன் செய்யும்போது குளிர்ந்த காற்று வராது. லேசான சூடோடே காற்று வரும்.
Dirty AC filters, ஏ.சி.யில் உள்ள தூசுகளை உள்ள ஃபில்டர்களை தூய்மையாக வைத்து கொள்ளவேண்டும். அதாவது, இதில் தூசு படியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில், ஃபில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி, தூசி படிந்திருந்தால், ஏ.சி.யில் இருந்து வரும் குளிர்ந்த காற்று தடுக்கப்படும்.
பொதுவாக, ஓர் அறையில் ஏ.சி. பொருத்தும்போது, அதன் பரப்பளவை பொறுத்து, ஏ.சி. டன் ரகங்கள் தேர்வு செய்யப்படும். அனால், இது மட்டும் ஏ.சி.யின் குளிர் காற்றை நிர்ண்யிக்காது. அதாவது, ஓர் அறையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை பொறுத்துதான்,அந்த அறையின் குளிர்நிலையும் இருக்கும். உதாரணமாக, ஓர் அறையில் அதிக மனிதர்கள் இருந்தால், அந்த அறையில் ஏ.சி.யின் குளிர் குறைந்தே இருக்கும்.
சிறந்த ஏ.சி.க்கு அடிக்கடி சர்வீஸ் செய்ய தேவையில்லை என்று சிலர் சொல்வார்கள். ஆனால், அது உண்மையில்லை. முறையாக, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏ.சி.யை சர்வீஸ் செய்வது அவசியமானதாகும். குளிர்காலத்தில் ஏ.சி.யை பெரிதாக பயன்படுத்தவில்லை என்றால், வெயில் காலத்தில் பயன்படுத்த தொடங்குவதற்கு முன்பு, ஏ.சி.யை சர்வீஸ் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.
ஏ.சி.யை ரிமோட் கன்ரோல் கொண்டு மட்டுமே ஆஃப் செய்யக்கூடாது. அதேபோல, ரிமோட் கன்ரோலில் ஏ.சி.யை ஆன் செய்தாலும், அது சென்சார் மூலம், ஏ.சி.க்கு தகவல் கொடுக்கும். ஏ.சி.யில் உள்ள பட்டன் தன் வேலையை செய்ய தொடங்கும். அப்போதுதான், உண்மையில் ஏ.சி. இயங்க தொடங்கும்.
தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஏ.சி.க்கு தனியே ஸ்டெபிளைசர் தேவையில்லை என்பது கருத்தாக இருக்கிறது. ஆனால், அப்படியில்லை, voltage stabiliser என்பது வோல்டேஜை சமாளிக்கும் பணியை செய்கிறது. மின்சாரம் பாயும்போது ஏற்படும் ஏற்ற இறக்கங்களை நிர்வக்கும் பணிக்கு ஸ்டெபிளைசர் மிகவும் அவசியம்.
உயர்ந்த மின் அழுத்ததை தாங்காத ஸ்விட்ச் மற்றும் கேபிள் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. மேலும், தரமற்ற ஸ்டெபிளைசரை பயன்படுத்தக் கூடாது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்