Group 5A Notification: அரசு ஊழியர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 5A Notification 2022: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-5 ஏ தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-5 ஏ(Group-5a) தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தலைமை செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட 161 காலிப் பணியிடங்களுக்கு வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 18-இல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன பணி இடங்கள்?
Assistant Section Officer in Secretariat (Other than Law and Finance Department) - 74
Assistant Section Officer in Secretariat (Finance Department) - 29
Assistant in Secretariat (Other than Law and Finance Department) - 49
Assistant in Secretariat (Finance Department) - 9
என்ன தகுதி?
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல, மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஏற்கெனவே அரசு ஊழியராகத் தேர்வு பெற்று, குறைந்தது 5 ஆண்டுகள் இளநிலை உதவியாளர் (Junior Assistant) அல்லது உதவியாளராகத் (Assistant) தமிழக அரசின்கீழ் பணிபுரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
பிரிவு அலுவலர் பதவிக்கு, 01.07.2022 அன்று தேர்வர்களுக்கு அதிகபட்சமாக 35 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள் மற்றும் எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது 40 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
உதவியாளர் பதவிக்கு, 01.07.2022 அன்று தேர்வர்களுக்கு அதிகபட்சமாக 30 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள் மற்றும் எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
ஊதியம்
பிரிவு அலுவலர் - ரூ.36,400 - ரூ.1,34,200 (Level-16)
உதவியாளர் - ரூ.20,000- ரூ.73,700 (Level-9)
எழுத்துத் தேர்வு
டிசம்பர் 18ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை - பொதுத் தமிழ் தேர்வு
அதே நாளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை - பொது ஆங்கிலம் தேர்வு
தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள: