TNPSC: ரூ.2.11 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி... விண்ணப்பித்துவிட்டீர்களா?
TNPSC Recruitment 2023 : ரூ.2.லட்சம் வரை மாத ஊதியத்துடன் தமிழ்நாடு அரசுப்பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ!
![TNPSC: ரூ.2.11 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி... விண்ணப்பித்துவிட்டீர்களா? TNPSC Direct Recruitment For Post Combined Library State Subordinate Services Examination Check Vacancies Important Dates TNPSC: ரூ.2.11 லட்சம் வரை மாத ஊதியத்தில் தமிழ்நாடு அரசுப் பணி... விண்ணப்பித்துவிட்டீர்களா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/18/b0515991bbdcb6c5b03a1de78d3a35f81676720848765333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு பொதுப் பணி துறையில் உள்ள சுற்றுலா அலுவலர் பதவிக்கான நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு இம்மாதம் 23- ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
சுற்றுலா அலுவலர்
மொத்த பணியிடங்கள் : 3
கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பயணம் அல்லது சுற்றுலா துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுற்றுலா துறையில் முதுகலை அல்லது M.Phil படித்திருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
சுற்றுலா பிரிவில் டிப்ளமோ படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி படிப்புகளில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணியிடங்கள் நிரப்புவதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 32 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது.
ஊதிய விவரம்:
மாதம் ரூ.56,100 முதல் ரூ. 2,05,700 வரை ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
எழுத்துத் தேர்வு - ரூ.200
தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்:
ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்:
இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
எப்படி விண்ணப்பிப்பது?
www.tnpscexams.in / www.tnpsc.gov.in- ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
கவனிக்க
* தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
* பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.
* இது போன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் எவ்வித இழப்புக்கும் தேர்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது.
* இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார். விண்ணப்பதாரர், தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்பொழுது, ஏதேனும் தவறு ஏற்படின், தாங்கள் விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ, பொதுச்
சேவை மையங்களையோ குற்றம் சாட்டக் கூடாது. விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்ட இணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர், நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.02.2023
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://tnpsc.gov.in/Document/english/03_2023_TO_ENG.pdf-என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)